தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆழ்கடலில் சங்கத் தமிழ் சரித்திரம்!

புதுச்சேரி அருகே ஆழ்கடலில் புதையுண்டிருக்கும் சங்கத் தமிழ் சரித்திரம்! சென்னையைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் புதுச்சேரியில் டெம்பிள் அட்வென்சர் என்கிற ஸ்கூபா டைவிங் பள்ளியை நடத்திவருகிறார். இவர்தான் முதன்முதலில் மேற்குறிப்பிட்ட சுவரை கண்டுபிடித்தார். இதுகுறித்து அவர், ‘‘ஸ்கூபா டைவிங் பயிற்சிக்காகவும் கடல் பாதுகாப்பு
Posted by தமிழ் வேங்கை

பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்.

1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.

2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
Posted by தமிழ் வேங்கை

தஞ்சைப் பெருங்கோவில்.

ஆதித் தமிழன் எந்த ஒரு செயலையும் " எடுத்தோம், கவிழ்த்தோம் " என்று செய்ததில்லை, தான் செய்து வைத்து விட்டு சென்ற ஒவ்வொரு விடயத்திற்கு பின்னாலும், " அறிவியல், மருத்துவம், விஞ்ஞானம், என்ற எண்ணற்ற விடயங்கள் அதனுடன் விட்டுச் சென்றிருக்கிறான். ஆனால் அதனுடன் சேர்த்து அவன்
Posted by தமிழ் வேங்கை

ஆதிச்சநல்லூர் ஆய்வு முடிவை வெளியிடாதது ஏன்?


பழைய கொற்கை என்பது கடலுக்கு அருகாமையில் இருக்கிறது.

கடல் அங்கிருந்து அய்ந்து மைல் இருக்கிறது. இன்று தமிழகத்தினுடைய அடையாளமாக சொல்லப்படுகிற இந்த ஊர்களெல்லாம் முன்பு எங்கு இருந்தன? எந்த ஊரை பழைய கொற்கையாக, பழைய வஞ்சியாக, பழைய முசிறியாக, நாம் கருத முடியும் என்றால், நாம் நம்முடைய
Posted by தமிழ் வேங்கை

படை குழுக்களின் பெயர்.


இன்றைய ராணுவத்தில் உள்ள படை பிரிவுகளை போல ஏன் ! அதைவிட நுட்பமாக தாக்குதலின் தேவைகேற்ப தமிழக மன்னர்களால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பல குழுக்களாக பிரிக்கப்பட்ட படை குழுக்களின் பெயரும் அவற்றின் எண்ணிக்கையும் :
Posted by தமிழ் வேங்கை

சங்ககாலச் சோழர்களில் கரிகாலன்.


சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை. இவன் அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான், கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று. ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது, (எதிரிகளின்) யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது.
Posted by தமிழ் வேங்கை

சீனாவில் சோழன் வரலாறு.


கி.பி. 1178-ல் ஒரு சீன அறிஞர் சோழ நாட்டைப் பற்றியும் சோழர்படையைப் பற்றியும் பின்வருமாறு எழுதியுள்ளார். "இந்நாடு மேற்கு நாடுகளுடன் போரிட்டுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தினரிடம் ஏறக்குறைய அறுபது ஆயிரம் போர் யானைகள் உள்ளன. ஒவ்வொரு
Posted by தமிழ் வேங்கை

முதலாம் இராசேந்திர சோழன்.


#உங்களுடன் இன்று ஓர் வரலாற்று பதிவு

முதலாம் இராசேந்திர சோழன்
********************************
முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044)
இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு, ஆந்திர, கேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது.
சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.

இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030
வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர், கலிங்கர், ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது.
வடநாட்டை வென்று பெற்ற கஙகை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாக கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு பெருவுடையார்க் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கை' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான்.

நன்றி: தமிழ்முரசு
முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044)
இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன்,
Posted by தமிழ் வேங்கை

அரிக்கமேடு புறக்கணிக்கப்படும் தமிழர் வரலாறு !

அரிக்கமேடு புறக்கணிக்கப்படும் தமிழர் வரலாறு!
கடல் வாணிபத்தில் தமிழர்கள் எப்படி கொடிகட்டிப் பறந்தார்கள் என்பதற்கான சான்றுகள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும், அதைக் கண்டெடுக்காமல், வரலாற்றைப் புறக்கணிப்பதன் மூலம் மாபெரும் தவறைச் செய்து வருகிறது இத்தலைமுறை.

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே இருக்கும் அரிக்கமேடு பகுதி வங்காள விரிகுடா கடலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் சிறு நகரம். கி.மு.200 முதல் கி.பி.200 வரை இங்கு வாணிபம் நடந்ததற்கான ஆதாரங்கள் அகழாய்வு மூலம் கிடைத்துள்ளன. அதிலும், ரோமானிய அரசன் அகஸ்டஸ் உருவம் பொறித்த நாணயங்கள், மணிகள், ரெடகோட்டா பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டதன் மூலம், ரோமானியர்களுடனான வாணிபம் சிறந்து விளங்கியதை அறிய முடிகிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லெழாந்தீய், அரிக்கமேட்டின் சிறப்பை 1769-ல் நூலாக வெளியிட்டார். 1908-ல் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியர் ழவோ துய்ப்ராய், அரிக்கமேட்டுப் பகுதியில் சிறுவர்கள் வைத்து விளையாடிய பலவண்ண மணிகள், மட்பாண்ட ஓடுகளைச் சேகரித்தார். துய்ப்ராய் வேண்டுகோளின்படி, 1939-ல் வியட்நாமில் வந்த ஆய்வறிஞர் கொலுபேவ் ஆய்வின் பயனாக, அகஸ்டஸின் தலை பொறிக்கப்பட்ட கோமேதகப் பதக்கமும், ஒருபுறம் யானை உருவமும் மறுபுறம் சிங்கம் பொறிக்கப்பட்ட ரோமானிய நாணயங்களும் கிடைத்தன.

1944-ல் மார்ட்டின் வீலர் அரிக்கமேடு பகுதியில் அகழாய்வில் ஈடுபட்டார். 1949-ல் கசால் என்பவர் அரிக்கமேட்டு உண்மைகளைப் பிரெஞ்சு மொழியில் நூலாக வெளியிட்டார். 1980-ல் ஆய்வு செய்த, அமெரிக்காவின் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விமலா பெக்லி, 1983-ல் கட்டுரை வெளியிட்டார். இதில் அரிக்கமேட்டுப் பகுதியில் கிடைத்த சாயத்தொட்டி உறைகிணறு, மதுச்சாடி, பிராமி எழுத்து அமைந்த பானை ஓடு, யவனக் குடியிருப்பின் சுவர் பகுதிகளைப்பற்றி ஆராய்ந்து எழுதினார். இதன் விளைவாக, விமலா பெக்லி தம் குழுவினருடன் உருவாக்கிய அரிக்கமேடு தொடர்பான இரண்டு நூல் தொகுதிகள் அரிக்கமேட்டின் பெருமையைத் தாங்கியுள்ளன.

வெளிநாட்டினர் ஆர்வம்: அரிக்கமேட்டின் வரலாற்றை அறிந்துகொள்ள பிற நாட்டவர் அதிகம் ஆர்வம் காட்டினர். காரணம், அண்டை நாடுகளுடனான கடல் வாணிபத்தில் அங்கம் வகித்த பல துறைமுகங்களின் தொடர்ச்சியானதொரு துறைமுகமாக இந்த அரிக்கமேடு விளங்கியிருக்கிறது.

இத்தனை சிறப்புமிக்க இடத்தை, இந்திய தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும், தற்போதைய நவீன காலத்துக்கேற்ற அகழ்வாராய்ச்சிகள் ஏதும் இங்கு நடைபெறவில்லை. ஏற்கெனவே நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி இடங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுவிட்டன. அகழ்வாராய்ச்சி நடத்தப்பட்டதற்கான அடையாளம் மட்டுமே இங்கு தென்படும்.

அரியாங்குப்பம் ஆற்றின் கரையையொட்டி, சிதைந்த நிலையில் இருக்கும் அரிக்கமேடு சுற்றுச்சுவர் மூலம், மிகப் பெரிய வாணிகக் கப்பல்கள், கடலிலிருந்து கழிமுகம் வழியாக கடல்நீர் உள்வாங்கிய அரியாங்குப்பம் ஆற்றின் மூலம் பயணித்து, அரிக்கமேடு வரை வந்திருப்பதை உறுதிபடுத்துகிறது.
கடலை ஒட்டிய தேங்காய்த்திட்டு துறைமுகத்துக்கே தற்போது சிறிய கப்பல்களைக் கொண்டு வர முடியாமல், தரைதட்டிச் சிக்கிக்கொள்ளும் நிலையில் நமது தொழில்நுட்பத்தையும், மதிநுட்பத்தையும் வைத்திருக்கும்போது, அதற்கு பின்னால் 2 கி.மீ. தூரத்தில் இருக்கும் அரிக்கமேடு பகுதி வரை கப்பல்களைக் கொண்டு வந்து நிறுத்தி, வணிகம் செய்த வரலாறு நம் முன்னோர்களின் வரலாறு.

ஆனால் இந்த இடம் தற்போது புதர் மண்டிக் கிடக்கும் தோப்பு போல காட்சியளிக்கிறது. மரங்கள், செடி கொடிகள் மட்டுமே உள்ளன. 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக நம்பப்படும் கட்டடம் ஒன்று, இடிந்த நிலையில் காணப்படுகிறது. இதுவும் விரைவில் மண்ணோடு மண்ணாக மக்கிப்போகும் நிலை ஏற்பட்டுவிடும். இந்த இடம் தற்போது சமூகவிரோதிகளின் பதுங்குமிடமாக மாறிப்போயிருக்கிறது.

இப்பகுதியில் தொல்லியல்துறையின் அருங்காட்சியகம் அமைத்து, ஏற்கெனவே அகழ்வாராய்ச்சி மூலம் கிடைத்த பொருள்களின் புகைப்படங்கள், அவற்றின் வரலாற்றுக் குறிப்புகள், அகழாய்வு செய்த இடங்களின் புகைப்படங்களைப் பார்வைக்கு வைக்கலாம். ஏற்கெனவே கண்டறியப்பட்ட வரலாற்று உண்மைகளை, ஆவணக் காப்பகத்தில் மட்டும் பத்திரப்படுத்தி வைத்திருப்பதால் பயனேதும் இல்லை. கல்வி பயிலும் அடுத்த தலைமுறையினர் இதை அறிந்துகொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். அதற்கேற்ப, பிற மொழிகளில் எழுதப்பட்ட வரலாற்றுச் சிறப்புகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும். இது ஆராய்ச்சி மாணவர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் நமது நாட்டின் வரலாற்றைப் பறைசாற்றுவதாக இருக்கும்.

அதேபோல, கடற்கரை முதல் அரிக்கமேடு வரையிலான நீண்டதொரு, நவீன அகழாய்வின் மூலம் கடற்கரையில் புதையுண்ட நகரங்கள், வாணிப மையங்கள், கட்டடங்களைக் கண்டறிய முடியும் என்று அகழ்வாராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். சுதந்திரத்துக்கு முன்பு பழைய முறையில் அகழாய்வு நடத்தியதால் கிடைத்ததைவிட, நவீன முறையில் மீண்டும் இப்பகுதியில் ஆராய்ந்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இங்கு அகழாய்வு நடத்த புதுச்சேரி அரசு பல முறை நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்தாலும், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

அரிக்கமேடு பகுதியில் புதைந்திருக்கும் நமது உண்மையான, முழுமையான வரலாற்றை நாம் அறிய முடியவில்லை. இதற்கு காரணம் அலட்சியம் தவிர வேறில்லை. நமது முன்னோர்களைவிட, அதிநவீன தொழில்நுட்பம் வைத்திருக்கும் நாமே சிறந்தவர்கள் என்ற தற்பெருமையால், முன்னோரது அருமை தெரியாமல், நமது சொந்த வரலாற்றையும், அதன் பெருமைகளையும், அவர்கள் கடைபிடித்த தொழில்நுட்பங்களையும் புறக்கணிக்கும் நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

http://dinamani.com/special_stories/article1301330.ece

கடல் வாணிபத்தில் தமிழர்கள் எப்படி கொடிகட்டிப் பறந்தார்கள் என்பதற்கான சான்றுகள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும், அதைக் கண்டெடுக்காமல், வரலாற்றைப் புறக்கணிப்பதன் மூலம் மாபெரும் தவறைச் செய்து வருகிறது இத்தலைமுறை.

புதுச்சேரி அரியாங்குப்பம் அருகே இருக்கும்
Posted by தமிழ் வேங்கை

உலகில் முதன் முதலில் விமானத்தை கண்டுபிடித்த குபேரன் சகோதரர்கள் .??


இங்கே விமானத்தை வடிவமைத்தது மாயன்..

இந்த மாயன் தான் விமானத்தை கண்டு பிடித்தாரா? இல்லை இவருக்கும் மாயன்நாகரிகத்துக்கும் சம்பந்தம் இருக்கிறதா அங்கிருந்துதான் இந்த தொழில் நுட்பம் கொண்டு வரபட்டதா?
Posted by தமிழ் வேங்கை

அரிசியின் பூர்விகம்... நம் தமிழகம்தான்


அரிசியின் பூர்விகம்... மிகவும் சுவாரசியமான சரித்திரம். சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன், முதன் முதலாக சீனாவில்தான் நெல் பயிரிடப்பட்டதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள்... கருதிவந்தார்கள். சீனாவில் இருந்துதான் இந்தியா, இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு இது பரவியதாக நம்பிக்கை
Posted by தமிழ் வேங்கை

அழிவுற்ற தமிழர்களின் தலைநகரங்கள்..!

ஈழத்தமிழரும்(நாகர்), இயக்கரும் இன்றைய இலங்கையை ஆண்டு வரும் வேளையில், மற்றைய தமிழ் இராச்சியங்கள் பெரும் புகழோடும், கப்பல்கள், பெரும் துறைமுகங்கள் (பூம்புகார்) என்று வாழ்ந்து வந்தார்கள். அந்த வேளையிலே தான் சுமார் 5500 ஆண்டுகள் முன் அளவில் மகாபாரத யுத்தம் நடந்ததாக நம்பப்படுகின்றது. இது துவாபர யுகத்தின் முடிவும் கலியுகத்தின் ஆரம்பமும் ஆகும்.

இக்கால கட்டத்தில் உலகில் பெரும் அழிவுகள்
Posted by தமிழ் வேங்கை

பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..!

உலக அதிசயப்படியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக்கலை மற்றும் பொறியியல் அதிசயமான இசைத் தூண்கள்..!

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர்,
Posted by தமிழ் வேங்கை

பத்தாயிரம் போர்க்கப்பல்கள் நின்றிருந்த - காவிரிபூம்பட்டினம் !

"காவிரிப்பூம்பட்டினம்" - கடலுக்கடியில் கண்மூடிக்கிடக்கும் நம் வரலாற்றைத் தேடி ஒரு பயணம் ! 
கலை, இலக்கியம், வீரம், கொடை, பண்பாடு, நாகரீகம், போன்ற பலவற்றை இந்த உலகிற்கே கற்றுத்தந்த நம் தமிழ் இனம், இன்று தன் வரலாற்றையே மறந்து மேல் நாட்டு மோகத்தில்
Posted by தமிழ் வேங்கை

ராஜேந்திர சோழரின் ஆட்சியில் சோழ பேரரசு.


சோழர்கள்:

பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களுக்கிடையே இருந்த சண்டையைப் பயன்படுத்திக் கொண்டு 850 ஆம் ஆண்டுகளில் விஜயாலய சோழர் தஞ்சாவூரைக் கைப்பற்றி இடைக்கால சோழர் ஆட்சிக்கான அடித்தளத்தை அமைத்தார். இடைக்காலத்தில் சோழர் வம்சத்தை விஜயாலய சோழர் நிறுவினார். அவரது மகன் முதலாம் ஆதித்யா சோழர்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகளைச் செய்தார். 903 ஆம் ஆண்டில் பல்லவ பேரரசுக்குள் நுழைந்து பல்லவ அரசன் அபராஜிதாவை போரில் கொன்றதன் மூலம் பல்லவர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முதலாம் பராந்தக சோழன் அதிகாரத்தில் பாண்டிய நாடு முழுவதும் சோழப் பேரரசு பரவியது. சோழப் பேரரசுக்குள் தங்களது பகுதிகளை விரிவாக்கம் செய்த ராஸ்ட்ராகுட்டா குழுக்களினால் தனது ஆட்சிக் காலத்தின் இறுதியில் முதலாம் பராந்தக சோழன் பாதிக்கப்பட்டார்.


ராஜேந்திர சோழரின் ஆட்சியில் சோழ பேரரசு:

மன்னர்களின் முறையற்ற ஆட்சித் திறமை, அரண்மனைக் கிளர்ச்சி மற்றும் வாரிசுகளின் தகராறு ஆகியவை ஏற்பட்டு அடுத்து வந்த ஆண்டுகளில் சோழர்கள் தற்காலிகமாக வீழ்ச்சியடைந்தனர். பலமுறை முயற்சி செய்தும் பாண்டிய நாட்டை முழுவதுமாக வீழ்த்த முடியவில்லை. மேலும் வடக்கு பகுதியில் ராஸ்டராகுடா குழுவினரும் மிகவும் வலிமை வாய்ந்த எதிரிகளாக இருந்தனர். எனினும், முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு 985 ஆம் ஆண்டு சோழர் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. இராஜராஜன் மற்றும் அவரின் மகனான முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியாக சோழர்கள் ஆசியாவில் கவனிக்கத்தக்க வீரர்களாக மாறினர். தெற்குப் பகுதியில் மாலத்தீவுகளில் இருந்து வடக்கில் வங்காளத்தில் உள்ள கங்கை ஆற்றங்கரைப் பகுதிகள் வரை சோழர்களின் ஆட்சிப் பகுதிகள் பரவி இருந்தன. தென்னிந்திய தீபகற்பம், இலங்கையுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய பகுதிகளில் இராஜராஜ சோழன் வெற்றிக் கொண்டார். மலேய தீவுக்குழுமத்தில் இருந்த ஸ்ரீவிஜயா பேரரசை தோற்கடித்து ராஜேந்திர சோழன் சோழர்களின் ஆட்சியைப் பரப்பினார்.

பீகார் மற்றும் வங்காளப் பகுதியின் அரசனான மகிபாலா என்பவரை இவர் தோற்கடித்தார். வெற்றியைக் கொண்டாடும் விதமாக கங்கைகொண்ட சோழபுரம் (கங்கைப் பகுதியில் சோழர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக உருவாக்கப்பட்ட நகரம் ) என்ற புதிய தலைநகரத்தை உருவாக்கினார். சோழப் பேரரசு அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போது இலங்கையின் தெற்கு தீபகற்ப பகுதியிலிருந்து தங்களது பகுதிகளை வடக்கிலுள்ள கோதாவரி பகுதி வரை விரிவாக்கியது. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் கங்கை ஆறு வரை நீண்டிருந்த பகுதிகளை சோழர்கள் அடக்கி ஆட்சி செய்தனர். மலேய தீவுக்குழுமத்திலிருந்த ஸ்ரீவிஜய பேரரசுக்குள் படையெடுத்து சோழப் பேரரசின் கடற்படை வீரர்கள் வெற்றி கண்டனர். சோழப் பேரரசின் இராணுவ வீரர்கள் தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் கெமர் பேரரசுகளிடம் நேரடியாக வரி வசூல் செய்தனர்.[60] இராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு மிகவும் வளர்ச்சியடைந்தது. பேரரசை சுயமாக ஆட்சி செய்து கொள்ளும் பல உள்ளூர் பகுதிகளாகப் பிரித்தனர். அவற்றின் அதிகாரிகள் பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


பிரகதீசுவரர் ஆலயம்:

இந்த காலம் முழுவதும், சோழர்கள் ஆட்சியை இலங்கையிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடும் சிங்களர்கள், தங்களது பாரம்பரியப் பகுதிகளின் சுயாட்சியை மீண்டும் பெற முயற்சித்துக் கொண்டிருந்த பாண்டிய மன்னர்கள், சோழப் பகுதிகளைக் கைப்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த மேற்கு தக்காணப் பகுதிகளைச் சேர்ந்த சாளுக்கியர்கள் ஆகியோரால் சோழர்களுக்கு தொடர்ந்து தொல்லை ஏற்பட்டது. சோழர்கள் தங்களின் எதிரிகளுடன் இந்த வரலாற்றுக் காலம் முழுவதும் தொடர்ச்சியாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சாளுக்கியர்களும் சோழர்களும் தங்களது அதிகாரச் சக்தியில் சம அளவில் இருந்தனர். துங்கபத்ரா ஆற்றை எல்லையாகக் கொள்வதற்கு இரண்டு பேரரசுகளும் இரகசியமாய் ஒப்புக் கொண்டனர். வெங்கி பேரரசில் சோழர்களின் தலையீடு காரணமாக இரண்டு பேரரசுகளுக்கிடையே கருத்து வேறுபாடு அதிகரித்துக் கொண்டிருந்தது. சோழர்களும் சாளுக்கியர்களும் பலமுறை போரிட்டுக் கொண்டனர். இவர்களது போர் சில நேரங்களில் முடிவில்லாத இக்கட்டான நிலையில் இருந்துள்ளது.

கோதாவரி ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள வெங்கி பகுதிகளைச் சுற்றியுள்ள கிழக்கு சாளுக்கியர்களுடனான சோழர்களின் திருமணம் மற்றும் அரசியல் உறவு இராஜராஜன் ஆட்சிக் காலத்தில் சோழர்கள் வெங்கி பேரரசுக்குள் நுழைந்ததிலிருந்து தொடங்கியது. வீரராஜேந்திர சோழனின் மகன் ஆதிராஜேந்திர சோழன் 1070 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலகத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து சோழர்களின் ஆட்சிக்காக சாளுக்கிய சோழர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். குலோத்துங்கன் வெங்கி பேரரசின் அரசன் ராஜராஜ நரேந்திராவின் மகனாவார். சாளுக்கிய சோழர் வம்சத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் விக்ரம சோழன் போன்ற திறமை வாய்ந்த அரசர்கள் குறைவாகவே இருந்தனர். சோழ அரசர்கள் தங்கள் அதிகாரத்தை இழப்பது இந்த காலக்கட்டத்திலிருந்து தொடங்கியது. சிங்களர்கள் மீட்டெழுச்சி காரணமாக இலங்கையின் தீவுப் பகுதிகளில் சோழர்கள் தங்களது அதிகாரத்தை இழந்து வெளியேறினர். 

மேற்கு பகுதியின் சாளுக்கிய அரசனான ஆறாம் விக்ரமாதித்யா என்பவரிடத்தில் வெங்கிப் பேரரசையும், கங்காவாதி (மைசூரின் தெற்கு மாவட்டங்கள்) பகுதிகளை சாளுக்கிய இராணுத்தைச் சேர்ந்த போசள விஷ்ணுவர்தனா என்பவரிடமும் 1118 ஆம் ஆண்டுகளில் தங்கள் அதிகாரத்தை சோழர்கள் இழந்தனர். பாண்டிய நாட்டுப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பாண்டியர்களின் ஆட்சிப் பொறுப்பிற்கு பலர் உரிமைக் கோரினர். இதன் காரணமாக உள்நாட்டுப் போரில் உரிமைப் பெற்ற பிரதிநிதியாக சிங்களர்கள் மற்றும் சோழர்கள் கலந்துக் கொண்டனர். பாண்டியர்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டில் வைப்பதற்காக காஞ்சிபுரத்தில் நிரந்தரமாக ஒரு போசள் இராணுவம் சோழர்கள் வாழ்ந்த இறுதி நூற்றாண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சோழ வம்சத்தின் கடைசி அரசானாக மூன்றாம் ராஜேந்திர சோழன் இருந்தார். காடவர் தலைவர் முதலாம் கோப்பெருஞ்சிங்கன் ராஜேந்திராவை வெற்றிக் கொண்டு அவரை சிறையில் அடைத்தார். ராஜேந்திராவின் ஆட்சி முடிவடைந்த காலத்தில் (1279) சோழர் பேரரசு முழுவதையும் பாண்டியர்கள் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்
சோழர்கள்:
பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களுக்கிடையே இருந்த சண்டையைப் பயன்படுத்திக் கொண்டு 850 ஆம் ஆண்டுகளில் விஜயாலய சோழர் தஞ்சாவூரைக் கைப்பற்றி இடைக்கால சோழர் ஆட்சிக்கான அடித்தளத்தை அமைத்தார்.
இடைக்காலத்தில் சோழர் வம்சத்தை விஜயாலய
Posted by தமிழ் வேங்கை

அகத்தியமலை-- பொதிகைமலை-- தமிழ்மலை அதிசயங்கள்:

வீசும் காற்றின் திசையையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையும் பொறுத்து தென்றல், வாடை என பிரித்தனர் நம்மவர்கள். தென்கோடிக்கரையில் இருந்தாலும் குமரியில் இருந்து தென்றல் வீசுவதாக கூறுவதில்லை. பொதிகையில் இருந்து அது புறப்படுவதாகத்தான் பேச்சு. சூரியனோடும்,
Posted by தமிழ் வேங்கை

மதுரை தமுக்கம் திடலின் வாயிலில் உள்ள தமிழன்னை சிற்பம்.


மதுரை தமுக்கம் திடலின் வாயிலில் உள்ள தமிழன்னை சிற்பம்.

தமிழ்த்தாய்..!

சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள். 

வல முன் கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உருத்திராட்ச மாலையும், கீழ் இடக்கையில் சுவடியும் இடம்பெற்றுள்ளன. தமிழ்த்தாயின் வலக் கால் கீழே தொங்கியவாறும், இடக்கால் மடித்த நிலையிலும் தமிழன்னை சுகாசனமாக வீற்றிருக்கிறாள். தமிழ்த்தாயின் கால்களைச் சிலம்பும், தண்டையும் அணி செய்கின்றன. "நடராச மூர்த்திக்குப் பிறகு இம்மூர்த்தியே பல்லாற்றானும் கலை, தத்துவம், விஞ்ஞானம் ஆகிய மூன்றின் கருத்துச் செறிவும் உடையது.தமிழ்த்தாய்..!
சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில்
Posted by தமிழ் வேங்கை

கடல் கடந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கிய..சோழன்.

முழுமையாக படிக்கவும்.....!

இந்திய சரித்திரத்தின் வீரப்புருஷர்கள் தற்காப்பு யுத்தத்தையே தூக்கிப் பிடித்தபோது, எதிரிகள் மீது படையெடுத்து அவர்களைப் பந்தாடிய இரண்டு தமிழர்கள் இருந்தார்கள். வடக்குப் படையெடுப்புகளால் முடக்கப்பட்டபோது, தெற்கை எட்டுத்திக்கிலும் பட்டொளி வீசிப் பறக்கும் பளபளக்கும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி தகதகவென மின்னும் தந்தையும், மகனும் வந்தார்கள். அவர்கள் வாள் வீச்சு வடக்கையும் தாக்கி
யது, கடல் கடந்தும் தாவியது. வேழம் அவர்களுக்கு வெள்ளாடாகவும், மலைகள் அவர்களுக்கு மண்மேடாகவும் காட்சியளித்தன.

‘வடமேற்கில் தொடர்ந்து கஜினி முகமது படையெடுத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில்தான் ஒரு மாவீரன் இந்தியாவின் தெற்குப் பகுதியிலிருந்து ஒரு பெரும் படையுடன் கிளம்பி வடக்கு நோக்கி வந்து சேர்ந்தான். அவனுடைய வீரர்களை யாராலும் எதிர்த்து நிற்க முடியவில்லை. இன்றைய ஹைதராபாத், ஒடிஸா, வங்காளம் எல்லா நாடுகளும் அந்த மன்னன் வீரத்தின்முன் மண்டியிட்டன’ என்று, ‘வந்தார்கள்-வென்றார்கள்’ என்ற சரித்திரம் படைத்த சரித்திர நூலில் மதன் குறிப்பிடுகிறார். அவர் எழுப்பியுள்ள வினாவைப்போல கஜினியும், ராஜேந்திர சோழனும் சந்தித்திருந்தால், இந்தியாவின் வரலாறு வேறு விதமாக எழுதப்பட்டிருக்கும். ஆனால் ராஜேந்திரனின் ஆர்வமோ மலேயா, சுமத்திராவைக் கைப்பற்ற வேண்டும் என்பதாக இருந்தது.

எவரும் சிந்திக்காத திசையில் ராஜேந்திர சோழனால் மட்டும் எப்படி யோசிக்க முடிந்தது? வாளைச் சுழற்றிக்கொண்டு வான் முட்டும் வீரமுழக்கம் இட்டுக்கொண்டு எப்படி வங்கம் வரை செல்ல முடிந்தது? காரணம் எளிது. எதிரியாய் எண்ணி அவர்கள் பலங்களைத் துல்லியமாகக் கவனித்து, அவற்றை உடைக்கும் வலிமையை உருவாக்கிக் கொண்டான். வெளிநாடுகளில் சிம்ம கர்ஜனை புரிந்து சீறி எழுந்து அந்நாட்டு வீரர்களை துவம்சம் செய்ய அவனால் எளிதில் முடிந்ததற்கு அவனுடைய இந்த உத்தியே காரணம்.

போர் என்பது உடல்களுக்குள் நடக்கிற யுத்தம் மட்டுமல்ல, அது மனங்களிடையேயும் நிகழும் மல்யுத்தம் என்பதை அவன் துல்லியமாகத் தெரிந்து வைத்திருந்தான். அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் முன்கூட்டியே ஊகித்து அவற்றைக் கச்சிதமாக உடைத்துத் தகர்த்தவன் அவன்.

தந்தை ராஜராஜன் என்கிற மாபெரும் நிர்வாகி உருவாக்கித்தந்த அடித்தளமும், ஈட்டிய செல்வப்பொதியும், உண்டாக்கிய நிலநிர்வாக முறையும், அடிக்கல் நாட்டிய கடற்படையும் அவனுக்குப் பரந்துபட்ட வாய்ப்பை உருவாக்கியது. அதில் மளமளவென கட்டுமானம் செய்து உயர்ந்த கோபுரத்தை அவனால் எழுப்ப முடிந்தது.
ராஜேந்திரசோழனின் சாகசங்கள் சுவாரசியமானவை. அவனும் அவன் தந்தையும் ராஷ்டிரகூடர்களைப் போர்க்களத்தில் ஓட ஓட விரட்டியவர்கள். வடமேற்குக் கர்னாடகா, தெற்கு மகாராஷ்டிரம் ஆகியவற்றில் சோழ சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தினர். துங்கபத்ராவைத் தாண்டி சாளுக்கியர்களை வீழ்த்தினார்கள். பனவாசி, மனயகேடா நாட்டு மன்னர்கள் சோழர் படைகள் வருவதைக்கண்டதும் பயந்துபோய் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஒளிந்து கொண்டார்கள். வடக்கு ஹைதராபாத்தையும் கைப்பற்றினர்.

பராந்தகன், பாண்டியர்களைப் பந்தாடிய போது, பயந்து ஓடிய பாண்டிய மன்னன் இலங்கை மன்னனிடம் மகுடத்தை ஒப்படைத்து ஓடிப்போனான். அதைத் தன் படையெடுப்பில் மீட்டான் ராஜேந்திரன். சிங்களமன்னனின் மகுடத்தைத் தட்டிப்பறித்து அவனைக் குறுகச் செய்தான். சிங்கள மன்னன் ஐந்தாம் மஹிந்தனைக் கைது செய்ய... அவன் 12 ஆண்டுகள் சோழர் சிறையில் இருந்து இறந்துபோனான்.
பாண்டியர்களையும், சேரர்களையும் அமுக்கி வைத்துக் கப்பம் கட்டும் நாடுகளாக மாற்றினான். பிறகு தன் மகனை ஜயவர்மன் சுந்தர சோழ பாண்டியன் என்கிற பெயரில் மதுரையின் ஆளுநராக நியமித்தான். ராஜேந்திரன் கலிங்கத்தை வென்றான். அப்போது கோதாவரிக்கரையின் படையின் பின்வரிசையில் அவனே நின்று பகைவர்கள் தாக்காதபடி பாதுகாப்பு வளையம் அமைத்தான். வங்க மன்னன் மஹிபாலாவை போர்க்களத்தில் வென்றான்.

ராஜேந்திரசோழன் இயல்பாகவே துணிச்சலும், வீரமும் கொண்ட தளபதி. போரின் நுணுக்கங்களையும், அசைவுகளையும் சரியாகக் கணிக்கும் ஆற்றல் பெற்றவன். எதற்கும் அஞ்சாத தைரியம் கொண்ட அவன் எப்படிப் போர்க்களத்தில் அவனை எதிர்த்து வந்த மதம் பிடித்த யானையை தனியொரு வீரனாக வெட்டிச் சாய்த்தான் என்பதை ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். அதுவரை தமிழகத்தில் படை திரட்டுவது என்கிற பழக்கமே இருந்தது. ஆனால் ராஜராஜன் நிலையான படையை உருவாக்கி, அதில் இருக்கும் வீரர்களை செதுக்கி செதுக்கி சிறந்த திறன் கொண்டவர்களாக மாற்றினான். அவனுடைய மகனும் அவர்கள் எப்போதும் கூர்மைப்படுத்தப்பட்ட குத்தீட்டியாகத் திகழும்படி போர்களை வடிவமைத்தான். ராஜேந்திரன் காலத்தில் சோழப்படை துளியும் ஓய்வின்றி தொடர்ந்து போர்க்களத்திலேயே கழித்தது. ஆனாலும் அவர்கள் அலெக்ஸாண்டருடைய வீரர்களைப்போல ‘ஹோம் சிக்’ என்று அடம்பிடிக்கவில்லை.

ராஜேந்திரனுடைய வங்கப்படையெடுப்பு அவனுடைய கடற்படை தெற்காசிய நாடுகளுக்குப் படையெடுப்பதற்கான முன்னோட்டமாகவே இருந்தது. பிற்காலச் சோழர்கள் இந்தியப் பெருங்கடலையும், வங்காள விரிகுடாவையும் நிலப்பரப்பாக நினைக்குமளவு கப்பல் கட்டும் பணியில் தேர்ந்து விளங்கினர். கடலும், காற்றும் அவர்கள் கலங்களுக்குக் கட்டுப்பட்டன. அவர்கள் கடல்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இரவும் பகலும் சோழக் கப்பல்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, வணிகக்கப்பல்கள் பத்திரமாகப் பயணிக்கப் பாதுகாப்பு அளித்தன. அதுவரை அப்படியொரு அமைப்பு தமிழகத்தில் விரிவாக ஏற்படுத்தப்படவில்லை. வர்த்தகம் செழிக்க ஏற்படுத்தப்பட்ட நாவாய், விரிவுபெற்று சக்தி வாய்ந்த கடற்படையாக உருவம் பெற்றது. ‘சோழர்கள் கடலின் தோழர்கள்’ என்ற நிலை ஏற்பட்டது.

பத்தாம் நூற்றாண்டின் பின்பாதியில் மூன்று புதிய சக்தி வாய்ந்த பேரரசுகள் உலகில் உதயமாயின. எகிப்தில் பாட்டிமிட்ஸ், சீனத்தில் சாங், இந்தியாவில் சோழர்கள். மூவருமே இந்தியப் பெருங்கடல் வணிகத்தில் பெருமளவு ஈடுபட்டனர். வரலாற்று ஆசிரியர்கள், சோழர்கள் தெளிவாகவும், உறுதியாகவும் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து கடற்படையெடுப்பை நடத்தியதாக சிலாகிக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் அவசரக் கோலத்தில் படையெடுப்பு நிகழ்த்தவில்லை. எந்தப் போர்க்களத்திலும் சின்ன சிராய்ப்புகூட ஏற்படாமல் சோழப்படை தொடர்ந்து வெற்றிக்கொடியையே நாட்டியது. இலங்கையும், மாலத்தீவுகளும் அவர்களுடைய கடல் வணிகத்திற்கு முக்கிய மையங்களாகத் தேவைப்பட்டன. ஒரிஸா, வங்கம் போன்ற நாடுகளும் அவர்களுடைய கடல்வணிகத்தைத் தடைசெய்து அவ்வப்போது வியாபாரிகளுக்குத் தொந்தரவு கொடுத்து வந்ததால் ஏற்பட்ட எரிச்சலால் அவற்றை அடித்து நொறுக்கி, ‘வாலைச் சுருட்டிக்கொண்டு இருங்கள், இல்லாவிட்டால் நான் வாளை உயர்த்தவேண்டியிருக்கும்’ என்று எச்சரிப்பதற்காகவே ராஜேந்திரன் படைகளுடன் திக்விஜயம் செய்தான்.

சோழர்களை அனுசரித்துச் சென்றால் மட்டுமே அமைதியாக வாழமுடியும் என்கிற சூழல் தெற்காசிய நாடுகளுக்கு ஏற்பட்டது. ஆர்ப்பரிக்கும் அலைகள் வழியிலுள்ள நாடுகளில் ஆழிப்பேரலை வந்ததைப்போல் ஆரவாரம் நிகழ்த்தும். பிரளயம் போன்ற பேரோசையுடன் கம்பீரமாய் நீரைக் கிழித்துச் செல்லும். சோழர்கள் நாவாய் புறப்பட்டால், கடலையே ஆக்கிரமித்துக்கொண்டு மீன்கள் நீந்தக்கூட இடமில்லாத அளவு மரக்கலங்கள் அணிவகுக்கும். அவற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே எதிரிநாட்டு மன்னர்கள் நடுங்கி ஒளியுமளவு அவை காட்சியளித்தன. அங்கோர்வாட் மன்னன் முதலாம் சூர்ய வர்மன் விசுவாசத்தை நிரூபிக்க, எதிரிகளை வதைக்க உபயோகப்படுத்திய அவனுடைய சொந்தத்தேரை ராஜேந்திரனுக்குப் பரிசாக அளித்து தாஜா செய்தான்.

கடாரத்தை ஆண்ட ஸ்ரீவிஜய ராஜ்ஜியத்திற்கும் சோழர்களுக்குமிடையே நட்புறவு இருந்துவந்தது. ராஜராஜன் காலத்திலிருந்து விலையுயர்ந்த பரிசுகளைச் சோழர்களுக்கு அளித்து, அவர்களிடம் கடார மன்னர்கள் கடமைப்பட்டவர்களாகவே காட்டிக்கொண்டனர். 1016ம் ஆண்டு ஸ்ரீவிஜயம் ஜாவாவை வீழ்த்தியவுடன், சீனத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு பெரும் சக்தியாக ஊடுருவப் பார்த்தார்கள். ராஜேந்திரன் சீனத்திற்கு 1020ம் ஆண்டு ஒரு தூதுக்குழுவை அனுப்பி, சாங் சாம்ராஜ்ய மன்னன் எந்த வகையிலும் கடற்படையெடுப்புக்கு ஊறு விளைவிக்காதவாறு பார்த்துக்கொண்டான். அதுதான் அவனுடைய ராஜதந்திரம். ஏற்கெனவே 1022-23ம் ஆண்டுகளில் கலிங்கம் மூலமாக கங்கைவரை சென்று எச்சரிக்கை செய்து, தான் எடுக்கவிருக்கும் படையெடுப்புக்கு இடைஞ்சலில்லாமல் பார்த்துக்கொண்டான். புலிவேட்டைக்குப் போகும்போது, எலிகள் வந்தால் அவற்றை நசுக்க சக்தி விரயமாகுமே என்பதால்தான்.

1025ம் ஆண்டு ஸ்ரீவிஜயம் நாட்டிற்குச் சோழக் கடற்படை புறப்பட்டது. ஒவ்வொரு கப்பலிலும் திறம் வாய்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட சோழ வீரர்கள். வாளைச் சுழற்றுவதிலும், அம்பில் பந்தத்தைச் சுற்றி நெருப்புக்கோளங்களை குறி தவறாமல் எறிவதிலும் அவர்கள் கில்லாடிகள். உணவு, உடை, ஆயுதம் என்று நுணுக்கமாகச் செய்யப்பட்ட அத்தனை ஏற்பாடுகளுடன் அந்தப் படையெடுப்பு முடுக்கிவிடப்பட்டது. ஏற்கெனவே பரிச்சயமான வழியில், ஏதோ பள்ளிக்குப் போவதைப்போல பதற்றமில்லாமல் பயணம். சோழர்கள் வழியில் மலாய, சுமத்ரா என்று அவர்கள் அத்தனை துறைமுகங்களையும் அடித்து நொறுக்கியவாறு முன்னேறினர். சீனத்துடன் தொடர்பில்லாமல் இருந்த அந்த நாடுகள், சீன உதவியையும் கோரமுடியவில்லை.

நேர்த்தியாக வாள் வீசும் வாள் பெற்ற கைக்கோளர்களும், குறி தப்பாமல் அம்பை இலக்கில் சரமாரியாகச் செலுத்தும் வில்லிகளும் எதிரிகளை வெட்டிச்சாய்த்தும், குத்திக்கிழித்தும் கடலைச் சிவப்பாக்கும் வேலைகளைச் செய்தனர். கடாரம் படையெடுப்பின்போது ராஜேந்திரனே சோழப் படையின் தளபதியாய் இருந்தான். ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் சோழப் படையெடுப்பில் ஆடிப்போனது. சோழர்களின் மரக்கலங்களை எதிர்த்து புறப்பட்டு வந்த ஸ்ரீவிஜயக் கப்பல்கள் மின்னல் வேகத்தில் பாய்ந்துவந்த எரியம்புகளாலும், தீப்பந்தங்களாலும் சேதமடைந்து சின்னாபின்னமாயின. ராஜேந்திரனின் வீரர்கள் விட்ட அம்புகள் கப்பல் செலுத்தியவர்களின் கழுத்திற்குக் குறி வைத்தன. சீறிப் பாய்ந்த சோழவீரர்கள் அந்தப் படகில் இருந்த கடார சிப்பாய்களைக் கண்டந்துண்டமாக வெட்டினர். கடார சிப்பாய்களின் கால்சராய் நனைய கடல் மட்டம் உயர்ந்தது. சோழப்படையின் வேகமும், புயல் போன்ற தாக்குதலும் அவர்களை கதிகலங்க வைத்தன. கடாரத்தையும், ஸ்ரீவிஜயத்தையும் சோழர்படை சூறையாடியது.

அந்நாட்டு மன்னனே கைதியாகும் சூழல் ஏற்பட்டது. சங்க்ரம விஜயதுங்கவர்மன் சிறைபிடிக்கப்பட்டான். ராஜேந்திரனின் கால்களில் விழுந்து விடுதலை பெற்றான். கப்பற்படை திரும்பி வரும் வழியில் மலேயா, சமிரி, நிக்கோபார் தீவுகளையெல்லாம் வெற்றிபெற்றுத் திரும்பியது.

ராஜேந்திரனுடைய தொடர் வெற்றி, படை பலத்தாலோ உணர்ச்சியும், உள்ளுணர்வு மிக்க வீரர்களாலோ மட்டும் விளையவில்லை. அது நேர்த்தியான ஒருங்கிணைப்பின் பலன். பல்லாண்டுகள் சிறிது சிறிதாக வடிவமைக்கப்பட்ட வெற்றிக்கோட்டை. எதிரிகள் என்ன செய்வார்கள் என்பதை முன்கூட்டியே ஊகித்து அந்தத் தடைகளை அப்புறப்படுத்திவிட்டு சுற்றுலா போவதைப்போல அவன் படைகள் சென்றுவர ஏற்பாடுகள் செய்தான். அவனுக்கு அவனே எதிரியாய் எண்ணி செயல்பட்டதால், எதிரிகள் அவனை ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவன் பெருமைக்காகப் படையெடுக்கவில்லை. அந்த நாட்டின் மானம் காப்பாற்றப்பட வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொரு வீரனின் உள்ளத்தில் ஏற்பட்டதாலும், பொருளாதாரம் மேம்படும் பொது நோக்கமிருந்ததாலும் அவன் வெற்றியைத் தவிர வேறெதையும் சந்திக்கவில்லை
தமிழக சரித்திரத்தின் வீரப்புருஷர்கள் தற்காப்பு யுத்தத்தையே தூக்கிப் பிடித்தபோது, எதிரிகள் மீது படையெடுத்து அவர்களைப் பந்தாடிய இரண்டு தமிழர்கள் இருந்தார்கள். வடக்குப் படையெடுப்புகளால் முடக்கப்பட்டபோது, தெற்கை எட்டுத்திக்கிலும் பட்டொளி வீசிப் பறக்கும்
Posted by தமிழ் வேங்கை

சித்தர்களை தெரிந்துகொள்வோம்.


தமிழ்ச்சித்தர்களின் பெருமை, தமிழின் பெருமை!
என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யு மாறே..


என்பது திருமூலரின் பெருமிதம் மிகுந்த பிரகடனம்.

சித்தர்கள் என்றால், ஏதோ மருத்துவத்தையும்
ஆன்மீகத்தையும் மட்டுமே ஆய்ந்தும் தெளிந்தும் உலகுக்கு அளித்தவர்கள் என்ற கருத்துதான் பரவலாக
Posted by தமிழ் வேங்கை

விரல்---பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை.

விரல் (கணிதம்) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள், (கயிறு, கம்பு, துணி...) நீளங்கள் மற்றும்
Posted by தமிழ் வேங்கை

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -