தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

குட்டிக்கதை:

முல்லா வேலையிலிருந்து வீடு திரும்பியதும்சட்டையைக் கழற்றினார்.அந்த சட்டையை வாங்கிய அவரது மனைவி அதில் ஒருநீளமான கருப்பு முடி இருந்ததைப் பார்த்ததும் அவள்மிகுந்த கோபத்துடன்,''நீ ஒரு இளம் பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளாய் என்று நினைக்கிறேன்,''என்று கூறி சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.

''வழியில் ஒரு கூட்டத்தில் புகுந்து வந்தபோது யாருடைய முடியாவது ஒட்டியிருக்கும்,''என்று முல்லா கூறிய சமாதானம் எடுபடவில்லை.அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
... மறுநாள் முல்லா வேலை முடிந்து வந்தவுடன்,விரைந்து வந்து அவரது மனைவி அவருடைய சட்டையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினாள்.அப்போது சட்டையில் ஒரு வெள்ளை முடி இருப்பதைக் கண்டாள்.அவ்வளவுதான்..பிடி பிடிஎனப் பிடித்துக் கொண்டாள் ''நேற்று ஒரு இளம் பெண்:இன்று ஒரு வயதான பெண்.நீ சரியான காமாந்தகனாக இருக்க வேண்டும்.என் வாழ்க்கையே பாழாகி விட்டது.''என்று கூவ ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் முல்லா வேலையிலிருந்து வரும்போது,பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்று எண்ணி சட்டையை கழட்டி ,நன்றாக உதறிவிட்டு மறுபடியும் உடுத்திக் கொண்டார்.வீட்டுக்கு வந்தவுடன் அவரது மனைவி வழக்கம் போல அவரது சட்டையை பரபரவென சோதனை போட்டாள்.ஒன்றும் கிடைக்கவில்லை.முல்லா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

ஆனால் திடீரென உரத்த குரலில் அவர் மனைவி அழ ஆரம்பித்தாள்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டார்.அவள்,''செய்வதைசெய்துவிட்டு ஒன்றும் புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?கேவலம்,ஒரு மொட்டைத் தலைக்காரியுடன் இன்று சுற்றிவிட்டு வந்திருக்கிறீர்கள்.நான் என் தாயின் வீட்டுக்குப் போகிறேன்,''என்றாள்.பாவம்,முல்லாவால் என்ன சொல்ல முடியும்?
 
 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -