தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

சிரிப்பதற்கு மட்டும்.
ஐரோப்பாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு புதிய தலைவர் நியமிப்பதற்காக, ஒரு பெரிய வேலை வாய்ப்பு முகாம் ஏற்படுத்தினார் , அதில் 5000 பேர் கலந்து கொண்டனர்.
அதில் ஒருவர் நமது " ராமசாமி"...
...
பில் கேட்ஸ்: அனைவருக்கும் வணக்கம்,
உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள் (java) பற்றி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்..

2000 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்..

பில் கேட்ஸ் : இதுவரை 100 பேருக்கு மேல் நிர்வாகம் செய்த திறமை இருக்கிறதோ அவர்கள் மட்டும் இருக்கவும்,

2000 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : இதுவரை நான் யாரையும் நிர்வகிக்க வில்லையே , பார்ப்போம் என்ன நடக்கும் என்று..

பில் கேட்ஸ்: யாரிடம் எல்லாம் பல்கலை கழக பட்டம் இருக்கிறதோ, அவர்கள் மட்டும் இருங்கள்...

500 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : நான் பதினைந்து வயதிலயே பள்ளியை விட்டு ஓடி விட்டேனே, பொறுத்திருந்து பார்ப்போம்..

பில் கேட்ஸ் : யாருக்கெல்லாம் ரஷிய மொழி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள்..

498 பேர் வெளியேறிவிட்டனர்.

ராமசாமி : எனக்கு அம்மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாதே, முக்கால் கிணறு தாண்டிவிட்டோம் என்ன நடக்கும் என்று பார்ப்போம்...

பில் கேட்ஸ் அவர்கள் அருகில் வந்து, நீங்கள் இருவரும் தான் எல்லா தகுதியையும் பெற்று இருக்கிறீர்கள்,­ எனவே நீங்கள் இருவரும் ரஷிய மொழியில் உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளு­ங்கள்...

ராமசாமி, அமைதியாக மற்றவரை பார்த்து...

எந்த ஊரு...?

மற்றவர் : " திருநெல்வேலி பக்கம் "
 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -