- Back to Home »
- மருத்துவம் »
- சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த--ஆவாரை.
Posted by : தமிழ் வேங்கை
என்பது சித்தர் வாக்கு
நீரிழிவுக்கு அதாவது சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த இந்த பூவை
பறித்து நன்றாய் கழுவி கீரை போல பச்சைப்பயறு கூட்டி சாப்பிடலாம் . இது போல் ஆவாரம்
செடியின் பட்டையை நன்றாய் நசுக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி தினம்
சிறிதளவு குடித்து வர நீரிழிவால் அவதிப்படுவோருக்கு நிகழும் அடிக்கடி சிறுநீர்
கழித்தல் ,மிகுந்த தாகம் ஏற்படுவது ,நாக்கு உலர்ந்து போவது ,சிறுநீருடன் இரத்தம் போதல் இவை சரியாகும் .
இந்த செடியில் முருங்கை மரத்தில் உள்ளது போல் பிசின் ஏற்படும் .அந்த
பிசினை எடுத்து வந்து நிழலிலேயே காய வைத்து ,வைத்து கொண்டு தினம் ஒரு நெல்லளவு இரவு பாலில் கலந்து
அருந்தி வர குழந்தைப்பேறில்லாமல் இருக்கும் ஆண்களுக்கு குறைவாக இருக்கும்
உயிரணுக்கள் அதிகரிக்கும் .
மற்றும் இதன் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு சீயக்கா பொடியுடனோ ,பச்சை பயறு மாவுடனோ கலந்து குளித்து வரலாம் .இதனால் சிலருக்கு வியர்வையால் ஏற்படும் உப்பு பூத்தல் ,துர்நாற்றம் நீங்கும் .
இவையெல்லாம் பயன்படுத்த சுலபமானவை.எந்த மருத்துவமனையிலும் கை பிசைந்து நிற்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தாத மருத்துவம் .சிறிதாக சிறிதாக உங்கள் வாழ்வை இயற்கையுடன் இணைந்ததாக மாற்றுங்கள் .மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள் .