தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை



விலங்குகள் எல்லாமே ஐய்ந்து அறிவுடைவையா?சிந்திப்பதுதான் ஆறாம் அறிவா?விலங்குகள் சிந்திப்பது இல்லையா?அவற்றிற்கு தாய்,பிள்ளை போன்ற எண்ணங்கள் உண்டா?
1. தன்னுடலால் மட்டும் உணர்வது முதலாம் அறிவு. (எ.கா. செடி, கொடி, தாவரங்கள்)

2. உடல் மற்றும் நாக்கு இவற்றால் உணர்வது இரண்டாம் அறிவு. (எ.கா. சில கடல்வாழ் உயிரினங்கள்)


3. உடல், நாக்கு மற்றும் மூக்கு இவற்றல் உணர்வது மூன்றாம் அறிவு. (எ.கா. ஊர்வனங்கள்)

4. உடல், நாக்கு, மூக்கு மற்றும் கண் இவற்றால் உணர்வது நான்காம் அறிவு. (எ.கா. பூச்சியினங்கள்)

5. உடல், நாக்கு, மூக்கு, கண் மற்றும் காது இவற்றால் உணர்வது ஐந்தாம் அறிவு. (எ.கா. விலங்கினங்கள்)

6. இவை ஐந்தையும் தாண்டி, சிந்தனை என்பதன் துணை கொண்டு உணரத்தலைப்படுவது ஆறாம் அறிவு. (எ.கா. மனிதர்கள் சிலர்)

இந்த உணர்வுநிலைகள் தாண்டிய ஒன்று அல்லது அனைத்தும் கடந்த அல்லது அனைத்தும் அறிந்த ஒரு நிலைதான் ஏழாம் அறிவாக இருக்குமோ?

விலங்குகள் சிந்திப்பதில்லை. தான் உயிர்த்திருக்க தேவைப்படும் எளிய செயல்பாடுகளை மேற்கொள்ளும் அவ்வளவே. அவைகள் எல்லாம் அவற்றிற்குள் பொதிந்து வைக்கப்பட்டுள்ளவைகள்.

மனிதனுக்கும் அப்படித்தான், அது பொதிந்து வைக்கப்பட்ட ஒன்று. Programmed என்று சொல்லலாம்.

ஆனால் அதற்குப்பின், நல்லது எது கெட்டது எது என்று அலசி ஆராய்ந்தும் தன்னிச்சைப்படி எதைவேண்டுமானாலும் செய்யும், அதுவும் அதன் விளைவுகள் இன்னதென்றே உணர்ந்து செய்யும் செயல்பாடுகளே ஆறாம் அறிவின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும்.

தாய் பிள்ளை போன்ற எண்ணங்களும் கிடையாது. அப்படியானால் தாய்விலங்கு தன் குட்டிகளை நெருங்கினால் கோபப்படுகின்றது என்றால் அதுவும் பொதிந்து வைக்கப்பட்ட ஒன்று என்றுதான் சொல்வேன்.

பொதுவாக ஒவ்வொரு உயிருக்கும் இரண்டே இரண்டு அடிப்படைச் செயல்பாடுகள் இருக்கும். ஒன்று உயிர்த்திருப்பது. இரண்டு இனத்தைப் பெருக்குவது. அதற்காக தேவைப்படும் எதையும் செய்ய வேண்டும் என்பதுதான் இயற்கையின் ஏற்பாடு.

ஒரு எறும்பைத் தொட்டால் அது இங்கும் அங்கும் ஓடும். ஏன் தான் உயிர்த்திருக்கவேண்டும் என்ற எண்ணம். கையால் பிடித்து விட்டாலோ, அதன் சக்திக்கேற்ப இறுதி முயற்சியாகக் கடித்து விடும்.

நாமும் அப்படித்தான், கோழையாக இருப்பவனாக இருந்தாலும், இழப்பதற்கு உயிர்தான் கடைசியாக இருக்கின்றது என்கிற நிலையில் அவனுக்கும் நிச்சயம் வீரம் வரும். போராடத்தான் செய்வான்.

ஆனால், இந்த சிந்தனை என்கிற ஆறாவது அறிவு மேம்பட்டதனால், இயற்கையை மீறி தன்னுயிரைப் போக்கிக்கொள்ளும் ஆற்றலையும் பெற்றுவிட்டான். அதற்கான எளிய வழிமுறைகளையும் அறிந்துகொண்டுவிட்டான்.

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -