- Back to Home »
- தமிழகம் »
- தாயக தமிழகத்திலும் மறுக்க முடியாத உண்மை ஆயிற்று ..
Posted by : தமிழ் வேங்கை

முக்கியமாக கல்லூரி இளைஞர்களிடம் நம் மறைக்கப்பட்ட வரலாறு , நம் தமிழ் மொழியின் தொன்மை , மற்றும் அழிவுபெறும் மொழியை செம்மை படுத்துதல் முறை போன்றவற்றை இளைஞர்களிடம் பரப்புரை அதன் சிந்தனைகளையும் விவாதித்து வருகிறார். முக்கியமாக இந்திய ஆளுகையின் கீழ் வாழும் தமிழகத்தில் குறிப்பாக சில வரலாறுகள் இன்றும் மறைத்தே காணபடுகின்றன. அத்தகைய வரலாறு கடந்த இரண்டு தலைமுறைகளுக்கு தெரிந்திருக்கவில்லை .காரணம் ஆரியர்கள் அதாவது வட இந்தியர்கள் .
தாயக தமிழ்நாட்டு வரலாற்று பாடப்புத்தகங்களில் மன்னர் அக்பரை பற்றி படித்திருப்பார்கள்.தாஜ்மஹால் தொன்மை என்பார்கள் அனால் தமிழ் மக்கள் இலங்கையில் அரிய விலங்குகள் தாவிரங்கள் வாழ்த்த காலத்திலிருந்து அங்கு வாழ்ந்த ஒரே இனம் நம் தமிழ் இனம் என்பது தாயக தமிழ்நாட்டில் வாழும் பலருக்கு தெரியாத விடயம் ஆயிற்று என்பது தமிழ் மகளுக்கு ஏற்பட்ட ஏற்படுத்தப்பட்ட அவல நிலை .
முக்கியத்தின் முக்கியமாக ...
சிங்களவர் இலங்கையின் முதல் குடியேற்றம் என்பது சிங்களவர்கள் தெய்விகமாக வணங்கபடும் நூல் மகாவம்சம் அந்த நூலில் தெளிவாக குறிபிடப்பட்டுள்ளது. (காலம் கி .பி. 3 ம் நூற்றாண்டு)
அதை பல சிங்களவர்களே ஒத்துக்கொள்கின்றனர் .
அனால் இங்கு தாயக தமிழகர்களிடம் ........
ஈழத் தமிழர்கள் பிழைப்பை தேடி போனவர்கள் நாடு கேட்கின்றார்கள் என்பது இங்கு வாழும் மக்கள் மற்று இளைஞர்கள் பலர் எண்ணுகிறார்கள் ..இந்த வரலற்று அறியாமையின் காரணம் நமது தமிழ் கல்வியில் இங்கு உள்ள ஆட்சியாளர்கள் அதை வெளி கொணரவில்லை ஆகையினால் தமிழகத்தில் சுமார் இரண்டு தலைமுறைக்கு உண்மை வரலாறு அறியா கனி ஆயிற்று .
கி .பீ ~6 நூற்றாண்டில் கணிசமான சிங்களவ குடியேற்றதிக்கு பிறகு இலங்கை தமிழ் மன்னர்கள் மற்றும் சிங்களவ மன்னர்களிடம் கடு சண்டை ஏற்பட்டது .அதை கவனித்த தஞ்சை தரணியை ஆண்ட சோழன் இலங்கையில் சிங்களவன் கொட்டத்தை அடக்க தஞ்சை சோழனின் கடற்படை வெறும் இரண்டு திங்களில் முழு இலங்கை நாட்டை வெற்றிபெற்று மும்முடி சோழ மண்டலம் என்று பெயர் சூட்டினான் சோழன் .

இதில் வேடிக்கை என்வென்றால் புத்தரை வழிபட்டு கொண்டிருந்த சில தமிழ் மன்னர்களையும் கழுகு மரத்தில் ஏற்றி துண்டித்தான் சோழன் . ஆதி காலம் முதல் இலங்கையில் சிவ வழிபாடு ஓங்கி இருந்தது ,சிங்களவர்களின் வருகையின் பிறகு சற்று தாழ்ந்த நிலையில் இருந்த சிவ வழிபாட்டை மீண்டும் ஓங்கச் செய்தான் தஞ்சையை ஆண்ட சோழன் ..
அப்போரில் ஆயிரகணக்கில் சிங்களவர்களை கழுகு மரம் ஏற்றினான் சோழன் .இந்த வரலாறு எத்தனை தமிழ் இளைஞர்களுக்கு தெரியும் என்று கூறுங்கள் ..எந்த பாட புத்தகத்தில் இருக்கிறது .சிந்து சமவெளி தாண்டி வந்த முஸ்லிம் இனத்தவரை பற்றி நம் பாடப்புத்தகத்தில் பார்க்கிறோம் இந்த வரலாறு எங்கே போனது சிந்தியுங்கள் மக்களே !!!
சிங்களவர்கள் கி .பி. 3ம் நூற்றாண்டு வந்தேரிகள்..
வெற்றிக்கு போராடும் போது ஏன் முயற்சி என்பார்கள் ..?
விடுதலைக்கு போராடும் போது வீண் முயற்சி என்பார்கள் !
அவர்களே வெற்றியும் , விடுதலையும் பெற்றபின்
விடா முயற்சி என்பார்கள் !!!