- Back to Home »
- மருத்துவம் »
- வாழைபழம்
Posted by : தமிழ் வேங்கை

வாழைபழம் அளிக்கும் நன்மைகளை படித்தால் மயக்கமே வந்துவிடும். எங்கேயிருந்து துவங்க? முதலில் ரத்த அழுத்தத்திலிருந்து துவங்கலாமா?
ரத்த அழுத்த வியாதி உள்ளவர்கள் தினம் ஒன்று அல்லது இரண்டு
தினம் 21 கிராம் பைஃபர் உண்பது இதய வியாதிகளை 12% அளவு குறைக்கிறது என கண்டறியபட்டு உள்ளது. ஒரு வாழைபழத்தில் 6 கிராம் ஃபைபர் உள்ளது. தினம் 2 வாழைபழம் உண்டால் 12 கிராம் பைஃபர் நம் உடலில் சேரும்.
அதிகமாக பிராசஸ்டு உணவுகளை உண்பதால் ஏராளமாக நம் உடலில் சோடியம் (உப்பு) சேருகிறது. அதனால் நாம் உண்ணும் பாலில் உள்ள கால்ஷியம் எலும்புகளை சேராமல் அப்படியே கழிவாக கரைந்துவிடுகிறது. இதை தடுத்து கால்ஷியம் அப்சார்ப்ஷனை அதிகமாக்கும் சக்தி வாழைபழத்துக்கு உண்டு. அதனால் இது எலும்புகளுக்கும், பல்லுக்கும் நல்லது
அல்சர்களை உருவாக்கும் ஆசிட் சுரப்பை தடுக்கும் சக்தியும் வாழைபழத்துக்கு உன்டு. அல்சர் இருப்பவர்கள்/ இல்லாதவர் தினம் ஒரு வாழைபழத்தை பாலுடன் உண்டால் அந்த காம்பினேஷன் ஆசிட் சுரப்பை வெகுவாக தடுத்து நிறுத்திவிடும். ஆசிட் சுரப்பால் வயிற்றில் உள்ல உள்காயங்களை ஆற்றும் சக்தியும் வாழைபழத்துக்கு உண்டு.
வாழைபழம் உடலில் உள்ள நல்ல பாக்டிரியாக்களை வலுவாக்கி வயிற்றில் செல்களை வளர்க்கிறது. இந்த செல்கள் வளர்ந்து வயிற்றில் உள்ள உள்காயங்கள் மேல் படிந்து புதுதோலை உருவாக்கிவிடுகின்றன. இது அல்சர், உள்காயங்கள், இன்ஃப்ளமேஷனை குணமாக்குவதாக கண்டுபிடிக்கபட்டு உள்ளது.
வயிற்றுபோக்கு இருந்தால் உடலில் உள்ள வைடமின்கள் பலவும் கழிவில் அடித்து செல்லபட்டு விடும். அந்த சூழலில் வாழைபழம் உண்பது
அந்த வைட்டமின்களை ரிப்ளேஸ் செய்கிறது. அத்துடன் வயிற்றுபோக்கை கட்டுபடுத்தும் ஆற்றலும் வாழைபழத்துக்கு உண்டு.
ஒரு லட்சம் பேரை வைத்து 18 வருடமாக நடத்தபட்ட மிக பெரிய ஆய்வு ஒன்றில் வாழைபழம் வயதானபின் வரும் பார்வை குறைபாட்டை 36% அளவு குறைக்கும் என கண்டுபிடிக்கபட்டு உள்ளது.
40 முதல் 76 வரையிலான 61,000 பெண்களை வைத்து நடந்த இன்னொரு ஆய்வில் வாழைபழம் உண்பது கிட்னி கான்சர் வரும் வாய்ப்பை 40% அளவு குறைப்பதாக கண்டுபிடிக்கபட்டு உள்ளது. வாரம் 4 முதல் 6 வாழைபழம் உண்டால் கிட்னி கான்சர் வரும் வாய்ப்பு 40% குறைகிறது.
பழுத்த வாழைபழம் உண்டால் கூடுதல் சக்தியும், கூடுதம் வைடமின்களும், வயதாவை தடுக்கும் ஆண்டி ஆக்சிடண்டுகளும் கிடைக்கும். பச்சை வாழைபழம் உண்டால் குறைவான வேகத்தில் சர்க்க்கரை சத்து உடலில் ஜீரணம் ஆகும். ஆனால் பழுத்த வாழைபழத்தின் கிளைசெமிக் இண்டெக்ஸ் 60 (கோதுமைக்கு சமம்). பழுக்காத வாழைபழத்தின் கிளைசெமிக் இண்டெக்ஸ் 35 (குறைவு).
இத்தனை நன்மைகளை அளிக்கும், விலை மலிவான, உண்ண சுவையான வாழைபழத்தை தினம் வாங்கி உண்ணுங்கள்.குழந்தைகளுக்கும் சிறுவயது முதல் தினம் ஒரு வாழைபழத்தை கொடுத்து பழக்கபடுத்துங்கள்.
தமிழ்நாட்டில் உள்ளவர்கள் இந்த விஷயத்தில் மிக கொடுத்து வைத்தவர்கள். சர்க்கரைவள்ளி, ரஸ்தாளி, சிறுவாழை, மலைவாழை, செவ்வாழை,மோரிஸ் என அங்கே கிடைக்கும் வாழைபழ வகைகளுக்கு கணக்கே இல்லை. அமெரிக்காவில் ஒரே ஒரு வகை வாழைபழம் தான் கிடைக்கும்: அதனால் முக்கனிகளுல் ஒன்றான வாழைபழத்தை போற்றுவோம் : தினம் உண்போம்: