தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

தமிழகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு இழந்த பகுதிகள்!


Photo: தமிழ்நாடு இழந்த பகுதிகள்!

நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.
அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது
'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கும் போது கேரளாவோடு சேர்க்கப்பட்ட தமிழ் நிலப் பகுதிகளான தேவிகுளம், பீரிமேடு போன்ற பகுதிகளை மீண்டும் தமிழகத்தோடு இணைக்க வேண்டும் என்று கேட்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது’ என்று இன்று அரசியல்வாதிகள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
ஆனால், வரலாற்றை திரும்பிப் பார்த்தால் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது தமிழ்நாடு இழந்த பகுதிகள் பல. அவை தமிழ்நாட்டோடு இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சினைகள் இருந்திருக்காது. முல்லைப் பெரியாறு மட்டுமல்ல, காவிரி, பாலாறு பிரச்சினைகள்கூட. நாம் இழந்த நிலப் பகுதிகளை ஒப்பிடுகையில் தேவிகுளம், பீரிமேடு என்பது, கஜானாவையே கொள்ளை கொடுத்து விட்டு ஒற்றை மூக்குத்தியை மட்டும் திரும்பக் கேட்பது போலத் தான். ஏனென்றால், தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.
அப்படி பல்லாயிரம் சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதிகளை தமிழகம் இழக்கக் காரணம், நமது அரசியல் கட்சிகள். இந்தக் கட்சி, அந்த இயக்கம் என்ற பேதம் இல்லாமல் எல்லோருமே அந்த இழப்புக்கு துணை போன அரசியலையே செய்தார்கள் என்பது வரலாறு முன் வைக்கும் கசப்பான உண்மை.
நாடு விடுதலை பெற்றதும் மொழிவாரி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற குரல்கள் அடுத்தடுத்து இந்தியா முழுக்க எழுந்தன. அப்படிக் குரல் எழுப்பியவர்கள் பிரிவினைவாதிகள் அல்ல. வெள்ளையனை வெளியேற்ற வேண்டும் என்பதற்காக சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றவர்கள். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்தில் இருந்தவர்கள்.
முதன் முதலில் மராத்தி மொழி பேசும் மக்களுக்கு தனியாக மராட்டிய மாநிலம் அமைக்க வேண்டும் என்று ‘சம்யுக்த மகாராஷ்டிரா சமிதி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, போராடத் துவங்கியவர் விடுதலைப் போராட்ட தியாகியான சங்கர்ராவ் தேவ். அடுத்து, குஜராத் மாநிலத்தில் ‘மகா குஜராத் ஜனதா பரிஷத்’ என்ற அமைப்பின் மூலம் போராடத் துவங்கினார் இந்துலால் யக்னிக்.
அதன் பிறகு தென்னிந்தியாவில் தனி ஆந்திர மாநிலப் போராட்டம் எல்லாவற்றையும்விட பெரிய அளவில் விஸ்வ ரூபம் எடுத்தது. அடுத்து கர்நாடகா, கேரளாவிலும் போராட்டங்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படி ஒரு போராட்டம் எழவே இல்லை. இங்கிருந்த தேசிய உணர்வு, திராவிட உணர்வு இரண்டுமே அதற்கு காரணம்.
வெள்ளையர் ஆட்சியில், சென்னை ராஜதானி என்ற பெயரில் இன்றைய நான்கு தென் மாநிலங்களும் ஒன்றாக இருந்தன. அதனால், சென்னையும் தமிழ் மண்ணும் அரசியல் சமூகரீதியாக கேரள, ஆந்திர, கன்னடர்களும் உரிமையோடு செயல்படும் நிலமாகவே இருந்தது.
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தென் இந்தியாவில் கேரள, கன்னட, ஆந்திர மாநிலத்தவர் காலகாலமாக தமிழ் நிலப் பகுதிகளாக இருந்த பகுதிகளை தங்கள் மாநிலத்தோடு இணைக்கக் கோரி போராடினர். அதில் முதன் முதலாக வெற்றி பெற்றவர்கள் கேரள மாநிலத்தவர்தான்.
அகஸ்தீஸ்வரம், தோவாளை, நெய்யாற்றுப் பகுதி, நெடுமங்காடு, இடுக்கி மாவட்டத்தின் பெரும்பகுதி, வண்டிப் பெரியாறு, தேவிகுளம், பீரிமேடு, குமுளி, கொச்சின், சித்தூர், பாலக்காடு பகுதிகள் போன்றவை எல்லாம் இன, மொழி, வரலாற்று, இலக்கிய ரீதியாக தொடர்புடைய தமிழகத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை.
மொழிவாரி மாநிலப் போராட்டம் பொங்கி பிரவகித்த நிலையில் 1954ம் ஆண்டு மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர, பசல் கமிஷன் என்ற ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்தது. அந்த கமிஷனிடம் கேரளத்தவர்கள் மேலே குறிப்பிட்ட பகுதிகளைத் தவிர கோவை மாவட்டத்தின் மேற்குப் பகுதி, நீலகிரி, கூடலூர், ஊட்டி ஆகிய பகுதிகளையும் கேட்டனர்.
அன்று (இன்று போல) கேரளத்தவர்கள் அரசியலிலும் நிர்வாகத்திலும் செல்வாக்கோடு இருந்தனர். அன்று நேருவின் அமைச்சரவையிலும் வெளிநாட்டுக் கொள்கை ரீதியான பதவிகள், அயல்நாட்டு தூதரகப் பதவிகள், சர்வதேச நெருக்கடிகளுக்கு பரிகாரம் காணும் பதவிகள், மூன்று மெய்க்காப்பாளர் பதவிகள், நேருவின் அந்தரங்கச் செயலாளர் பதவி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் பதவி, பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவி என்று பல பொறுப்புக்களில் கேரளத்தவர் இருந்தனர்.
தவிர மொழிவாரி மாநிலம் பற்றி ஆராய்ந்து அறிக்கை தர அமைக்கப்பட்ட பசல் கமிஷனிலேயே கே.எம். பணிக்கர் என்ற மலையாளி பொறுப்பில் இருந்தார். தமிழகம் சார்பில் யாரும் இல்லை. அவர், ‘தனக்கு தேவிகுளம், பீரிமேடு பகுதிகளில் நிறைய தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் அவற்றை தமிழ்நாட்டுக்குத் தர முடியாது’ என்று சொன்னதாகக் கூறப்படுகிறது (காண்க: பெட்டிச் செய்தி).
ஆனால், இந்த விஷயத்தில் கேரளத்தவரை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை. நம் அரசியல்கட்சிகளும், தலைவர்களும் தமிழ் மண்ணைவிடக் கட்சி விசுவாசத்திற்கே முக்கியத்துவம் அளித்தனர்.
தேவிகுளம், பீரிமேடு பகுதிகளை கேரளத்தோடு இணைப்பதற்கு எதிராகப் போராடிய பி.எஸ்.மணி என்ற தலைவர் சென்னை வந்து காமராஜரை சந்தித்து, ‘தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் காப்பாற்றப்பட வேண்டும்’ என வேண்டினார். அப்போது காமராஜர், ‘குளமாவது மேடாவது, இந்தியாவில்தானே இருக்கிறது மணி, காங்கிரஸ் வேலையைப் போய்ப் பார்’ எனச் சொல்லி அனுப்பினார். மணி, ‘தினமணி’ ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்து பிரச்சினையை விளக்கினார். அவர், ‘குளமாவது மேடாவது’ என்ற தலைப்பில், ‘தினமணி’யில் தலையங்கம் ஒன்று எழுதினார். சி.சுப்ரமணியம் ஒருமுறை, ‘தேவிகுளம், பீரிமேடு நமக்கு வேண்டும்’ என சட்டமன்றத்தில் வாதிட்டவர். ஆனால், மத்திய தலைமையின் கருத்து வேறாக இருக்கிறது எனத் தெரிந்தபோது, 1956 மார்ச் 28ம் தேதி பசல் கமிஷனின் அறிக்கையை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தி அதை ஏற்குமாறு வாதிட்டவரும் அவர்தான்.
தேவிகுளம், பீரிமேடு போராட்டம் பற்றி விவாதிக்க 1956ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி சென்னையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் அண்ணா கலந்து கொள்கிறார் என்ற காரணத்தால் பெரியார் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை (காண்க: அண்ணாவின் கடிதம்). ‘மொழிவழி பிரிந்து இனவழி ஒன்றுபட்டு சோஷலிச திராவிடக் குடியரசு கூட்டாட்சி’ காணும் கனவில் இருந்த திமுக, காங்கிரசிற்கு எதிராகக் கூட்டணி காண்பதிலும் மாநில உரிமைகள் சார்ந்த வேறு பிரச்சினையிலும் காட்டிய ஆர்வத்தை இந்தப் பிரச்சினையில் காட்டவில்லை. ‘பெரியாரும் அண்ணாவும் தட்சிணப் பிரதேசத் திட்டத்தை எதிர்ப்பதிலேதான் அதிக அக்கறை காட்டினார்கள். தேவிகுளம், பீரிமேடு பிரச்சினையில் அவ்வளவாக அக்கறை காட்டவில்லை’ என்று, ‘எனது போராட்டங்கள்’ நூலில் எழுதுகிறார் ம.பொ.சி.
பிரச்சினை வலுவாக இருந்தபோது அந்த ஆண்டு கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்திய மாநாடு சென்னையில் நடக்க வேண்டி இருந்தது. ஆனால், கேரள மாநிலத்தவர் அதை தங்கள் செல்வாக்கால் கேரளாவுக்கு மாற்றினர். அங்கு திடீர் என அந்த மாநாட்டில், ‘தேவி குளம், பீரிமேடு பகுதிகள் கேரளாவுக்கே சொந்தம்’ என்று தீர்மானம் போட, தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதை எதிர்க்காமல் கட்சிக் கட்டுப்பாடு என்ற பெயரில் அதை ஏற்றுக் கொண்டனர். (ஆனால், ஜீவா எல்லைகளை மீட்கத் தொடர்ந்து போராடினார்).
அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவர். தேவிகுளம், பீரிமேடு பகுதிகள் யாருக்கு சொந்தம் என்பது பற்றிப் பேச, தமிழக-கேரள மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தலைமைச் செயலாளரான வர்கீஸ் அந்தப் பகுதிகளை கேரளாவுக்குத் தர சம்மதம் தெரிவித்துக் கையெழுத்திட்டார். ‘தமிழக அரசின் தலைமைச் செயலாளரான நீங்கள் இப்படி தமிழகத்துக்கு எதிராக கையெழுத்துப் போடலாமா?’ என்று ஒரு நிருபர் கேட்டபோது, ‘அந்தப் பகுதிகள் இல்லாவிட்டால் கேரளா ரொம்பக் கஷ்டப்படும்’ என்றார் வர்கீஸ்.
இவற்றிற்கு எதிராக நேசமணி, ம.பொ.சிவஞானம் போன்றோர் செய்த சில போராட்டங்களின் விளைவாக கேரளத்தவர் தங்களுக்கு கொண்டு போக நினைத்த செங்கோட்டை, அகஸ்தீஸ்வரம், தோவாளை, கன்னியாகுமரி பகுதிகள் மட்டும் மீட்கப்பட்டன. ஆனால், தமிழகத்தோடு சேர வேண்டிய சுமார் 1,500 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதி கேரளாவுக்கு போயிற்று. அதில் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது செங்கோட்டை தாலுகாவில் இருந்த சில பகுதிகள். 1950களிலேயே ஆண்டுக்கு சுமார் எட்டு கோடி ரூபாய் வருமானம் தந்து கொண்டிருந்த வனப் பகுதியை தமிழகம் இழந்தது.
இந்த 1,400 சதுர கிலோமீட்டர் பகுதி மட்டும் நியாயமாக தமிழகத்துக்கு வந்திருந்தால்...
இன்று முல்லைப் பெரியாறு பகுதி முழுக்க நம்மிடம் இருந்திருக்கும். பிரச்சினையே கிடையாது.
பவானி நதிப் பிரச்சினை கிடையாது.
தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய வடிவமான கண்ணகிக் கோயில் நம்மை விட்டுப் போயிருக்காது. அங்கு நாம் வழிபடப் போனாலே, கேரள போலீசாரிடம் அடிபடும் நிலைமை வந்திருக்காது.
சிறுவாணி அணையின் ஒரு பகுதியை தம்மிடம் வைத்துக்கொண்டு சிறுவாணித் தண்ணீருக்கும் கடிவாளம் போட கேரளத்தவர் போடும் நினைப்புகளுக்கே வாய்ப்பிருந்திருக்காது.
எல்லா பிரச்சினைகளுக்கும் காரணம், தமிழகத்துடன் சேர வேண்டிய 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பை நாம் இழந்ததுதான்.
கேரளாவிடம் இழந்தது இப்படி என்றால், ஆந்திராவிடம் இழந்தது இன்னும் அதிகம்.
சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆந்திராவின் ராயல சீமாவே தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிதான். திருப்பதிக் கோயில் கருவறை சுவர் கல்வெட்டுகளில்கூட தமிழ் எழுத்துகளே உள்ளன. திருப்பதியில் இருந்த தனித்தமிழ் பள்ளிகள், அங்கு தமிழ்க் கலை காலகாலமாக வளர்ந்த விதமே அழகு.
1912ம் ஆண்டு ஆந்திரப்பிரதேச காங்கிரஸ் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரப் பகுதிகளை பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது. தமிழகத்தில் திராவிடம் பேசிக் கொண்டிருந்த நீதிக் கட்சியின் ஆந்திரப்பிரதேசக் கிளையும் அதே கோரிக்கை வைத்தபோது இங்கிருந்த நீதிக்கட்சிப் புரவலர்கள் அதைக் கண்டிக்கவில்லை.
மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டம், இவற்றில் தங்கிய திருப்பதி, காளகஸ்தி, புத்தூர், நகரி, ஆரணியாறு, வடபெண்ணை ஆறு, பொன்வாணி ஆறு இவற்றின் வளமான பகுதிகள், நந்தி மலை இவை எல்லாம் ஆந்திராவோடு போயின.
இதன் பின்னால் விதியின் விளையாட்டு ஒன்றுண்டு.
மொழிவாரி மாநிலப் பிரிவினைக்காக அமைக்கப்பட்ட பசல் கமிஷன் ஒரு விதியை வரையறுத்தது. அதாவது, பிரச்சினைக்குரிய பகுதிகளில் வாழும் மக்களின் மொழி என்ன என்பது முக்கியம் இல்லை. அங்கு உள்ள நிலம் யாருக்கு அதிகம் உரிமைப்பட்டதாக உள்ளது என்பதைப் பொறுத்தே சம்பந்தப்பட்ட மாநிலத்துடன் இணைக்கப்படும் என்று முடிவு எடுத்தது. அதன்படியே கேரள எல்லையை ஒட்டிய தமிழ் நிலப்பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன.
ஆனால், தமிழ்நாடு-ஆந்திரப் பிரிவினையின்போது நடந்தது என்ன தெரியுமா?
வடக்கே இருந்து பிழைப்பு தேடி வந்த தெலுங்கு பேசும் மக்கள் நெல்லூர், சித்தூர் பகுதிகளில் குறிப்பிட்ட எண்ணிகையில் இருந்தனர். ஆனால், நிலத்தின் உரிமையாளர்கள், தமிழர்களாகவே இருந்தனர். ஆனாலும் இங்கு விதியைத் தலைகீழாக மாற்றியது அப்போது மத்திய அரசு அமைத்த படாஸ்கர் கமிஷன் என்ற கமிஷன், ‘நிலம் யாருடையது என்பது முக்கியம் அல்ல. வாழும் மக்களின் மொழிதான் முக்கியக் கூறு’ என்று சொல்லி எல்லா பகுதிகளையும் ஆந்திராவுடன் இணைத்தது.
வடபகுதியில் மங்கலங்கிழார், ம.பொ.சிவஞானம் போன்றோர் மட்டுமே இதை எதிர்த்து தீவிரமாகப் போராடினர். இராஜாஜி இவர்களுக்கு ஆதரவாக இருந்தார். ஆனாலும் தமிழத்தின் தேசிய திராவிட அரசியல் நிலவரம் இந்த அநியாயங்களை தடுக்க பெருவாரியாக முன் வராததால், முறைப்படி தமிழகத்துக்கு வர வேண்டிய நிலப் பகுதியில் திருத்தணி, வள்ளி மலை, திருவாலங்காடு போன்ற பகுதிகள் மட்டுமே தமிழகத்துக்கு கிடைத்தன.
1960ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி வரையறுக்கப்பட்ட எல்லைகள்படி தமிழ்நாட்டுடன் இருந்த 32,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பகுதி ஆந்திராவுக்கு தரப்பட்டது. சேலம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்து சுமார் 525 சதுர கிலோமீட்டர் பகுதி, ஆந்திராவுக்கு அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைக்கட்டு ஆந்திராவுக்குப் போனது. திருப்பதி பறிபோனது. காளஹஸ்தி போனது. நந்தி மலை போனது. நந்தி மலை நம்மோடு இருந்திருந்தால் பாலாற்றுப் பிரச்சினை எழுந்திருக்காது.
சென்னையையே ஆந்திரர்கள் தங்களுக்குக் கேட்டார்கள். பல தமிழ் நிலப் பகுதிகளை இழந்து அதைத் தக்கவைத்துக் கொண்டார்கள் நம் அரசியல்வாதிகள்.
இந்த கேரள, ஆந்திர, சென்னை விவகாரங்களிலாவது அரசியல் கட்சிகள் சில போராட்டங்களை நடத்தின. அறிக்கைகள் விட்டன. ஆனால், கர்நாடகாவிடம் நாம் இழந்தது என்பது தூக்கத்தில் திருட்டுக் கொடுத்ததற்கு சமம்.
காவிரி எங்கே உற்பத்தி ஆகிறது என்றால், குடகு மலை என்று எல்லோருக்கும் தெரியும். பழந்தமிழில் குடக்கு என்றால், மேற்கு என்று பொருள். அங்கு வாழும் மக்கள் பேசும் மொழி கூர்க் மொழி. சுமார் முக்கால் நூற்றாண்டுக்கு முன்புவரை கன்னடர்களும் கூர்க் மக்களும் அரசியல் ரீதியாக விரோதம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால், மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இந்த கூர்க் மக்கள், ‘நாங்கள் எங்கள் மொழி மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையாக இருக்கும் தமிழ்நாட்டோடு இணைந்து விடுகிறோம்’ என்று சொன்னார்கள். அதற்காக அந்த மக்கள், கன்னடர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி சிறிய அளவில் போராடியதுகூட உண்டு. நாம் சற்றே கண் காட்டி இருந்தால்கூட அவர்கள் ஓடி வந்து ஒட்டிக் கொண்டிருப்பார்கள்.
அப்படி தமிழகத்தோடு இணைந்து இருந்தால், காவிரித்தாய் ‘தமிழகத்திலேயே’ உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் கலந்திருப்பாள். நமக்கு காவிரிப் பிரச்சினையே வந்திருக்காது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் பதராகி இருக்காது.
கன்னடர்கள் திட்டமிட்டுப் போராடியதால் முறைப்படி தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய பெங்களூரு, மைசூரு மாவட்டத்தின் ஒரு பகுதி, கோலார் தங்கவயல் பகுதிகள் கர்நாடகாவுக்குப் போயின.
பெங்களூரைத் தங்கள் வசமாக்கிக்கொள்ள கர்நாடகத்தினர் காய் நகர்த்திய விதம், அவர்கள் எவ்வளவு புத்திசாலிகள் என்பதைக் காட்டுகிறது. ஒரு மாநிலத்துடன் ஒரு பகுதி இணைக்கப்பட வேண்டும் என்றால் முதலில் நிலத் தொடர்பு, அடுத்து மொழித் தொடர்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஓசூரில் அப்போது தெலுங்கு பேசுவோர் 39 சதவிகிதமும் அடுத்து, கன்னடம் பேசுவோர் 35 சதவிகிதமும் இருந்தனர். தெலுங்கு பேசும் மக்களே அதிகம் இருந்தாலும் ஆந்திராவோடு நிலத்தொடர்பு இல்லை என்ற காரணத்தால், அதை ஆந்திரா கைவிட்டது. அன்று அது வறண்ட பூமி என்பது வெளியே சொல்லப்படாத காரணம். ஆந்திராவோடு அது இணைக்கப்படாத பட்சத்தில் கன்னடம் பேசுவோர் அதிகம் இருந்ததால், அதை கர்நாடகாவோடுதான் இணைத்திருக்க வேண்டும். ஆனால்-
பெங்களூரு விவகாரம் வந்தபோது, கன்னட மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் ஓசூரை தமிழகத்துக்குக் தந்துவிட்டோம். அதற்குப் பதிலாக கன்னடம் பேசும் மக்களை விட தமிழ் பேசும் மக்கள் அதிகம் இருந்தாலும் நாங்கள் பெங்களூரை எடுத்துக்கொள்கிறோம் என்று கோரிக்கை வைத்தது கர்நாடகா.
தமிழகம் அதற்கு உரிமையான நிலப்பகுதிகளை இழந்ததற்கு, தமிழகத்தில் அன்று நிலவிய மண் சார்ந்த உணர்வு இல்லாத- வாய்ச்சவடால் அரசியல்தான் காரணம்.
இன்றைய தமிழகத்தின் பரப்பளவு 1,30,609 சதுர கிலோமீட்டர்கள் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள். இவையும் நம்மோடு இருந்திருந்தால் தமிழகம், கர்நாடகாவைவிட இன்னும் பெரிய மாநிலமாக இருந்திருக்கும். அப்போதும் ஆந்திராவைவிட சற்று சிறிய மாநிலமாக இருந்திருக்கும் என்றாலும்கூட, தமிழகமே மற்ற தென்னிந்திய மாநிலங்களைவிட வளமான மாநிலமாக இருந்திருக்கும்.
நன்றி : கருப்பு ரோஜாக்கள்நம் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டாததால் தமிழகம் அண்டை மாநிலங்களிடம் இழந்த நிலப்பகுதியின் அளவு சுமார் 70,000 சதுர கிலோமீட்டர்கள்.
அந்தப் பகுதிகள் நம்மிடம் இருந்திருந்தால் இன்று நாம் சந்திக்கும் நதி நீர்ப் பிரச்சிணைகள் இருந்திருக்காது
'முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்தவர் நடந்து கொள்ளும் முறையைப் பார்க்கும் போது
Posted by தமிழ் வேங்கை

முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை,(1899 - 19 - 12 - 1994) பரவலாகமுத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச்சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்ஈடுபட்டபோதும் அவரது திராவிடநாடு கோரிக்கையுடன் உடன்படாதவர். அஃது தமிழரின்
Posted by தமிழ் வேங்கை

வீரத்தமிழன்..

இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய வீரத்தமிழன்! 

உலகில் அரபு மொழி பேசும் மக்களின் எண்ணிக்கை ஆறு கோடி. தமிழ் பேசும் தேசிய இனத்தின் எண்ணிக்கை எண்ணிக்கையும் ஆறு கோடியாகும். அரபு மொழி பேசும் மக்களுக்கு இவ்வுலகில் இருபத்தி
Posted by தமிழ் வேங்கை

பேரறிஞர்அண்ணா 1909 - 1969

காஞ்சிபுரத்தில் நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் 15 செப்டம்பர் 1909 பிறந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது பள்ளிப் படிப்பை சென்னை பச்சையப்பன் உயர்நிலை பள்ளியிலும், பி.ஏ. மற்றும் எம்.ஏ.பட்ட படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும் படித்தார். தமிழ் மற்றும் ஆங்கிலம்
Posted by தமிழ் வேங்கை

எம்.ஜி.ஆரின் உடல் அடக்கம் நடந்தது எப்படி..?

முதல்வருக்குக் கீழே வரிசையாய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த ஆர்.எம்.வீ. உட்பட அமைச்சர்கள் அனைவரும் எழுந்தனர். படிக்கட்டுகளைத் தாண்டி, பிரதமர் ராஜீவ் கூட்டத்துக்குள் இருந்து வந்தார். மலர் வளையம் வைத்து வணங்கிவிட்டு, முதல்வரைப் பார்த்தபடியே சற்று நேரம் நின்றார். பிரதமர் புறப்பட்ட அடுத்த ஒரு மணி நேரத்துக்குள், கடற்படை வீரர்கள் மலர் வளையத்தோடு.. ஒரு தட்டு நிறையப் பூக்களுடனும் முன்வர, ஜனாதிபதி வெங்கட்ராமன் தன் துணைவியாருடன் வந்தார். அவரைத் தொடர்ந்து கவர்னர்... இப்படி ஒரே வி.ஐ.பி-க்கள் மயமாய் இருந்தது. தன் புதல்வர்கள் ராம்குமார், பிரபுவுடன் வந்த சிவாஜி கணேசன், பண்ருட்டி ராமச்சந்திரனைத் தழுவிக் கொண்டு அழுதார். குழந்தைபோலத் தேம்பியபடி, ''இன்னிக்கா, நேத்திக்கா... நாப்பது வருஷமா அண்ணன் தம்பியா இருந்தோமே... 'எதுன்னாலும் நீ என்னை வந்து பார்... ஏன் நீ வர மாட்டேங்கறே?’ன்னாரே... இனி நான் யார்கிட்ட போவேன்?'' என்று சிவாஜி குமுறிக்கொண்டு இருந்தபோது, ஆந்திர முதல்வர் என்.டி.ராமராவ் மண்டபத்துக்குள் நுழைந்தார். அடுத்த சில நிமிடங்களில் கருப்பையா மூப்பனார், பழனியாண்டி உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் வந்து சேர்ந்தனர். ஓர் அ.தி.மு.க பிரமுகர் ஆர்.எம்.வீ-யிடம் வந்து, ''ரஷ்யாவில் லெனினின் உடலை ரசாயனத் திரவத்தில் வைத்திருக்கிற மாதிரி, தலைவர் உடலையும் வைக்கணும். சென்னையிலேயே ஒருவர், தான் அப்படிச் செய்து தருவதாகப் பல முறை கல்வி அமைச்சருக்கு பெட்டிஷன் கொடுத்து இருக்கிறார்...'' என்றார். சற்று யோசனையுடன் இருந்த ஆர்.எம்.வீ., ''அதெல்லாம் வேண்டாம்... தலைவர் அதை விரும்ப மாட்டார். அண்ணாவைப்போல, சந்தனப் பெட்டிக்குள் வைத்தே அடக்கம் செய்யலாம்!'' என்றார். அந்தப் பிரமுகர் விடாப்பிடியாக, ''சந்தனப் பெட்டி நாட்பட நாட்படக் கரைஞ்சு போகும். நாம் கண்ணாடிப் பெட்டியில் ரசாயனத் திரவத்துக்குள் தலைவரைவெச்சு, அதை சந்தனப் பெட்டிக்குள் வைத்துவிட்டால், உடல் அப்படியே இருக்கும்!'' என்றார். சற்று யோசித்த ஆர்.எம்.வீ., ''எக்ஸ்பெரிமென்டலா எதையும் செய்ய முடியாது. முறையல்ல... அதெல்லாம் வேண்டாம்!'' என்று மறுத்தார். பின்னர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீ., பண்ருட்டி ராமச்சந்திரன் அடங்கிய குழு ஒன்று, முதல்வர் அடக்கம் செய்யப்பட இருந்த இடத்தைப் பார்வையிடக் கிளம்பியது. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர், ஜெயலலிதாவிடம் சென்று, ''காலையில இருந்து நின்னுட்டே இருக்கீங்க... கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்குங்க மேடம்...'' என்றார். ஜெயலலிதா அதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. நின்ற இடத்திலேயே அசையாமல் இருந்தார். முதல்வரின் நெருங்கிய உறவினர்களை அழைத்தார் டி.ஜி.பி. ரவீந்திரன்! ''இறுதிச் சடங்குகள் குடும்ப வழக்கப்படிதானே...?'' என்றார். அவர்கள், ''ஆம்'' என்றதும், ''நீங்க இப்போ தோட்டத்துக்குப் புறப்படுங்க... நாளை மதியம் இரண்டு மணிக்கே அடக்கம் செய்யும் இடத்துக்கு வந்துடுங்க. நீங்க மறுபடியும் நாளைக்கு இங்க வந்து ஊர்வலத்தில் மாட்டிக்க வேண்டாம்!'' என்று, அவர்களை ராமாவரம் அனுப்பிவைத்தார். திரும்பிய திசையெல்லாம் ஆண்களும் பெண்களுமாக, முண்டியடித்துக்கொண்டு இருந்தனர். வழி நெடுக, பலர் கை கால்களில் போலீஸாரிடம் பெற்ற தடியடித் தழும்புகளும் ரத்தச் சிராய்ப்புகளும். மாலை 6 மணிக்கு அண்ணா சிலை அருகே வந்தபோது, வெளியூர்களில் இருந்து வந்து சேர்ந்தவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் முதல்வர் முகம் பார்க்க வரிசையாக, காத்துக் கிடந்தனர். ஒரு காவல் துறை அதிகாரியிடம், ''அவரை உயிரோட பார்க்கவுல வந்தேன்... என்னை அடிங்க, அடிச்சுக் கொல்லுங்க... என் சாமியைப் பாக்காம நான் ஊர் திரும்ப மாட்டேன்!'' என்று இரு கைகளாலும் மாறி மாறி அடித்துக்கொண்டு கதறினார் கிராமத்துப் பெரியவர் ஒருவர். இப்படி ஆயிரக்கணக்கானோர் மறுநாள் மதியம்வரை சாப்பாடு, தண்ணீர் எதுவும் இல்லாமல் நத்தையாய் நகரும் வரிசையில் காத்துக் கிடந்தனர். திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து எழிலகம்வரை வரிசை இருந்தது. வெளியூரில் இருந்து வந்திருந்த பெண்மணி ஒருவர், ''நாங்க தவமிருந்து பெத்த தலைப் புள்ளை போயிடுச்சே... எங்க குல தெய்வத்தின் உசிரே கொள்ளை போயிடுச்சே... ஐயா, ஐயா...'' என்று கதறினார். கைக்குழந்தையுடன் வரிசையில் கண்ணீர் மல்க நின்ற ஓர் இளம்பெண், ''இனி எங்களுக்குன்னு யாரு இருக்கா, எங்களை அனாதையாத் தவிக்க விட்டுட்டுப் போயிட்டாரு புரட்சித் தலைவரு...'' என்று விசும்பினார்! கோவையில் இருந்து மருத்துவப் பல்கலைக்கழக விழாவுக்கென்று பஸ் பிடித்து வந்திருந்த ஒரு குழுவிடம் எழிலகம் அருகே பேச்சுக் கொடுத்தோம். நா தழுதழுக்கச் சொன்னார்... ''அடிமட்டத் தொண்டனை மதிச்ச கடவுள்ங்க அவரு... நாங்க இன்னும் நம்ப மாட்டோமுங்க... பல தடவை ஆன மாதிரி இதுவும் வதந்தியாப் போயிடணுமுங்க... இதே செய்தி எங்க ஊர்ல இருந்து கேட்டிருந்தா, நம்ப மாட்டோமுங்க... இது இப்பவும் வதந்தியாப் போவணுமுங்க...'' என்று குமுறிக் குமுறி அழுதார் அந்த அ.தி.மு.க. தொண்டர்! ராஜாஜி ஹாலில் முதல்வரின் உடல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்ட அதே சமயம், நாவலர் மற்றும் உயர் அதிகாரிகள், சமாதிக்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க மெரினா பீச் வந்தார்கள். முதலில் ஐ.ஜி. ஆபீஸ் எதிரே போய்ப் பார்த்து, எந்த இடத்தில் எந்த அமைப்பில் சமாதி அமைய வேண்டும் என்பதை முடிவு செய்தார் நாவலர். ஆனால், உள்துறைச் செயலாளர் டி.வி. வெங்கட்ராமன் மற்றும் ஜேப்பியார் போன்றோர், ''அண்ணாவின் இதயக்கனி என்று பெயர் வாங்கியவர் தலைவர். அவரை அண்ணா சமாதிக்கு அருகில்தான் புதைக்க வேண்டும்...'' என்று வாதிட்டார்கள். பின்னர் நாவலரும் சம்மதித்து அண்ணா சமாதி அருகே வந்து இடம் தேர்ந்தெடுத்தார். இடம் தேர்ந்தெடுத்த அரை மணி நேரத்தில், பொதுப் பணித் துறையின் பணியாளர்கள் வெகுவேகமாகச் செயல்பட்டார்கள். ஆனால், வியாழன் மதியம் தொடங்கிய வேலை, வெள்ளிக்கிழமை பிற்பகல்தான் முடிந்தது. உள்துறைச் செயலாளரும், டி.ஜி.பி-யும் அடிக்கடி வந்து மேற்பார்வையிட்டு வேலையைத் துரிதப்படுத்தினர். முதல்வரின் உடல் மெரினா வரும் முன்பே லட்சக்கணக்கான மக்கள் கூட்டம்... ஆயிரக்கணக்கில் போலீஸ்... டிரக்கில் இருந்து முதல்வரின் உடலைக் கீழே இறக்கும் சமயம், சுற்றியிருந்த கும்பல் நெருக்கியடித்துக் கொண்டு சமாதி அருகில் வரத் துடித்தது. சமாதியை நோக்கி லட்சக்கணக்கான மக்கள் ஓடி வர, போலீஸாரில் ஒரு பிரிவினரான குதிரைப் படை அவர்களை அடக்கப்படாதபாடுபட்டது. முடியவில்லை. எனவே, கண்ணீர்ப் புகைக் குண்டு வீசப்பட்டது. ''அடப் பாவிங்களா... தலைவரைப் பார்க்க வந்தவங்க கண்ணைக் குருடாக்கப் பார்க்கறீங்களா...'' என்று குரலெழுப்பியவாறு மண்ணையும் கற்களையும் எறிந்தனர். இந்தக் களேபரத்தில் சிலர் சமாதி அருகே வந்து, ''வாத்யாரே... தெய்வமே... அப்பா...'' என்றெல்லாம் கதறித் துடித்தார்கள். வேறு வழி இல்லாமல் போலீஸார் அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கித் தூரமாய் எறிய வேண்டி வந்தது. நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, போலீஸ் துப்பாக்கியை எடுக்க வேண்டி வந்தது. ஆவேசமாக வந்த கூட்டம்... ''தலைவனை வெச்சிருக்கிற இடத்துலே உயிரைவிட்டா, அதுவே போதும்... சுடுங்க...!'' என்று அலற, போலீஸார் துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டி வந்தது. சுமார் 3.40-க்கு முதல்வரின் உடல் வந்து சேர்ந்தது. உடனே மத்திய அமைச்சர் சிதம்பரமும் அருகில் சென்றார். உள்துறைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமன் தன் சட்டையில் இருந்து சென்ட் பாட்டிலை எடுத்து சந்தனப் பேழையில் தெளித்தார். தொடர்ந்து முதல்வரின் உடல் மீதும் மரியாதையுடன் தெளித்தார். ''சி.எம்.மோட ஃபேவரிட் பிராண்ட்...'' என்று முணுமுணுத்தார். அனைவரும் இறுதி அஞ்சலி செலுத்திய பின், முதல்வரின் உடலில் இருந்து தேசியக் கொடி அகற்றப்பட்டது. அவரின் உடை கொஞ்சமும் கசங்காமல் காணப்பட்டது. வலது கையில் ஒரு மோதிரமும் வாட்ச்சும் இருந்தது. ஓர் அமைச்சர், ''எதையும் கழட்ட வேண்டாம்னு சொல்லிடுங்க...'' என்றார். ''கழட்ட வேண்டாம்'' என்று பலரும் கோரஸாகக் கத்தினார்கள். அப்படியே உடல் பேழைக்குள் வைக்கப்பட்டது. தொடர்ந்து உள்துறைச் செயலாளர் ''எல்லோரும் பார்த்தாகிவிட்டதா?'' என்று கேட்கும்போதே என்.டி.ஆர்., ''எம்.ஜி.ஆர்!'' என்று உணர்ச்சிகரமாகக் குரல் கொடுத்தபடியே பேழையை மூட, ''வாழ்க!'' என்ற கோஷம் எதிரொலிக்க, கூடியிருந்த அமைச்சர்கள் சிலர் கலங்கிப் போய் ''ஏன் மூடினீங்க... திறங்க... தலைவர் முகத்தைக் கடைசியா ஒரு தடவை பார்க்கணும்...'' என்று கதறினார்கள். குறிப்பாக ராஜாராமும் ஆர்.எம்.வீ.யும், ''திறங்க...'' என்றார்கள் உரக்க! ஆனால், டி.வி.வெங்கட்ராமன், ''வேணாம் சார்... ஒரு முறை மூடிட்டா திரும்பத் திறக்கக் கூடாது... அது சம்பிரதாயம்...'' என்றார். இப்போது வீரப்பனுடன் சௌந்தரராஜனும் சேர்ந்து, ''ப்ளீஸ்... கடைசியா ஒரு தடவை பார்த்து விடுகிறோம்...'' என்று கெஞ்சினார்கள். உடனே உள்துறைச் செயலாளர் கையெடுத்துக் கும்பிட்டு, ''வேணாங்க... சம்பிரதாயப்படி மூடப்பட்ட பெட்டியைத் திரும்பத் திறக்கக் கூடாது... நான் நல்லதுக்குதான் சொல்றேன்...'' என்று சொன்னார். அத்துடன், ''உம்! சந்தனக் கட்டையை எடுங்கப்பா...'' என்று குரல் கொடுக்க, துண்டு துண்டாய் இருந்த சந்தனக் கட்டைகள் ஆளுக்கொன்றாய் கொடுக்கப்பட்டன. பிறகு, ராணுவம் மற்றும் போலீஸ் மரியாதை... குண்டுகள் முழங்க, பேழைக் குழியினுள் இறக்கப்பட்டது. சௌந்தரராஜன் தன் மடியில் வைத்து இருந்த புனித கங்கை நீர்ச் செம்பை உடைத்துக் குழியில் தெளித்தார். மற்றவர்கள் அழுது கொண்டே சந்தனக் கட்டைகளைப் போட்டார்கள். டி.ஜி.பி. ரவீந்திரன், ''உப்பு...'' என்று குரல் கொடுத்தார். எல்லார் கைக்கும் உப்பு வந்தது. கடைசியாகப் பளிங்குக் கல் கொண்டு வரப்பட்டு, அந்த மாமனிதரின் கல்லறை மூடப்பட்டது. உள்துறைச் செயலாளர் தன் பாக்கெட்டில் இருந்து சூடம் எடுத்து சௌந்தரராஜனிடம் கொடுக்க, அவர் அதைக் கொளுத்தினார். ஒவ்வொருவராய் சூடத்தைக் கண்களில் ஒற்றிக் கொண்டார்கள்.
Posted by தமிழ் வேங்கை

என் உயிர் பிரிந்தால் என் உடலுக்கு புலிக்கொடி போர்த்துங்கள்

நான் இறந்தால் என் உடலை புலி கொடி போர்த்தி எடுத்து செல்லுங்கள் என்று தன் ஈழ தமிழ் ஆதரவை எங்குமே முழங்கி வந்த திரைப்பட இயக்குனரும் நடிகருமான திரு. மணிவண்ணன் அவர்கள் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் அன்னாருக்கு ஆழ்ந்த‌ இரங்கல்களை தெரிவித்து கொள்கின்றோம்.
Posted by தமிழ் வேங்கை

ரஜீவ் படுகொலை உண்மைகளை அம்பலப்படுத்திய திருச்சி வேலுசாமி.


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை நிகழ்ந்து 20 வருடங்கள் ஆகிவிட்டன. படுகொலை தொடர்பாக விடுதலைப்புலிகளை குற்றவாளிகளாக கைது செய்து அவர்கள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். ஆனால், அதில் இன்னும் மர்மங்கள் தீராமல் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
Posted by தமிழ் வேங்கை

போரின்போது இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்து செயற்பட்டன! – அருந்ததி ராய் செவ்வி!!

போரின்போது இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு 
                  சேர்ந்து செயற்பட்டன! – அருந்ததி ராய் செவ்வி!!
                    
                  'இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. 
                  ஆனால், நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல 
                  முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு 
                  அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய 
                  அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் 
                  சுயநல அரசியல்!
                  இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் 
                  பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி 
                  இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் 
                  மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.'
                  இவ்வாறு இந்த மனித உரிமைச் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான 
                  அருந்ததி ராய் விகடனுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
                  அவரின் நேர்காணலை இங்கு முழுமையாகத் தருகிறோம்:
                  அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் 
                  மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் 
                  திராணி வேண்டும். தன்னுடைய 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்'(The god 
                  of small things) தமிழ் மொழிபெயர்ப்பு நூலான - 'சின்ன 
                  விஷயங்களின் கடவுள்' - வெளியீட்டுக்காக சென்னை வந்திருந்த 
                  அருந்ததியைச் சந்தித்தேன். 
                  'இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த 
                  அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?''
                  'நான் ஒரு வயதுக் குழந்தையாக இருந்தபோது என் பெற்றோருக்கு 
                  விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்து அந்தக் கணவனையும் 
                  பிரிந்த ஒரு பெண், தன் கிராமத்துக்கு மீண்டும் திரும்பும்போது 
                  நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று  சொல்ல வேண்டுமா என்ன? 
                  எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நாங்கள் இருந்தோம். 
                  இப்படித்தான் உறவுகளும் சமூகமும் எனக்கு அறிமுகம் ஆனது.'
                  'உங்கள் வாழ்க்கையை வடிவமைத்ததில் உங்கள் அம்மாவுக்கு முக்கியப் 
                  பங்கு உண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள்...'
                  'அப்பா ஒரு குடிநோயாளி. என்னுடைய 20 வயதில்தான் அவரைப் 
                  பார்த்தேன். அதுவரை அப்படி ஒருவர் இருக்கிறார் என்ற நினைப்பே 
                  எனக்குக் கிடையாது. ஆனால், நான் பார்த்த உன்னதமான பெண்களில் 
                  ஒருவர் என் அம்மா. அப்பாவைவிட்டுப் பிரிந்து வந்த பிறகு, 
                  ஊட்டியில் ஒரு சின்ன இடத்தில் நாங்கள் இருந்தோம். சாப்பாட்டுக்கே 
                  வழி இல்லை. அப்புறம் கேரளத்துக்குப் போனோம். வாழ்க்கையின் 
                  சங்கடங்களை அந்த வயதிலேயே நேரடியாகப் பார்த்ததால், 'உன்னைப் 
                  பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள்... நீதான் மற்றவர்களைப் 
                  பாதுகாக்க வேண்டும்' என்கிற பாடம் கிடைத்துவிட்டது. முழுமையான 
                  சுதந்திரத்தின் பரவசம், பயங்கரம் இரண்டையும் அந்தச் சூழல்தான் 
                  எனக்குக் கற்றுக்கொடுத்தது.'
                  'இப்போது நீங்கள் தனியாகத்தான் இருக்கிறீர்கள் அல்லவா?'
                  'ஆமாம். நான் செயல்படும் முறைக்கு அளவற்ற சுதந்திரம் தேவை. அது 
                  திருமண வாழ்க்கையில் கிடைக்காது என்பதை என்னுடைய மண 
                  வாழ்க்கைகளின் மூலமும் தெரிந்துகொண்டேன். எனக்குக் குழந்தைகள் 
                  கிடையாது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் 
                  விரும்பியதும் இல்லை. என் முதல் கணவருக்கு இரு குழந்தைகள் உண்டு. 
                  அவரைவிடவும் அவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள். நான் 
                  நேசித்தவர்களை இன்னமும் நான் நேசிக்கிறேன். ஆனால், ஒரு 
                  சுதந்திரப் பெண்ணால் இன்னொருவர் விதிமுறைக்குக் கீழ் வாழ 
                  முடியாது. சமயத்தில் 10 நாட்கள் சாப்பிடாமல், தூங்காமல் 
                  எழுதுவேன். குடும்ப வாழ்க்கையில் இருந்துகொண்டு இது எல்லாம் 
                  சரிப்படாது!'
                  'இந்த மாதிரி சூழலில், இந்திய ஆண்களைப் பற்றி என்ன 
                  நினைக்கிறீர்கள்?'
                  'இந்திய ஆண், இந்தியப் பெண் என்று நான் பிரித்துப் 
                  பார்க்கவில்லை. என்னுடைய வாழ்க்கையில் இடம்பெற்ற ஆண்கள் நிறையப் 
                  பேர் அழகானவர்கள்... அற்புதமானவர்கள். ஆனால், சமூகத்தில் 
                  அடக்குமுறை இருப்பது தெரிகிறது. என்னைப் பொறுத்தவரை நான் 
                  அடக்குமுறைக்கு உட்படக்கூடிய ஆள் இல்லை. 18 வயதில் நான் 
                  வீட்டைவிட்டு வெளியேறியபோது அதை அனுமதித்த, 'நீ திருமணம் 
                  செய்துகொள்ளாதே' என்று அறிவுரை சொன்ன ஓர் அசாதாரணமான தாய் எனக்கு 
                  இருந்தார். பலருக்கு இந்த அதிர்ஷ்டம் கிடையாது. கணவனே கதி 
                  என்றுதான் வாழச் சொல்கிறார்கள். பெண்களுக்குப் பெற்றோர் துணையாக 
                  இருக்க வேண்டும்.'
                  'இந்தியாவில் சுதந்திரமாக வாழ விரும்பும் பெண்களின் தனிப்பட்ட 
                  வாழ்க்கை பெரும்பாலும் நிம்மதியற்ற சூழலிலேயே இருக்கிறதே... 
                  காரணம் என்ன?'
                  'இந்தப் பார்வையையே நான் மறுக்கிறேன். இங்கே ஒரு பெண்ணுக்கு 
                  நிம்மதியான வாழ்க்கை என்று எது சொல்லப்படு கிறது? கணவன், 
                  அவனுக்கு அடங்கிய ஒரு வாழ்க்கை, குழந்தைகள்தானே..? என் 
                  வாழ்க்கையில் திருமணமாகி நிம்மதியாக இருக்கும் ஒரு பெண்ணைக்கூட 
                  நான் சந்தித்தது இல்லை. அதனால்தான் சிக்கிக்கொள்ளக்கூடிய 
                  சந்தர்ப்பம் வரும்போது எல்லாம் எதிர்த் திசையில் ஓடிவிடுகிறேன்.'
                  'படித்தது கட்டடக் கலை... அப்புறம் சினிமா... இப்போது எழுத்து, 
                  களப் போராட்டம்...'
                  'என்னுடைய இயல்பே மாறிக்கொண்டே இருப்பதுதான்.'
                  ' 'தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்' வெளியாகி 15 ஆண்டுகள் ஆகின்றன. 
                  2007-ல் இரண்டாவது நாவலை எழுதப்போவதாக அறிவித்தீர்கள். ஆனால், 
                  இன்னமும் எழுதவில்லை?'
                  'எங்கே நம் அரசியல்வாதிகள் அதற்கு இடம் கொடுக்கிறார்கள்!' 
                  (சிரிக்கிறார்)
                  'உங்களுக்குள் இருக்கும் அரசியல்வாதிதான் உங்களுக்குள் இருக்கும் 
                  படைப்பாளியைச் செயல்படாமல் முடக்கிவைத்து இருக்கிறாரா?'
                  'எனக்குள் இருப்பது அரசியல்தான். அரசியல்வாதி அல்ல.'
                  'இந்தியாவின் இன்றைய பிரச்னைகளுக்கு மக்களிடம் உள்ள சுயநலமும் 
                  சொரணையற்றதனமும் தான் காரணமா?'
                  'அடிப்படையில் இங்கு பிரச்னைக்குக் காரணம் என்னவென்றால், சாதிய 
                  அமைப்பு. இந்தியாவின் அடிப்படைக் கட்டுமானமே சாதியில் 
                  சிக்குண்டுகிடக்கிறது. அந்தச் சாதி தான் ஜனநாயகம், அரசியல், 
                  ஆட்சி இயந்திரம் எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிறது. சரியாகச் 
                  சொல்ல வேண்டும் என்றால், சாதிய அமைப்பு, நிலப்பிரபுத்துவ 
                  முறையில் இருந்து கார்ப்பரேட் முறைக்கு மாறி இருக்கிறது.'
                  'இன்னமும் மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கிறீர்களா?'
                  'நான் மாவோயிஸ்ட் கிடையாது. ஆனால், காடுகளில் கனிம வளங்களைக் 
                  கொள்ளைஅடிப்பதற்காக அங்குள்ள பூர்வகுடிகளின் நிலங்களைப் 
                  பறிப்பது, அடக்குமுறையால் அவர்களை ஒடுக்குவது போன்ற பிரச்னைகளில் 
                  மாவோயிஸ்ட்டுகளின் போராட்டத்தை ஆதரிக்கிறேன்.'
                  'மாவோயிஸ்ட்டுகளின் வழி சரியா?
                  ''நான் அப்படிச் சொல்லவில்லை. மாவோயிஸ்ட்டுகளின் போராட்ட 
                  அணுகுமுறை காட்டுக்கு வெளியே எடுபடாது. ஆனால், இப்போது உள்ள 
                  சூழலில் வேறு எந்த ஒரு தீர்வும் தென்படவில்லை. காட்டுக் குள் 
                  துணை ராணுவப் படைகள் புகுந்த பின்னர், அங்குள்ள மக்கள் தனித் 
                  தீவாக மாற்றப்பட்டுள்ளனர். வெளி உலகத்துக்குத் தெரியாமலேயே 
                  அவர்கள் முற்றிலுமாகத் துடைத்தெறியப்படும் வாய்ப்பு இருக்கிறது. 
                  அமெரிக்கா இப்போது அதைத்தான் விரும் புகிறது. குறிப்பாக, 
                  பொருளாதார மந்தநிலைக்குப் பிறகு. இங்குள்ள கனிமங்களை அப்படியே 
                  அள்ளிச் செல்ல ஏதுவாக வனங்களில் நம் ராணுவம் புகுந்து சூறையாட 
                  வேண்டும் என்று விரும்புகிறது. மன்மோகன் சிங்கால் அதை முழு 
                  வேகத்தில் செய்ய முடியாததால்தான் 'செயல்பாடற்றவர்' என்று 
                  அவர்களுடைய ஊடகங்கள் எழுதுகின்றன.'
                  'இந்தியாவில் ஊழலை ஒழிக்க என்ன வழி?'
                  'இங்கு ஊழலை எல்லோரும் நோயாகத்தான் பார்க்கிறார்கள். அது ஒரு 
                  நோயின் அறிகுறிதான். உண்மையில் நோய் எதுஎன்றால், சமச்சீரற்ற 
                  அதிகாரப் பகிர்வு. இந்தியாவில் இன்றைக்குப் பணமோ, அதிகாரமோ 
                  இல்லாத சாமானியன் நீதியைக் கோரி ஒரு துறையைக்கூட அணுக முடியாது. 
                  இந்த மாதிரி ஒரு கட்டமைப்பை வைத்துக்கொண்டு, எவ்வளவு சட்டங்கள், 
                  எத்தனை போலீஸாரைக் கொண்டுவந்தாலும் ஊழலை ஒழிக்கவே முடியாது. 
                  இதைப் புரிந்துகொள்ளாமல்தான் அண்ணா ஹஜாரே இயக்கம் கோஷம் 
                  போடுகிறது.'
                  'காஷ்மீர் சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவாக இருக்கிறீர்கள். 
                  ஒரு பக்கம் பாகிஸ்தான், இன்னொரு பக்கம் சீனா... காஷ்மீர் தனி 
                  நாடாவது ராஜதந்திரரீதியாகச் சரிதானா?''
                  'உங்கள் தலைக்கு மேல் ஏழு லட்சம் ராணுவ வீரர்கள் நின்றுகொண்டு 
                  இருக்கும்போது, நீங்கள் எப்படிச் சிந்திக்க முடியும்? யோசித்துப் 
                  பாருங்கள்... காஷ்மீரிகளின் பிரதிநிதியாக நான் பேசவில்லை. 
                  சுதந்திரம் என்ற அவர்களுடைய முழக்கத்துக்குப் பின் பல 
                  அர்த்தங்கள் இருக்கின்றன. முக்கியமாக அவர்களுடைய வாழ்க்கை, அதைத் 
                  தீர்மானிக்கும் அவர்களுடைய உரிமை. அந்த உரிமையைத்தான் நான் 
                  ஆதரிக்கிறேன்.'
                  'சரி, உங்கள் பார்வையில் தீவிரவாதம் என்பது என்ன?'
                  'ஒரு திருவிழாவுக்காகக் கூடும் ஆதிவாசிகளை இந்த நாட்டின் துணை 
                  ராணுவப் படைகள் சுட்டுக் கொல்வது.'
                  'அரச பயங்கரவாதம், சுதந்திரம்குறித்துப் பேசுகிறீர்கள். ஆனால், 
                  இலங்கையின் பின்னின்று ஒரு போரை இந்திய அரசு நடத்தியபோது நீங்கள் 
                  என்ன செய்தீர்கள்?'
                  'இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. 
                  ஆனால், நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல 
                  முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு 
                  அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய 
                  அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம் 
                  சுயநல அரசியல்!
                  இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் 
                  பார்த்து, அங்குள்ள மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி 
                  இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை உங்கள் 
                  மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.'
                  'இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி 
                  உடைந்தால், ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?'
                  'இந்தியா என்கிற வார்த்தையை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் 
                  என்பதே எனக்குத் தெரியவில்லை. தொன்மைமிக்க நாடு என்றா? உண்மையில் 
                  1947-ல்தான் இந்தியா என்ற நாடு உருவானது. அதுவும் பிரிவினையில் 
                  இருந்து. அப்படிப் பிரிவினையால் உருவான ஒரு நாடு காலனி ஆதிக்கச் 
                  சக்திபோலத்தான் செயல்படுகிறது. மக்கள் போராட்டத்தை அடக்க 
                  ராணுவத்தை அனுப்புவது ஆகட்டும்; மற்ற நாடுகளிலும் பிரிவினையை 
                  உருவாக்குவது ஆகட்டும். தேசியம் என்பது தவறு அல்ல. ஆனால், அதில் 
                  நியாயம் இருக்க வேண்டும். வரைபடத்தில் என்னுடைய நாட்டின் அளவு 
                  பெரியதாக அல்லது சிறியதாக இருக்கிறது என்பது என்னைப் பாதிக்காது. 
                  ஆனால், நான் சார்ந்திருக்கும் நாட்டின் பெயரால் நடத்தப்படும் 
                  வன்முறையும் ஒடுக்குமுறையும் என்னை வெகுவாகப் பாதிக்கும்.'
                  'இதுவரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே சிறந்தவர் என்று நீங்கள் 
                  யாரைச் சொல்வீர்கள்?'
                  ;ச்... ம்ஹூம்... அப்படி யாரும் இல்லை. ஆனால், மன்மோகன் சிங் 
                  மோசமானவர். இந்தியாவை விற்றவர்.'
                  'மோடி - ராகுல். பிரதமர் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?'
                  'எவ்வளவு மோசமான நாடு இது... (சிரிக்கிறார்). இருவருமே பெரும் 
                  சீரழிவையே கொண்டுவருவார்கள். மோடி இன்னமும் பேரழிவைக் 
                  கொண்டுவருவார்.'
                  'உங்கள் பார்வையில் இந்தியாவில் இன்றைக்கு நம்பிக்கை 
                  அளிக்கக்கூடிய அரசியல் தலைவர் அல்லது இயக்கம் எது?'
                  'இந்த மாதிரி அரசியல் சூழலில் இப்படி ஒரு கேள்விக்கு அர்த்தமே 
                  இல்லை.'
                  'இந்தியாவை எப்படித்தான் சீரமைப்பது?'
                  'அப்படியான திட்டங்கள் ஏதும் என்னிடம் இல்லை. நான் அவ்வளவு பெரிய 
                  ஆளும் இல்லை!'
                  'உங்களுக்கு காந்தியத்தின் மீது நம்பிக்கை உண்டா?'
                  'இந்தியாவின் முதல் சுற்றுச்சூழலியலாளர் என்பதைத் தாண்டி, காந்தி 
                  மீது எனக்கு எந்த ஈர்ப்பும் கிடையாது. ஸ்திரத்தன்மை அற்ற ஓர் 
                  அரசியல் அவருடையது. இந்தியாவின் முதல் என்.ஜி.ஓ. அவர். 
                  சாதியத்தையும் மதத்தையும் அவர் அரசியலுக்குள் கொண்டுவந்தது 
                  கொஞ்சமும் எனக்குப் பிடிக்காதது.'
                  'எல்லோரையுமே நிராகரிக்கிறீர்கள்... நீங்கள் அவநம்பிக்கையைத்தான் 
                  விதைக்கிறீர்கள். நீங்கள் அவநம்பிக்கைவாதியா?'
                  'மக்களுக்காகப் பேசும் நான் எப்படி அவர்களிடம் அவநம்பிக்கையை 
                  விதைப்பேன்? எதிர்ப்பைக் காட்டுவதில் மற்ற மக்களிடம் இருந்து மிக 
                  வேறுபட்ட, தீவிரமான அணுகுமுறையை இந்திய மக்கள் கையாள்கிறார்கள். 
                  இன்றைக்கு ஜார்கண்டிலும் சட்டீஸ்கரிலும் அரசை எதிர்த்து நிற்கும் 
                  மக்களின் போராட்டம் அசாதாரணமானது. நான் அவர்களுக்காகப் 
                  பேசுகிறேன். அவர்கள் இடத்தில் இருந்து இந்த நாட்டைப் 
                  பார்க்கிறேன். அது உங்களுக்கு அவநம்பிக்கையாகத் தெரிந்தால், இந்த 
                  நாடு அவர்களிடத்தில் அவநம்பிக்கையை விதைத்து இருக்கிறது என்றே 
                  அர்த்தம்!'
                  நன்றி: விகடன்

இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி.
ஆனால், நான் என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன  செய்தார்கள்? இலங்கை அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு
Posted by தமிழ் வேங்கை

அமெரிக்க தீர்மானம் பற்றிய தொகுப்பு..!

போராடும் தமிழக கல்லூரி மாணவர்களுக்காக....
 
2009 இல் விடுதலை புலிகளுக்கும், ஸ்ரீலங்கா ராணுவத்திற்கும் இடையே நடந்த போரில் லட்சக்கணக்கான மக்கள் திட்டமிட்டு ஸ்ரீலங்கா ராணுவத்தால் படு கொலை செய்யப்பட்டனர். அதில் போர்குற்றம் நடந்ததாக வந்த குற்ற
Posted by தமிழ் வேங்கை

புலிகளை குறை சொல்லும் கேவலமான காங்கரசே இந்த வினாக்களுக்கு பதில் சொல்.


1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஸ்ரீபெரும்புதூரில் நள்ளிரவுக் கூட்டத்தில்
Posted by தமிழ் வேங்கை

காணொளி:உண்ணாவிரதம் இருந்துவரும் மாணவர் செம்பியனுடன் சிறப்பு நேர்காணல்...

இலங்கை மீது சர்வதேச விசாரணை கோரி உண்ணாவிரதம் இருந்துவரும் மாணவர்களில் ஒருவரான செம்பியனுடன் சிறப்பு நேர்காணல்...

* மாணவர் போராட்டத்தின் நிலைப்பாடு என்ன ?
* யாருடன் இணைந்து போராட திட்டம் ?
Posted by தமிழ் வேங்கை

தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்புவோம் ! கணொளி

ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க இலயோலா கல்லூரி மாணவர்கள் போராட்டம் இப்போது பெரும் எழுச்சியை பெற்றுள்ளது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதம் பறை இசைக் குழுவினர் தங்கள் பறையடிக்கும் திறமையை ஆடலுடன் வெளிக்காட்டி அசத்தினர். அதிரும் பறை
Posted by தமிழ் வேங்கை

காமராசர் எங்கே..?!

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜோன்சன்ஐ சந்திப்பதற்காக அறிஞர் அண்ணா ஒருமுறை அமெரிக்க சென்றாராம்.. அங்கே பலமணி நேரம் காக்க வைக்கபட்ட பின்னர் கூட அண்ணாவுக்கு அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லையாம். பின்னர் தமிழகம் திரும்பிவிட்டார்..

சில ஆண்டுகள் பின்னர் லிண்டன் ஜோன்சன் இந்தியாவுக்கு விஜயம் செய்தாராம். அவர் சந்திக்க விரும்புபவர்கள் பட்டியலில் முதலில் இடம்பிடித்த பெயர் கர்மவீரர் காமராஜர். அப்பொழுது அமரிக்க ஜனாதிபதியுடன் நின்று புகைப்படம் எடுக்கவே பல இந்தியத் தலைவர்கள் விரும்பினார்கள். ஆனால் காமராஜர் தன்னால் அவரை சந்திக்க முடிக்கயாது என்று மறுத்துவிட்டாராம்.

எல்லோருக்கும் வியப்பு... ஏன் என்று வினவியபொழுது அவர் சொன்ன பதில் ''ஒரு தமிழனான அண்ணாவைச் சந்திக்காமல் அவமானப்படுதிய அவரைச் சந்திக்க என்னால் முடியாது. ஏன் என்றால் நானும் ஒரு தமிழன்.." என்றாராம்.  அதனால் தான் காங்கிரஸ்காரர் என்றாலும் அவரைப் பச்சைத் தமிழன் என்று தமிழர்கள் பெருமையாகப் பேசுகின்றர்கள். 

தமிழர்களைக் கொத்துக் கொத்தாக கொல்வதற்கு துணைபோய், துரோகத்தின் சின்னமாய் விளங்கும் இன்றைய காங்கிரஸ்காரர்கள் எங்கே..?! எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழனை அவமானப்படுத்தியவர்களைச் சந்திக்க மறுத்த காமராசர் எங்கே..?!
அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த லிண்டன் ஜோன்சன்ஐ சந்திப்பதற்காக அறிஞர் அண்ணா ஒருமுறை அமெரிக்க சென்றாராம்.. அங்கே பலமணி நேரம் காக்க வைக்கபட்ட பின்னர் கூட அண்ணாவுக்கு அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லையாம். பின்னர் தமிழகம்
Posted by தமிழ் வேங்கை

புலிகளின் கடற்படையை தாக்கி அழித்தது இந்தியாதான்: யஷ்வந்த் சின்ஹா !


“இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தில், விடுதலை புலிகளின் கடற்படையை (கடல்புலிகள்) தாக்கி அழித்தது இந்தியக் கடற்படைதான்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா. லோக்சபாவில் இன்று(07.03.2013) நடைபெற்ற இலங்கை தொடர்பான சிறப்பு
Posted by தமிழ் வேங்கை

சேனல் 4 வாழ்த்தியது என்று திமுக சொன்னது பொய். அம்பலப்படுத்தினார் கெல்லம் மெக்ரே


தி.மு.கவின் போலி பிரசாரத்தை சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளரும், இலங்கையின் கொலைக்களம் காணொளியின் தயாரிப்பாளருமான கெல்லம் மெக்ரே நிராகரித்தார்.இலங்கை தமிழர்களின் விடயத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்காக, அதன் உப தலைவர்

Posted by தமிழ் வேங்கை

இந்தியாவை உலுக்கிய பாலச்சந்திரன் புகைப்படம்: இலங்கைப் பாசத்தில் சோனியா.


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினர் பிடித்து வைத்து, சுட்டுக் கொன்றது. இந்திய அரசியல் கட்சிகளை ஒட்டு மொத்தமாக உலுக்கியிருக்கிறது அந்தக்
Posted by தமிழ் வேங்கை

மூவர் தூக்கு நியாயமற்றது. நீதிபதி கே. டி. தாமஸ்

ஒரே குற்றத்திற்கு இரண்டு முறை தண்டனை விதிக்க  முடியாது -- நீதிபதி கே. டி. தாமஸ் 

திருப்பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 21.5.1991 அன்று நிகழ்ந்த மனித
Posted by தமிழ் வேங்கை

சிறுவன் பாலசந்திரனின் படுகொலை தமிழின அழிப்பிற்கு அத்தாட்சி

சென்னை: சிறுவன் பாலசந்திரனின் படுகொலை தமிழின அழிப்பிற்கு அத்தாட்சி என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
Posted by தமிழ் வேங்கை

இந்தி மொழியின் தாயகம் இந்தியா அல்ல; துருக்கி! ஆய்வில் கண்டுபிடிப்பு!


சமீபத்தில் நடத்தப் பெற்ற மொழி ஆய்வின் படி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளின் தாயகம் துருக்கி என அறியப்பட்டுள்ளது. 

ஆங்கிலம் மற்றும் இந்தி பேசுபவர்கள் ஏறக்குறைய 4000 ஆண்டுகளுக்கு முன்பு கருங்கடல் பகுதியில் இருந்து வந்தவர்கள் என்பது தற்போது மொழி ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கருத்து ஆகும். அவர்கள், கருங்கடல் பகுதியில் உள்ள தங்கள் தாய் நாட்டில்

Posted by தமிழ் வேங்கை

தூத்துக்குடி ஸ்டர்லைட் முதல் கொங்கு மண்டல கெயில் எரிவாயு குழாய் வரை..வை.கோ.


வைகோவை ஏன் தலைவனாய் ஏற்றுக்கொண்டோம் ?????

தூத்துக்குடி ஸ்டர்லைட் காப்பர் ஆலை வெளியிடும் மாசு கழிவுகளை எதிர்த்து சுமார் 17 வருடங்களுக்கு முன்பே வழக்கு தொடுத்து தானே வாதாடி வழக்கை வென்றெடுத்தார் வைகோ...

வைகோ எங்களை சாலைகளை மரிக்க சொன்னார்
கேரளாக்காரன் அணையை உடைத்து நம் விவசாய பகுதிகளை சுடுகாடாக்க எண்ணிய போது...நாங்கள் கேரளத்திற்கு செல்லும் சாலைகளை மறித்தோம்..கைதானோம் !!!!! முல்லை பெரியாரின் நதிநீர் உரிமைகளை இழக்க நேர்ந்த பொது நெஞ்சம் நிமிர்ந்து போராட்ட களத்தினை தேனியில் அமைத்தார் எங்களையும் அழைத்தார் போராட்டத்தில் வெற்றியும் கண்டார்

பாம்பாற்றின் குறுக்கே கேரள அரசு கட்டத் திட்டமிட்டுள்ள அணைப் பகுதிக்கு கேரள அரசை எதிர்த்து எங்களை ஒன்றுகூட சொன்னார் நாங்களும் கூடினோம்...வைகோவோடு நாங்களும் கைதானோம் !!!

வைகோ எங்களை சாஞ்சிக்கு கூப்பிட்டார்... ராஜபக்க்ஷேவின் வருகையை கண்டித்து பயணமானோம்... இரவு பகலெல்லாம் சாலையிலேயே உண்டோம்...தூங்கி எழுந்தோம்...வரலாறு காணாத போராட்டத்தை தலைவனோடு செய்துவிட்டு..தமிழனுக்கு சூடு சுரணை இருக்கிறது என்பதை சூளுரைத்துவிட்டு வந்தோம் !!!!

கூடன்குள அணுமின் நிலையம் பற்றி அன்றே பாராளுமன்றத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியை எதிர்த்து கார சார விவாதத்தில் ஈடுபட்டார் எங்களை கூடங்குளம் அணுஉலை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து கோட்டையை முற்றுகையிட சொன்னார்....முற்றுகையிட முயன்று கைதானோம் !!!

வைகோ...குடிபோதையால் பாழ்பட்டு கிடக்கும் தமிழகத்தை நல்வழிக்கு கொண்டுவர தன்னுடன் மதுவிலக்கு பிரச்சாரத்திற்கு கூப்பிட்டார்...கால் கடுக்க நடக்கவேண்டும் என்று தெரிந்தே ஊர் முழுக்க அவருடன் நடந்தோம் !!!!

வைகோ எங்களை திருப்பதி செல்லுமாறு கட்டளையிட்டார்...
தலைவன் இல்லாமலேயே திருப்பூர் சு.துரைசாமி தலைமையிலே கட்டுபாட்டோடு கூடினோம்... இன எதிரி ராஜபக்க்ஷேவிற்கு மரண பயம் காட்டி கைதானோம் ...சிங்களவனின் முகத்தில் பயத்தை பார்த்த வெற்றியோடு ஊர் திரும்பினோம்.. ஆனால் தலைவன் டெல்லியில் பிரதமர் வீட்டை நோக்கி பேரணி திரட்டினார்...

இப்போது கெயில் எரிவாயு குழாய் பதிக்க கொங்கு மண்டலக் காடு தோட்டங்களையும் மக்களின் வாழ்வாதாரமான விலை நிலங்களையும் கூண்டோடு குழி தோண்டி புதைக்க முற்படும் பொது விவசாயிகளையும் விளைநிலங்களையும் காக்க போராட்டக் களம் அமைக்கப் போகிறார் ஈரோட்டில்....


இந்த தலைவன் எங்களை என்றும் தன் சொந்த நலனுக்காக போராட கூப்பிட்டதில்லை....!!!
இந்த தலைவன் தன்னை சுகமாக வைத்துக்கொள்ள எங்கள் முதுகின் மீது சவாரி செய்ததில்லை மாறாக எங்களை அவர் தூக்கி சுமக்கிறார்....!!
இந்த தலைவன் எங்களை எப்போதும் வன்முறை போராட்டங்களில் ஆட்படுத்தியதில்லை ....!!!
இந்த தலைவன் பொதுமக்கள் முகம் சுழிக்கும்படியான எந்த காரியத்திலும் எங்களை ஈடுபடுத்தியதில்லை !!!
இந்த தலைவன் எங்களை சாதிவாரியாக பிரித்து பார்த்து அளவிடுவதில்லை !!!
இந்த தலைவன் எங்களை நடக்கவைத்துவிட்டு தான் மட்டும் காரில் சுகமாய் பயணித்ததில்லை !!!
இந்த தலைவன் எங்களை பசியோடு இருக்கவைத்துவிட்டு..தனியே உண்டதில்லை...!!!!
இந்த தலைவன் சுயமரியாதையை இழக்க செய்து ..அவரின் காலில் எங்களை விழ வைத்ததில்லை....!!!
இந்த தலைவன் போராட்டங்களின் போது முதலில் கைதாவார்....
அனால் எப்போதும் கடைசியில் மட்டுமே விடுதலையாவார் !!!!
இந்த தலைவன் எங்களை மதிக்க மறந்ததில்லை !!!
இந்த தலைவன் தன் குடும்ப உறுப்பினர்களை எங்கள் மேல் சவாரி போக வைத்ததில்லை !!!
இந்த தலைவனே எங்களுக்கு தமிழின உணர்வுகளை தன சொல்லாலும் செயலாலும் தினமும் எங்களுக்கு ஊட்டுகிறார் !!!
இந்த தலைவன் எங்களுக்காய் சிந்திக்க கூடியவர் !!!
இந்த தலைவன் தியாகம் செய்த தொண்டர்களின் படத்தை வீட்டில் மாட்டி வைத்து மரியாதை செய்பவர் !!!
இந்த தலைவன் அதிகாரத்தில் இருந்த போதும் ஊழல் செய்து பொருள் சேர்க்கவில்லை !!!
இந்த தலைவன் மட்டுமே அண்ணா பெரியார் கொள்கைகளை தன்னகத்தே வைத்திருக்கிறார்...!!!
இந்த தலைவன்தான் சுய ஒழுக்கத்தில் எங்களுக்கு ஆசான் !!!
இந்த தலைவன் செல்வ சீமாட்டியின் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எளிமையை துறந்ததில்லை !!!
இந்த தலைவன் பெரிதாய் மக்களிடம் இருந்து எந்த சௌகரியத்தையும் பெற்றுவிடவில்லை...ஆனாலும் இந்த மக்களுக்காகவே தினமும் உழைத்து உழைத்து வாழ்கிறார்  !!!
இந்த தலைவனை தொடர்வதால் நேர்மையான இயக்கத்தில் இருப்பதை எண்ணி நெஞ்சை நிமிர்த்தி நடக்கிறோம் !!!!
எந்த கூட்டணியிலிருந்தாலும் எங்கள் கொள்கைகளை கசப்போடு விட்டுக்கொடுத்ததில்லை !!!
மக்கள் காரி துப்பி...வயிரெறிந்து சாபமிடும் இயக்கத்தில் நாங்கள் இல்லை...!!!
எங்கள் கை காசை போட்டு மக்களுக்காக தினம் தினம் போராடுகிறோம்
இனி இழப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை....!!!
இந்த தலைவனுக்கு ....தலைவனுக்குரிய தகுதியுள்ளது !!!
இவர்தான் எங்கள் தலைவர் !!!! இவர்தான் எங்கள் வழிகாட்டி !!!
என்றும் மறுமலர்ச்சி பாதையில்...
இத்தனை செய்த என் காவியத் தலைவனுக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியாமல் என் நெஞ்சம் அரிக்கிறது....
இப்போது தெரிந்து கொண்டேன் தமிழகம் மறுமலர்ச்சிப் பாதையை  நோக்கி பயணிப்பதை...
இனி வரும் காலம் எங்கள் வைகோவின் காலம்...
உயிர் உள்ள வரை உன்னோடு என 
வைகோவின் பாசறைக் கழகக் கண்மணிகள்....
வைகோவை ஏன் தலைவனாய் ஏற்றுக்கொண்டோம் ?????  

தூத்துக்குடி ஸ்டர்லைட் காப்பர் ஆலை வெளியிடும் மாசு கழிவுகளை எதிர்த்து சுமார் 17 வருடங்களுக்கு முன்பே வழக்கு தொடுத்து தானே வாதாடி வழக்கை வென்றெடுத்தார் வைகோ...

வைகோ எங்களை சாலைகளை மரிக்க சொன்னார்
Posted by தமிழ் வேங்கை

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -