தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

ஈழம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பிரபாகரன் உயிருடன்?

April 25, 2014.
தலைவர் பற்றி மகிழ்ச்சி செய்தி"
"விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன்
இருக்கிறாரா? இல்லையா?’ என்கிற கேள்வி உலகம் முழுவதும் உள்ள
தமிழர்களின் கேள்வியாக உள்ளது.
Posted by தமிழ் வேங்கை

உறங்காமல் காத்தான்.

மண்னையும், மொழியையும், மக்களையும் காத்த பெருந்தலைவன் பிரபாகரன்! மாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு
பேசியது. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே
Posted by தமிழ் வேங்கை

விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல: இத்தாலி.

ரோம், மார்ச். 1–
கடந்த 2008–ம் ஆண்டு தமிழ் தேசிய செயல் வீரர்கள் இத்தாலியில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரித்து வழங்கினர். இது சர்வதேச பயங்கரவாத தடை சட்டத்துக்கு எதிரானது என தமிழ் தேசிய செயல்வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது கடந்த 2010–ம் ஆண்டில்
Posted by தமிழ் வேங்கை

தமிழக மாணவரின் போராட்டத்துக்கு ஆதரவு...

Jaffna-Uni
முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் விடுதலைக்கு இந்திய மத்திய அரசு போட்டிருக்கும் முட்டுக்கட்டையைக் கண்டித்தும் இவர்களை விடுதலை செய்யக் கோரியும் சென்னையில் இன்று திங்கட்கிழமை(24.02.2014) மாணவர்களால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் சமூகம் பூரண ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இந்தப் போராட்டத்துடன் தாங்கள் உணர்வுபூர்வமாகப் பங்கெடுப்பதாகவும் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Posted by தமிழ் வேங்கை

அன்ரன் பாலசிங்கம்!

என்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு! வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்!
தன் தாய் மண்ணையும், தாயக மக்களையும், தனது தாயக மக்களின் விடுதலையையும் தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்த அறிவுச்சுடர், அகன்ற சமுத்திரங்களுக்கும் உயர்ந்த மலைகளுக்கும் பாயும் பெருநதிகளுக்கும்
Posted by தமிழ் வேங்கை

இலங்கையில் இனப்படுகொலை !

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை ! போர்க்குற்றம் அல்ல ! 

போர்க்குற்றம் என்றால் இருநாடுகளுக்குள் நடந்திருக்கவேண்டும் அப்படியா நடந்தது.
Posted by தமிழ் வேங்கை

தமிழீழதேசியதலைவர் உயிருடன் இருப்பதாக தகவல்.

தமிழீழ தேசிய தலைவர் புலனாய்வு பிரிவு போராளிகளுடன் உயிருடன் இருப்பதாக விடுதலை புலிகளின் உயர்மட்டத்தில் இருந்து  தகவல்கள் கிடைத்துள்ளன. 

வன்னி நிலப்பரப்பை முற்று முழுதாக சுற்றிவளைத்து தாக்குவதற்காக தமிழீழ தேசிய தலைவர் தாக்குதல் திட்டத்தை வகுத்து தளபதிகளுக்கு தலைவர் அத்திட்டத்தை விளங்கப்படுத்திய பின்பு தளபதிகள் விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகளுடன் அத் தாக்குதல் திட்டம் பற்றி விவரித்து கொண்டிருக்கும் போது. இந்திய சிங்கள படைகளுடன் போர் அந்த இடத்திலையே வெடித்துள்ளது.



ஆனந்தபுரத்தில் ஒன்று கூடிய தளபதிகள், போராளிகள் வன்னியை சுற்றி வளைத்து பாரியதொரு தாக்குதல் திட்டத்தை போராளிகளுக்கு விளங்கப்படுத்தி கொண்டிருக்கும் வேளையில் இந்திய, சிங்கள ஓநாய்கள் தளபதிகள் போராளிகள் ஒன்று கூடிய இடத்தை சட்லைட் மூலம் தெரிந்து கொண்டு அந்த இடத்தை நோக்கி வான்வெளி தாக்குதல்கள் உட்பட தரைவெளி தாக்குதல்களையும் ஆரம்பித்தார்கள்.


மூன்று முறை முன்னேறி வந்த இந்திய சிங்கள ஓநாய் படைகளை விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகள் களமாடி அந்த இடத்தில் இருந்து கிட்ட தட்ட 10 கிலோமீற்றர் வரை பின் நகர்த்தினார்கள்.
 
வான்வெளி தாக்குதல்கள், செல் குண்டு தாகுதல்களிற்கு மத்தியிலும்
 ஓநாய் படைகளுக்கு எதிராக பாரியதொரு முறியடிப்பு சமரை மேற்கொண்டு பல போராளிகளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்திருந்தார்கள் விடுதலைப்புலிகளின் சிறப்பு படையணி போராளிகள்.

மூன்று முறை முன்னேறி வந்த இந்திய, சிங்கள ஓநாய் படைகளை திரத்தி ஓட ஓட விரட்டி அடித்த விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகள் மீது ஒரு சிறு நேர இடைவெளியின் பின்பு இந்திய, சிங்கள படைகள் விடுதலை புலிகளுடன் நேருக்கு, நேர் மோதி வெல்ல முடியாது என்கிற உண்மையை உணர்ந்த பின்பு தங்கள் உண்மையான சுய ரூபத்தை காட்டியுள்ளார்கள்.


அதாவது விடுதலை புலிகளின் சிறப்பு படையணி போராளிகள் மீது இந்த
 உலகத்தில் தடை செய்யப்பட்ட குண்டுகளான நச்சு வாயு குண்டுகளை வீசி இல்லாது அழித்தொழித்தார்கள் இந்திய,சிங்கள் கோழை படைகள். 

இந்த களத்தில்
 கிட்ட தட்ட விடுதலை புலிகளின் தாக்குதலில் இந்திய,சிங்கள கோழை படைகள் ஐய்யாயிரத்திற்கு மேலான கோழைகள் சாவடைந்துள்ளதாக அன்று விடுதலை புலிகளின் ஊடாக அமைச்சு தெரிவித்திருந்தது.

இந்த சமர்க்களத்தின் பின்பு விடுதலை புலிகளின் இழப்பானது பல போராளிகள் உட்பட தளபதிகள் என பல பேரை இழந்து இருந்தார்கள். பல ஆயிரக்கணக்கான மக்கள் தினம் தினம் இறந்து கொண்டிருக்கையில் ஒரு பக்கம் போராளிகள் சிங்கள் இராணுவம் மீது தாக்குதல் நடத்தி கொண்டிருக்க இன்னொரு பக்கம் மருத்துவ போராளிகள், தமிழீழ காவல்துறை காயம்பட்ட மக்களை காப்பாற்றி கொண்டிருந்தார்கள்.


ஆனால் புலனாய்வு பிரிவு படை போராளிகள் மட்டும் தலைவரை காப்பாற்றும் நோக்கோடு பல திட்டங்களை புலனாய்வு பிரிவு தளபதிகளுடன் திட்டத்தை வகுத்து கொண்டிருந்தார்கள்.
 ஆனால் தலைவர் இதற்கு மறுப்பு பல தடவை தெரிவித்திருந்த போதும் அதை தளபதிகள் ஏற்று கொள்ளவில்லை  பல வாக்குவாதங்களிற்கு அப்பால் தான் தமிழீழ தேசிய தலைவருக்கு மயக்க மருந்து கொடுத்தே மே 10ம் திகதிக்கு முன்னமே தமிழீழ தேசிய தலைவரை வன்னியிலிருந்து கடல் மூலமாக பல நூறு புலனாய்வு பிரிவு போராளிகளுடன் கரும்புலி படகுகள் கடலில் சீறி பாய்ந்து கொண்டு இருக்கையில் கடலில் இந்திய, சிங்கள கடல் படைகள் கடலில் சுற்றி திரிந்த போதும் அவர்களின் கண்ணில் மண்ணை தூவி விட்டு தமிழீழ தேசிய தலைவரை வேறு ஒரு நாட்டிற்கு கடல் மூலமாக கடத்தி கொண்டு சென்றுள்ளார்கள்.

தேசிய தலைவரின் கட்டளைகளுக்கு ஏற்ப இறுதி வரை பல ஆயிரம் போராளிகள் சிங்கள இராணுவத்திற்கு எதிராக போராடி மடிந்தார்கள்.
 

இவர்களின் கனவை நிறைவேற்றுவது உலகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனின் கடமை ஆகும்.


விடுதலை புலிகளின் வேவு படையணி போராளிகளால் உயிரோடு பிடிக்கப்பட்ட இந்திய இராணுவம்.


விடுதலை புலிகள் சிங்கள படைகளின் ஒரு இராணுவத்தளம் மீது தாக்குதல் தொடுக்க போகின்றார்கள் என்றால் அந்த இராணுவ தளத்தை ஒரு தடவைக்கு பல தடவை அந்த இராணுவ தளத்தினுள் சென்று அங்கே எந்த இடத்தில் எந்த ஆயுதம் இருக்கிறது அந்த இரணுவத்தளத்தில் எத்தனை இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள். அந்த இராணுவ தளத்தின் மீது தாக்குதல் தொடுத்தால் வேறு இராணுவ தளத்தில் இருந்து இராணுவம் எவ்வளவு நேரத்தில் எவ்வளவு இராணுவம் தாக்குதல் நடத்த போகும் தளம் மீது வருவார்கள் என்ற சகல கணிப்பையும் எடுத்து செல்வார்கள் தாக்குதல் நடத்த போகும் தளபதிகள், போராளிகளிடம்.


2006ம் ஆண்டு சிங்கள படைகள் வன்னி மீதான தாக்குதலை ஆரம்ப்பித்திருந்தார்கள். விடுதலை புலிகளின் முக்கியமான ஒரு சில இடங்களும் சிங்கள இராணுவத்தின் கைகளில் வீழ்ந்தது. அந்த இடங்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டி முடிவு எடுக்கப்படுகிறது.
 

வேவு படை போராளிகளும் ஆயத்தமாகிறார்கள்
 சிங்களம் புதிது புதிதாக அமைத்து இருக்கும் இராணுவம் தளத்தின் மீதான வேவு சம்மந்தப்பட்ட விடயங்களை எடுக்க சிங்கள இராணுவ தளத்தினுள் ஊடுருவுகிறார்கள். 

சிங்களம் புதிது புதிதாக அமைத்திருந்த இராணுவ தளத்தினுள் ஊடுருவிருந்த வேவு படை போராளிகள் அங்கு நின்ற ஒரு இராணுவத்தை உயிருடன் பிடித்து வருகிறர்கள்.


சிங்கத்தின் குகைக்குள் சென்ற புலிகள் அங்கு நின்ற இராணுவத்தையே உயிருடன் பிடித்து காடுகள் வழியாக கொண்டு செல்கிறார்கள் தளபதிகளிடம்.
 

அதிர்ச்சி அடைந்த வேவு படை போராளிகள் அவர்களிடம் சிக்கியது இந்திய இராணுவம். இந்திய இராணுவம் சிங்கள் இராணுவ உடை அணிந்து சிங்கள இராணுவ களமுனையில் நின்ற போது வேவு படையணி போராளிகளால் கடத்தி செல்லப்பட்டார்.
 

புலனாய்வு போராளிகளால் விசாரிக்கப்பட்ட போது புலிகளுக்கும், சிங்கள இராணுவத்திற்கும் சண்டைகள் ஆரம்பமாகி ஒரு சில மாதங்களில் மன்மோகன்சிங் இலங்கை வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது மன்மோகன்சிங்குடன் வந்த ஆயிரக்கணக்கான இந்திய கோழை படைகள் மன்மோகன்சிங் போகும் போது அவருடன் திரும்ப செல்லவில்லை என்றும் அவருடன் வந்த ஆயிரக்கணக்கான இராணுவமும் சிங்கள படைகளுடன் விடுதலை புலிகளுடன் மோதுவதற்கு களமுனைக்கு அனுப்பப்பட்டதாக அந்த இந்திய இராணுவம் விடுதலை புலிகளால் விசாரிக்கப்பட்ட புலனாய்வு பிரிவு படை போராளிகளுக்கு தெரிவித்துள்ளார்...


தமிழீழத்தில் களத்தில் போராடிய தளபதிகள் , போராளிகள் என பல பேர் தற்போது புலம்பெயர் நாடுகளில் இலை மறை காயாக வாழ்ந்து வருகிறார்கள் தமிழீழ தேசிய தலைவரின் கட்டளையை எதிர் பார்த்து கொண்டு.




நாம் ஒரு உன்னத இலட்சிய பாதையில் பயணித்து கொண்டிருக்கிறோம். அதை சென்றடையும் பாதை மாறலாமே தவிர நாம் செல்லும் இலக்கு மாறாது...
Posted by தமிழ் வேங்கை

வீரம் செறிந்த வன்னியின் வரலாறு !


வெட்டி நாறி மலையை, வெட்டி நாறி விகாரையாக மாற்ற யாரோ அண்மையில் முயற்சி செய்திருந்தனர். வன்னி என்றதும் எம் இயதக் கதவுகளைத் தட்டித் திறப்பது வீரம்.
ஒல்லாந்தர் கோட்டைகளை வென்று, வாட்கொடி ஏற்றி, எந்த ஏகாதிபத்திற்கும் அடிபணியாது பீரங்கிகளுக்கெதிராக. வாட்களை ஏந்திப் போராடி வீர மரணமடைந்த மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம், அவன் தன் மறவைக் கேட்டு நஞ்சை உண்டு மடிந்த காதலி குருவிச்சி நாச்சியின் வீரம் அறுவர் சேர்ந்து ஆண்ட வன்னி வள நாட்டை அவர்கள் அறுவரும் தமிழ் நாட்டிற்கு தலயாத்திரை சென்ற போது, கைப்பற்றப் போர்தொடுத்த அரசனிற்கு எதிராக அவ் அறுவர் துணவியரும் பணிப்பெண் ஒருவருமாக எழுவரும் ஆண்வேடமிட்டு போர்கோலம் ப10ண்டு களம் சென்று சமராடிய வீரம் என்பது போன்ற வரலாறுகளைக் கொண்டிருக்கும் வன்னி மண் தன்னகத்தே பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகளைக் சொல்லக்கூடிய பல பொக்கிஷங்களையும் கொண்டுள்ளது என்பது யாவருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

எனவே யாவரும் அவற்றைத்தெரிந்து கொள்வதன் மூலம் இனிவரும் காலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற அவாவிலேயே இக் கட்டுரையை எழுத விழைந்துள்ளேன். வன்னி மண்ணில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் கண்ணி வெடிகளும் தோட்டாக்களுமே பதில் சொல்லிக் கொண்டிருக்கும். இன்றைய நிலையில் இக் கட்டுரை தேவையான என நீங்கள் கேட்கலாம். இன்றைய சூழ்நிலையில் இத்தகைய ஆய்வுகள் சாத்தியப்படாத ஒன்றாக உள்ள போதிலும் இனிவரும் காலங்களில் அது சாத்தியப்படலாம். அப்படியான ஒரு சூழ்நிலை உருவாகும் போது அவ்வரலாறுகளை வெளிக் கொண்டு வர விளையும் சமகால புத்திஜிவிகளிற்கு முன்பு கண்டறியப்பட்ட சில தகவல்களைக் கடத்துவதே எனது நோக்கமாகும். இதில் வரும் எந்தக் தகவலும் என்னால் கண்டறியப்பட்டவை அல்ல.

இதை உனது சொந்தக் கட்டுரை என்பதை விட பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த, பல்வேறு ஆசிரியர்களினதும், தொல்பொருள் ஆய்வாளர்களினதும் கட்டுரைகளின் தொகுப்பு என்று சொல்வதே சரியாக இருக்கும்.
வன்னி மண் இன்று வடபுலத்தே ஆனையிறவையும் தென்புலத்தே அனுராதபுரத்தையும் கிழக்கு மேற்குத் திசைகளில் இந்து சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்ட நிலப் பரப்பாகச் (வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள்) சுருங்கி விட்ட போதிலும், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையே உள்ள நாடு வன்னி வள நாடு என வழங்கப்பட்டது. கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, கொட்டியாரம், யால பாலுகமும் மேற்கேயுள்ள புத்தளம் முதலியனவும் முற்காலத்தில் வன்னி நாட்டைச் சேர்ந்திருந்தன. பின்னர் டச்சுக்காரர் காலத்தில் வன்னியின் தெற்கு எல்லையாக அரிப்பு ஆறும், காலு ஆறும் இருந்தன. இப்படியாக, வளம் கொழித்து விளங்கிய வன்னி நாடு இன்று தன் பெரும் பகுதியை காடுகளுக்குள் தொலைத்து விட்டு, சோகங்களையே சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. பட்டினிச் சாவுகளும் அங்கு பாதம் பதிக்கத் தொடங்கி விட்டன. ஆனால் ஈழத்தின் உணவுக் களஞ்சியம் எனப் போற்றப்படும் செந்நெற் களனியாக விளங்கிய வன்னி மண் மீண்டும் செழிக்க வேண்டும்.

முதற்கண் வன்னி என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை நோக்கி அப்பாற் செல்வது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
வன்னி என்றால் நெருப்பு எவனும் பொருள் தமிழ் இலக்கியங்களில் வழங்கி வருகிறது. எனவே வன்னியர்கள் அக்கினி குலத்தின் வழிவந்தவர்கள் என்ற கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கது. அந்த வன்னியர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற மண் வன்னி என்றழைக்கப்பட்டது.

எவருக்கும் அடங்கிப் போகாத குணமும் இரத்தத்தில் ஊறிய வீரமும் கொண்டவர்களே வன்னியர்களாவர். இனி வடக்கே யாழ்ப்பாண மன்னர்க்கோ தெற்கே அனுராதபுர மன்னர்களான வன்னியர் தம் குடியிருப்புக்கள் கட்டு (இன்று முத்தையன் கட்டாக மருவி விட்டது) *****************************************************************************************************
Posted by தமிழ் வேங்கை

செக்க நிறத்திலே..


ஏறுது பார் கொடி ஏறுதுபார்
ஏறுது பார் கொடி ஏறுதுபார் - இங்குஏறுது பார் கொடி ஏறுதுபார் - தமிழ் ஈழத்தின் வேதனை தீர்த்த 
கொடி - 
எட்டு திக்கிலும் மானத்தைச் சேர்த்த கொடி
காலத்தை வென்றுமே நின்ற கொடி
புலி காட்டிய பாதையில் சென்ற கொடி
Posted by தமிழ் வேங்கை

உலகை ஆண்ட மிகப்பெரிய சக்தி தமிழினம்.

அடுத்தவன் எழுதியதைக் குற்றம் சொல்லத்தான் தெரியுமா? தமிழனின் பெருமையை உணர்த்தும் விதத்தில் உங்களால் ஒரு காப்பியத்தை படைக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பியவர்களும் அப்போது உண்டு. அத்தகையவர்களின் வாயை அடைக்கும் விதத்தில் புலவர் குழந்தை அவர்களால் படைக்கப்பட்டதுதான் இராவண காவியம். வால்மீகி, கம்பர், துளசிதாசர் இன்னும் பலர் எழுதிய இராமாயணங்களில் உள்ள செய்திகளையே அடிப்படையாகக் கொண்டு, இராவணன் மீது சுமத்தப்பட்ட பழியைத் துடைக்கும் மாற்றுக் காப்பியத்தைப் படைத்தார் புலவர் குழந்தை. அவரது படைப்பு, கற்பனைப் பாத்திரமான இராவணனின் பழியை மட்டும் துடைக்கவில்லை. நெடிய பாரம்பரியம் கொண்ட தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமைகளையும் மீட்டெடுத்தது. இலக்கியத்தின் இலக்கு எதுவாக இருக்கவேண்டுமோ அதனை உணர்ந்து செய்யப்பட்டதே இராவண காவியம் எனும் பெருங்காப்பியம்
Posted by தமிழ் வேங்கை

தலைவன்பாய்ச்சல்கள் தொடரட்டும்,

அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்...
1970ம் ஆண்டு நவம்பர் மாதம் 23ம் திகதி யாழ்ப்பாணத்தில் `தமிழ் மாணவர் பேரவை' தனது ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தியது. திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அரசு தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை தரப்படுத்தியதே அப்பேரணி நடத்துவதற்குக் காரணாகும்.

அதனை அடுத்து பாடசாலைகளுக்குச் சென்று விளக்கவுரை அளித்து வந்தேன். வல்வை-சிதம்பராக் கல்லூரியில் முதல் முதலாக தம்பியைப் பார்க்கிறேன். அடுத்து, வல்வெட்டித்துறை ரேவடிக் கடற்கரையில் அவர் சார்ந்த இளைஞர்களுக்கு தமிழர் எதற்காக ஆயுதப்போராட்டத்தைத் தொடங்கவேண்டும் என்பதையும், சிங்களவர்களுக்கு முன்பே தமிழர்கள் இந்நாட்டின் பூர்வீக குடிகள் என்பதனையும், அவர்கள் தமது சுயநிர்ணய உரிமையை தாமாகவே நிலைநாட்டிக் கொள்ளவேண்டும் என்பதனையும் விளக்கினேன். இன்றைய தமிழ்த் தலைர்கள் மாவட்டசபை என்றும் மாகாண சபை என்றும் பேசுகிறார்கள். அதுவல்ல எமக்குத்தேவையானது.

நாம் எமது சுயநிர்ணய உரிமையை ஈழத்தில் நிலைநாட்ட வேண்டும். அதற்குரிய ஒரே வழி சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக நாம் ஆயுதம் தூக்க வேண்டும் என்று விளக்கம் கொடுத்தேன். அதற்காக நாம் எம்மைத் தயார்ப்படுத்த வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டேன். 1971 ஏப்பிரல் இரண்டாம் வாரம், `சேகுவேரா கிளர்ச்சி' என்று எம்மவரால் அழைக்கப்பட்ட ஜேவிபி கிளர்ச்சியின் உச்சக்கட்டம். யாழ்-கல்வியங்காட்டுக்கு என்னைத் தேடிவந்த தம்பி மிகவும் துடிதுடிப்புடன் அதேவேளை நாம் உடனே ஏதாவது செய்ய வேண்டும் என்றார். அத்துடன் யாழ்பாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களை எடுக்க வேண்டும் என்று தனது யோசனையையும் முன்வைத்தார்.

ஏப்பிரல் 4ம் திகதி மாலை இலங்கை முழுவதுக்குமான அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது. அன்று கண்டியில் இருந்த நான் குருணாகல் வழியூடாக கொழும்பு சென்று 10ம் திகதி இரவு விமானமூலம் யாழ்ப்பாணம் வந்தடைந்தேன். அதற்கடுத்த நாள் தான் தம்பி என்னைச் சந்தித்த நாள். குருநாகல் பொலீஸ் நிலையத்தாக்குதலில் சிங்கள இளைஞர்களின் உடல்கள் அங்கும் இங்கும் சிதறிக் கிடப்பதைக் கண்டதையும், கொழும்பில்-பம்பலப்பிட்டியாவில் உபதீச றோட்டில் கடைசியாக உள்ள மாடி வீட்டில் தங்கி இருக்கையில், இரவு வந்த இராணுவத்தினரும் பொலிசாரும் அங்கிருந்த சிங்கள இளைஞர்களைப் பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலையத்துக்குக் கூட்டிச்சென்று தம்மைத் தாக்க வந்த `கிளர்ச்சிக்காரர்' எனக்கூறி வரிசையாக நிற்கவைத்து சுட்டுக்கொன்றதையும் தம்பிக்கு எடுத்துக் கூறினேன்.

சிங்களவர்களைச் சிங்களவர்களே கொலை செய்வது எமக்கு பெரிதல்ல. பொலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்களை எங்கே கொண்டு வைப்பது? அதைவிட நாம் எங்கே மறைந்திருப்பது? அவ்வளவு தூரம் நாங்கள் வளர்ந்திருக்கவில்லை என்பதை விளக்கினேன். அவ்வேளையில், `ஜேவிபியினர்' தென்பகுதியைக் கைப்பற்றி விட்டார்கள், அதனால் தமிழர்களுக்கு ஆபத்து என்று யாழ்ப்பாணத்தில் ஒரு கதை பரவி இருந்தது. அதனை மறுத்த நான், நிலைமைகளை நேரில் பார்த்து வந்துள்ளேன், நாம் அமைதியைக் கடைப்பிடித்தாலே போதுமென்று விளக்கினேன். எனது பதில்கள் அவரைச் சமாதானப்படுத்தியது என்றே இன்றும் நம்புகின்றேன். ஏனெனில், விடுதலைப்புலிகள் கடந்துவந்த கரடுமுரடான பாதையும் - கடக்க இருக்கும் பாதையையும் நன்கு திட்டமிட்டு, தூரப் பார்வையுடன் செயல்படுவதொன்றே அதனை நிரூபிக்கின்றது.

தமிழை மீட்டுவதுபோல் தம்பியையும் மீண்டும் மீண்டும் மீட்டலாம். இப்போது இது போதும். ஈழத் தமிழர் வரலாற்றில் சங்கிலிய மன்னனும், பின்பு பண்டார வன்னியனும் வாளெடுத்த கதைகள் எமக்குத் தெரியும். ஆனால் பிரபாவின் பரிணாமத்தின் பின்புதான் நவீன ஆயுதங்களும், புதிய யுத்த முறைகளையும் தமிழினம் முதல் முதல் காண்கிறது. ஆயுதம் எடுத்தவன் எல்லாம் தமிழ் ஈழ விடுதலைக்காகத்தான் என்று இளைஞர்களையும், மக்களையும் ஏமாற்றி மண்ணோடு மண்ணாய் போன வரலாறு எங்களுக்குத் தெரியும். ஆனால் பிரபாகரன் எடுத்த ஆயுதம் தமிழ் ஈழத்தை அடைவதற்குத்தான் என்று தமிழ் மக்களும், தமிழ் இளைஞர்களும் அணிவகுத்து நிற்கின்றனர். உலக வரலாற்றில் விடுதலை இயக்கங்கள் பலதோன்றி இனவிடுதலைப் போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றன. அவற்றை எல்லாம் காலம் பதிந்து வைத்திருக்கிறது.

தமிழ் ஈழ விடுதலைப்புலிகளும் அதற்கு விதிவிலக்கல்ல. சமகால அரசியல் கோட்பாடுகளுக்கு ஏற்ப, தமிழர் மத்தியிலும் பல இயக்கங்கள் தோன்றி மறைந்தன. சனநாயக நீரோட்டத்தில் கலந்தவை - கலைந்தவை இரண்டையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் தமிழினம் வாழும் மட்டும் துரோகிகள் வாழத்தான் வேண்டுமா? தமிழீழம் என்ற புனிதப் பயணத்தில் தளம்பாத தம்பிகளுடனும், தோள்கொடுக்கும் தளபதிகளுடனும் பயணித்துக்கொண்டிருக்கும் தலைவன் நீ பாய்ச்சல்கள் தொடரட்டும், அலைகள் ஆர்ப்பரிக்கட்டும்.

தமிழீழம் இப்படித்தான் அமையவேண்டும் என்ற திட்டமிட்ட கட்டமைப்பு, நிர்வாகப்புதுமை, நீதித்துறையின் நேர்மை, கல்வியில் பல்துறை வளர்ச்சி, தொழில் பயிற்சிப் பட்டறைகள் என்பன ஒரு புதிய ஆட்சிமுறைக்கு வழி வகுக்கின்றது என்பதை அறியுமா இவ்வுலகம். முடியாட்சி தொடக்கம் சனநாயகம் வரையிலான நெறிமுறைகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால் தமிழன் வழி தனிவழிதான் என்பதை உலகம் உனது காலத்தில் கண்டு களிக்கத்தான் போகிறது. தம்பி! தலைவா!! தமிழினம் உன்னை நம்பி இருக்கின்றது. நீ காட்டும் வழியில் வெற்றி நடைபோடுகிறது. ஐம்பதிலும் நேர்நின்று நடக்க ஆயிரமாயிரம் மாவீரர்கள் வழி சமைப்பார்கள். வாழ்க வளமுடன் என வாழ்த்தி முடிக்கிறேன்.

பொ.சத்தியசீலன்.

Posted by தமிழ் வேங்கை

மாவீரர் எழுச்சி நாட்கள் 25 -27


ஆரம்ப நாள் காலை 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து மாவீரர் எழுச்சி நாட்கள் கொண்டாட்டம் ஆரம்பமாகும். தமிழீழம் முழுவதும் எழுச்சிக் கோலம் பூண்டு பொலிவுடன் விளங்கும். அனைத்துத் தமிழீழ மக்களும் அலங்கரிப்பு நிகழ்ச்சியிலும் வீரவணக்க நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார்கள். வேறு களியாட்டங்கள் கொண்டாட்டங்கள் நடைபெறமாட்டாது. தேவையற்ற கேளிக்கைகள் வேண்டத்தகாத சூழ்நிலைகள் மறைந்துவிடும். மதுச்சாலைகள் மூடப்பட்டு மது பாவிப்பதை நிறுத்திவிடுவார்கள். வீடுகள் தோறும் விடுதலைக் கீதங்கள் ஒலிக்கும். மக்கள் பிரிவு பிரிவாக அமைப்புக்கள் ரீதியாக ஆக்கபூர்வ வேலைத் திட்டங்களிலும் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர்.

பாடசாலைகள்

ஆசிரியர்கள் மாவீரரின் மாண்பினையும் மாவீரர் நாளின் மகிமையையும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தெளிவினை ஏற்படுத்துவார்கள். பாடசாலைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
 நவம்பர் 25 ஆம் நாள் காலை 9.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலும்இ பாடசாலைகளில் வீரவணக்கக் கூட்டங்கள் கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். மாவீரர் நினைவாக சமூக சேவைகளிலும் ஈடுபடுவர். மாவீரருக்கு மலர் வணக்கம் செலுத்தும் பணியினை மாணவர்கள் பொது மக்களும் பொது நிறுவனங்களும் முழுமையாக இணைவதில் தேசியப்பற்று உரமேற்றப்படுகிறது.

Posted by தமிழ் வேங்கை

புரியாத புதிராய்.. தேசியத்தலைவர்

உலக இராணுவ மேதைகளின் புரியாத புதிராய் விரியும் தேசியத்தலைவர் பிரபாகரன்.  இன்று உலகின் கண்களுக்கு புலப்படாத - புரிபடாத பல விடயங்கள் இப்பரந்த பூமியெங்கும் இறைந்து கிடக்கிறது. அவற்றுள் போரியல் சார்ந்து முக்கியமானதும் முதன்மையானதாகவும் தமிழர் சேனைகளான தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரம் பார்க்கப்படுகிறது. உலகின் படைத்துறை ஆய்வாளர்கள், இராணுவ மேதைகள், உளவுத்துறையினர், இராணுவ
Posted by தமிழ் வேங்கை

தளபதி கேணல் சங்கர்.


தமிழர்களின் வான்படை வரலாறு ஆனது கேணல் சங்கர் அவர்களின் பெயருடன் ஒட்டி இணைந்தது. விடுதலைப்புலிகள் விமானப் படையணி ஒன்றைத் தொடங்கியபோது அதன் தளபதியாக கேணல் சங்கர் நியமிக்கப்பட்டிருந்தார்.

கனடாவின் விமானப் பொறியியல் கல்லூரியில் தனது வான்படைக்கான கற்கைநெறியை நிறைவுசெய்த கேணல் சங்கர் அவர்கள் பின்னாளில் உலகமே வியந்த
வான்படையணியை உருவாக்குவதில் அத்திவாரமாக இருந்தார்.
Posted by தமிழ் வேங்கை

லெப். கேணல் திலிபன்.

1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள்.


தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன்
Posted by தமிழ் வேங்கை

தலைவரைப் புகழ்ந்த சிங்களச்சிப்பாய்.

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் ஆட்சி வன்னியில் நீடித்தால் அங்கு எந்தவிதமான சீர்கேடுகளும் நடந்திருக்காது என்று சிங்களப் படைச் சிப்பாய் ஒருவர் ஒப்புக்கொண்ட உண்மைச் சம்பவமொன்றை வவுனியாவைச்
Posted by தமிழ் வேங்கை

புரியாத புதிர்


முல்லைத்தீவு நகரம் இந்தியஇராணுவ முற்றுகைக்குள் சிக்கியிருந்த காலம்.
நகரிலிருந்து பிரிந்துசெல்லும் ஒவ்வொரு வீதியின் தொடக்கச் சந்தியிலும் பாரிய இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. வீதிச்சோதனைகளும் வீதிக்கண்காணிப்புகளும் பலமாக இருந்தன.

அவனுடைய குடும்பம் சின்னாற்றங்காட்டில் குடியேறி பல ஆண்டுகள் கடந்திருந்தன.

தொடக்க நாட்களில் அந்த ஊரின் சூழல், இடைவெளியை ஏற்படுத்தியபோது சில

Posted by தமிழ் வேங்கை

ராஜிவ் கொலை தொடர்பில் விடுதலைப்புலிகள்.


ராஜிவ்காந்தி கொலை தொடர்பில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு கொஞ்சம்கூட தொடர்பு காணப்படவில்லை என ரஸ்சியாவின் முன்னணி ஏடு தெரிவித்துள்ளது. ராஜிவ்காந்தி கொலையின் பின்னணியில் சில உத்தரவுகளை ரஸ்யா நாட்டு உளவுத்துறை SVR பிறப்பித்தது எனவும் கூறப்பட்டுள்ளது.

ரஸ்யா நாட்டின் பிரபல ஏடு Moskovskij Komsomolets
Posted by தமிழ் வேங்கை

விடுதலைப் புலிகள் “தீவிரவாதிகளா”?

“தீவிரவாதிகள்” என்று விமர்சித்து கொச்சைப்படுத்துபவர்களே…!உங்கள் சுயமூளையுடன் சற்றுசிந்தியுங்கள்..!

உலகம் தோன்றிய காலம் முதல் இன்று வரையும் உலகில் எந்த விடுதலை அமைப்புக்களும் விடுதலைப் புலிகள் போல்
Posted by தமிழ் வேங்கை

விடுதலைபுலிகளின் உளவுத்துறை.

தோற்றமும் அதன் எழுச்சியும்.  
விடுதலைபுலிகளின் உளவுத்துறையின் கட்டமைப்பானது வல்லரசு நாடுகளின் உளவுத்துறைக்கு நிகாரானதாக அமைந்த ஒன்றாகும். பல நாட்டு இராணுவத்துக்கு வயிற்றில் புலியை கரைத்த விடயங்களில் ஒன்று புலிகளின் விமானங்கள் மற்றது புலிகளின் மிக பலமான உளவு அமைப்பாகும்.
Posted by தமிழ் வேங்கை

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -