தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

மருத்துவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொப்பை குறைய..

இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் 
பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும்.
Posted by தமிழ் வேங்கை

மங்கள ஆரத்தி - விஞ்ஞான நலன்!!

தமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமானது, ஆரத்தி எடுக்கும் நடைமுறை. ஆரம்ப காலத்தில் இருந்து இன்று வரை பின்பற்றப்படும் இந்த நடைமுறை வெறும் சடங்குக்காக செய்யப்படுவதில்லை.
Posted by தமிழ் வேங்கை

பாதத்துக்கு பாதுகாப்பு

பாதத்துக்கு பாதுகாப்புஎத்தனை கிலோ எடையானாலும், அத்தனையும் தாங்கித் தளராத நடைபோட நமக்குப் பெரிதும் உதவும் பாகம், பாதம். பாதத்தைப் பராமரிக்க 'பளிச்’ டிப்ஸ் தருகிறார் மதுரை தோல் மருத்துவர் பிரபாகரன். வாரம் ஒரு முறை பாத நகங்களை நன்றாக வெட்டி, சுத்தம் செய்யவேண்டும். நக ஓரங்களில் ஊக்கு, ஊசியால் சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். ஸ்க்ரப்பர் அல்லது காட்டன் துணியின் முனையை வெதுவெதுப்பான நீரில் நனைத்துப் பாதங்கள் மற்றும் நகங்களைச் சுத்தப்படுத்த வேண்டும்.செருப்பு அணியாமல்போனால், கல், முள் போன்றவை நம் கால்களைக் காயப்படுத்திவிடும். இதனால் விரல்களில் நகச்சுத்தி வரலாம். எலுமிச்சைப் பழத்தில் மஞ்சள் கலந்து பத்துப்போடுவதன் மூலம், நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் கல், மண் படிந்துவிட்டால், நல்லெண்ணெய் தோய்த்தத் திரியை விளக்கில் காட்டி, மிதமான சூடில் கால் விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். அழுக்கு தானாக வெளியே வந்துவிடும்.காலை மற்றும் இரவில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஐந்து நிமிடங்கள் நனைக்கவும். அது புத்துணர்வைத் தருவதுடன் பாதங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.மென்மையான தோலில் தயாரிக்கப்பட்ட செருப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், அது பாதத்தைப் பதம் பார்த்துவிடும்.குழந்தைகளுக்கு தரமான காட்டன் சாக்ஸ்களையே பயன்படுத்தவும். சாக்ஸ் அணியும்போது உட்புறம் ஏதாவது கூரான துகள்கள் சிக்கியுள்ளதா என்று பரிசோதனை செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்.நல்ல காற்றோட்டமான செருப்புகளை அணிய வேண்டும். பாதத்தில் புண், வெடிப்பு பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். மருதாணி இலையை விழுதுபோல் நன்கு அரைத்து, வெடிப்பு உள்ள இடங்களில் தினமும் தடவிவந்தால் வெடிப்பு நீங்கும்.இரவில் படுக்கப்போவதற்கு முன்பு சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு போட்டுப் பாதங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பிறகு, பழைய டூத்பிரஷால் பாதத்தை நன்றாக சுத்தம்செய்து, ஈரம் போகத் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். பாத வலி குறைந்து, தூக்கம் தழுவும்.எத்தனை கிலோ எடையானாலும், அத்தனையும் தாங்கித் தளராத நடைபோட நமக்குப் பெரிதும் உதவும் பாகம், பாதம். பாதத்தைப் பராமரிக்க வாரம் ஒரு முறை பாத நகங்களை நன்றாக வெட்டி, சுத்தம் செய்யவேண்டும். நக ஓரங்களில் ஊக்கு, ஊசியால் சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். ஸ்க்ரப்பர் அல்லது காட்டன் துணியின் முனையை
Posted by தமிழ் வேங்கை

தூதுவளை.

பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை.(Solanum trilobatum)

சித்தர்கள் உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகையில் உள்ள தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது உலோக உபரச உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு
Posted by தமிழ் வேங்கை

ஆண்களுக்கு கேரட் முக்கியமா??

ஆண்கள் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!! ஆண்கள் தினமும் ஆப்பிளை சாப்பிடுகிறார்களோ இல்லையோ, கேரட்டை தவறாமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் கேரட்டை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வந்தால்,
Posted by தமிழ் வேங்கை

சாப்பிட்ட உடன் செய்யக்கூடாதவை..

சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப் பெரிய கெடுதலை விளைவிக்கும்.

சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது.
Posted by தமிழ் வேங்கை

மருதா‌ணி‌யி‌ன் மரு‌த்துவக் குண‌ம்.

சிலரு‌க்கு கழு‌த்‌திலு‌ம், முக‌த்‌திலு‌ம் கரு‌ந்தேம‌ல் காண‌ப்படு‌ம். இத‌ற்கு ந‌ல்ல கை மரு‌த்துவ‌ம் உ‌ள்ளது.

மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது ‌கு‌ளிய‌ல் சோ‌ப்பை‌ச் சே‌ர்‌த்து அரை‌த்து பூ‌சி வர ‌விரை‌வி‌ல் கரு‌ந்தேம‌ல் மறையு‌ம்.
Posted by தமிழ் வேங்கை

நொச்சி இலைகளின் மருத்துவக் குணங்கள்.

சாலை ஓரங்களிலும் வேலிகளிலும் காணப்படும் நொச்சி புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் இந்த தாவரத்தின் இலைகள் கூட்டிலை வகையினால் ஆனது. இலைகள், வேர், பட்டை, மலர்கள், கனி, விதை மற்றும் முழுத்தாவரமும் பயன்படுபவை. கிராமப்புறங்களில் தானியங்களை சேமிக்கும் பொழுது
Posted by தமிழ் வேங்கை

இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்.

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! 
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள்,
3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
Posted by தமிழ் வேங்கை

சிறுநீரக கோளாறுக்கு அருமை மருந்து.

 வாழைத்தண்டு *சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்களால் துன்பப்படுகிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. உடலில் உள்ள கழிவுகள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படுகின்றது. சிறுநீரைக் கட்டுப்படுத்துவதாலோ அல்லது நோய் பாதிப்புகளாலோ சிறுநீர் சரிவர உடலை விட்டு வெளியேறாமல் இருக்குமானால், அது பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும். 
* சிறுநீரகத்தில் கல் உருவாவது இன்று மிக பரவலாகக் காணப்படும் நோய். அதிக காரமான உணவு, மிகக் குறைவாக நீர் அருந்துதல், வறட்சியான உணவு, மது அருந்தும் பழக்கம், அடிக்கடி சிறுநீரை அடக்குதல் போன்ற காரணங்களால் சிறுநீர் தடைபட்டு சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகின்றது. 
* சிறுநீரக கற்களை வெளியேற்ற மருந்துகளும், மருத்துவ முறைகளும் இருந்தாலும் நாம் உட்கொள்ளும் உணவு மூலமும் சிறுநீரக கற்களை வெளியேற்றலாம். 
* வாழைத்தண்டுக்கு சிறுநீரக கற்களை வெளியேற்றும் தன்மை உண்டு. 
* வாழைத்தண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால், ஆரம்ப நிலையில் உள்ள கற்களை மிக எளிதாகக் கரைத்து விடலாம். சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரம் மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். 
* வாழைத்தண்டு நார்ச்சத்து மிக்க உணவாதலால் அதிக உடல் எடையால் அவதிப்படுகிறவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகரித்து இருப்பவர்களுக்கு இது மிகச் சிறந்த மருந்து. இது ரத்தத்தை தூய்மை செய்யும் இயல்புடையது. 
* உடலைக் குளிர்ச்சியடையவைக்கும் தன்மையிருப்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது. வயிற்றுப் புண்ணைக் குணப்படுத்தும் சக்தி இருக்கிறது. 
* மாதவிடாய் காலத்தில் இதை உணவில் சேர்த்தால் பெண்களின் உடல் பலமடையும். மாதவிடாய் கோளாறுகளால் ஏற்படும் அதிக ரத்தப்போக்கு, நோய்க்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. உடல் எடை குறைய உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்பவர்கள் வாழைத்தண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Posted by தமிழ் வேங்கை

தலை சுற்றுகிறதா?


யாருக்காவது லேசான தலைசுற்றல் ஏற்பட்டாலே ரத்த அழுத்தம் பார்க்கிறோம். ஆனால் பழங்காலத்தில் கடவுள் முன்பாக, தரையில் உடல் உறுப்புகள் அனைத்தும் படும்படியாக விழுந்து கும்பிட்டு விட்டு எழுந்திருப்பார்கள்.
Posted by தமிழ் வேங்கை

தொப்பை குறைய எளிய பயிற்சி..!


இன்றைய இளைஞர்களை அனைவரையும் பாடாய் படுத்தும் பிரச்சினை எதுவென்றால் அது தொப்பை. இந்த தொப்பையை குறைக்க அவர்கள் எந்த விதமான முயற்சியும் எடுக்க நேரம் கிடைப்பதில்லை.
Posted by தமிழ் வேங்கை

அறிவைப் பெருக்கும் தோப்புக்கரணம்.

ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை
Posted by தமிழ் வேங்கை

வாழைப்பழம்.

எல்லா சீசனிலும் கிடைக்கும் பழம் வாழைப்பழம்தான். முக்கனிகளில் 
முக்கியமான கனி இது. வாழைப்பழம் ஒரு மனிதனுக்கு கிடைக்ககூடிய ஊட்டச்சத்து மட்டுமல்ல பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு நாசினியும் கூட. இதை நாம்
Posted by தமிழ் வேங்கை

தங்க நகை போடணும்னு ஆசைப்படுறீங்களா?

தங்க நகை அணிவதிலும் அதை வாங்குவதிலும் பெண்களுக்கு அலாதி ஆர்வம்தான். சவரன் எத்தனை ஆயிரம் விற்றாலும் பரவாயில்லை மாதத்திற்கு அல்லது வருடத்திற்கு இத்தனை பவுன் சேர்த்துவிடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார்கள். தங்க நகை அணிவது
Posted by தமிழ் வேங்கை

''தேன்'' மருத்துவ குறிப்பு...

* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

* பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.

* மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

* எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும்.

* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

* ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

* ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு தணியும்.

* தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

* இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

* கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

* தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.
* பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல  தூக்கம் வரும், இதயம் பலம் பெறும்.

*பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல    சக்தி உ ண்டாகும்.

*மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து  சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.
*எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து  சாப்பிட்டால் இருமல் குணமாகும்.
Posted by தமிழ் வேங்கை

நடைப்பயிற்சியால் விளையும் நன்மைகள்.

அதிகமான எடையைக் குறைக்க விரும்புகிறீர்களா? சர்க்கரை நோய், இதய நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? மனச்சோர்வு,
Posted by தமிழ் வேங்கை

மல்லிகைப் பூவின் மருத்துவ குணங்கள்.


மல்லிகைப் பூவை அந்த காலத்திலேயே பல்வேறு பிரச்சினைகளுக்கு மருந்தாக பயன்படுத்தி வந்தனர். அதேப்போல, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மல்லிகைப் பூ எண்ணெய் மருந்தாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

வெளியில் உணவை வாங்கி சாப்பிடுபவர்களுக்கு
Posted by தமிழ் வேங்கை

மஞ்சளின் மகத்துவம் மற்றும் மகிமை .

பெண்கள் திருமணம் முடிந்தபின், மஞ்சள் பூசுவதும், மாங்கல்ய கயிற்றுக்கு மஞ்சள் பூசுவதும், மஞ்சளால் தயாரிக்கப்பட்ட குங்குமத்தைத் திலகமிட்டுக் கொள்வதும், கணவன் இறக்கும்வரை ஒரு பண்பாட்டுச் செயலாக வாழ்வதும் எத்தனை புனிதமான
Posted by தமிழ் வேங்கை

பேரீச்சை..! இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும்.

அவசியம் உண்ண வேண்டிய அத்தியாவசிய சத்து நிறைந்த கனியென்றால்
 அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப்பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் பேரீச்சையை அவசியம் சாப்பிட வேண்டும்.
Posted by தமிழ் வேங்கை

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

வகைகள்

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -