- Back to Home »
- வரலாறு »
- ராஜேந்திர சோழரின் ஆட்சியில் சோழ பேரரசு.
Posted by : தமிழ் வேங்கை
![சோழர்கள்:
பாண்டியர்கள் மற்றும் பல்லவர்களுக்கிடையே இருந்த சண்டையைப் பயன்படுத்திக் கொண்டு 850 ஆம் ஆண்டுகளில் விஜயாலய சோழர் தஞ்சாவூரைக் கைப்பற்றி இடைக்கால சோழர் ஆட்சிக்கான அடித்தளத்தை அமைத்தார். இடைக்காலத்தில் சோழர் வம்சத்தை விஜயாலய சோழர் நிறுவினார். அவரது மகன் முதலாம் ஆதித்யா சோழர்களின் ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகளைச் செய்தார். 903 ஆம் ஆண்டில் பல்லவ பேரரசுக்குள் நுழைந்து பல்லவ அரசன் அபராஜிதாவை போரில் கொன்றதன் மூலம் பல்லவர்களின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முதலாம் பராந்தக சோழன் அதிகாரத்தில் பாண்டிய நாடு முழுவதும் சோழப் பேரரசு பரவியது. சோழப் பேரரசுக்குள் தங்களது பகுதிகளை விரிவாக்கம் செய்த ராஸ்ட்ராகுட்டா குழுக்களினால் தனது ஆட்சிக் காலத்தின் இறுதியில் முதலாம் பராந்தக சோழன் பாதிக்கப்பட்டார்.
ராஜேந்திர சோழரின் ஆட்சியில் சோழ பேரரசு:
மன்னர்களின் முறையற்ற ஆட்சித் திறமை, அரண்மனைக் கிளர்ச்சி மற்றும் வாரிசுகளின் தகராறு ஆகியவை ஏற்பட்டு அடுத்து வந்த ஆண்டுகளில் சோழர்கள் தற்காலிகமாக வீழ்ச்சியடைந்தனர். பலமுறை முயற்சி செய்தும் பாண்டிய நாட்டை முழுவதுமாக வீழ்த்த முடியவில்லை. மேலும் வடக்கு பகுதியில் ராஸ்டராகுடா குழுவினரும் மிகவும் வலிமை வாய்ந்த எதிரிகளாக இருந்தனர். எனினும், முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு 985 ஆம் ஆண்டு சோழர் ஆட்சி மீண்டும் மலர்ந்தது. இராஜராஜன் மற்றும் அவரின் மகனான முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தில் பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியாக சோழர்கள் ஆசியாவில் கவனிக்கத்தக்க வீரர்களாக மாறினர். தெற்குப் பகுதியில் மாலத்தீவுகளில் இருந்து வடக்கில் வங்காளத்தில் உள்ள கங்கை ஆற்றங்கரைப் பகுதிகள் வரை சோழர்களின் ஆட்சிப் பகுதிகள் பரவி இருந்தன. தென்னிந்திய தீபகற்பம், இலங்கையுடன் இணைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய பகுதிகளில் இராஜராஜ சோழன் வெற்றிக் கொண்டார். மலேய தீவுக்குழுமத்தில் இருந்த ஸ்ரீவிஜயா பேரரசை தோற்கடித்து ராஜேந்திர சோழன் சோழர்களின் ஆட்சியைப் பரப்பினார்.
பீகார் மற்றும் வங்காளப் பகுதியின் அரசனான மகிபாலா என்பவரை இவர் தோற்கடித்தார். வெற்றியைக் கொண்டாடும் விதமாக கங்கைகொண்ட சோழபுரம் (கங்கைப் பகுதியில் சோழர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக உருவாக்கப்பட்ட நகரம் ) என்ற புதிய தலைநகரத்தை உருவாக்கினார். சோழப் பேரரசு அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போது இலங்கையின் தெற்கு தீபகற்ப பகுதியிலிருந்து தங்களது பகுதிகளை வடக்கிலுள்ள கோதாவரி பகுதி வரை விரிவாக்கியது. இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் கங்கை ஆறு வரை நீண்டிருந்த பகுதிகளை சோழர்கள் அடக்கி ஆட்சி செய்தனர். மலேய தீவுக்குழுமத்திலிருந்த ஸ்ரீவிஜய பேரரசுக்குள் படையெடுத்து சோழப் பேரரசின் கடற்படை வீரர்கள் வெற்றி கண்டனர். சோழப் பேரரசின் இராணுவ வீரர்கள் தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் கெமர் பேரரசுகளிடம் நேரடியாக வரி வசூல் செய்தனர்.[60] இராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு மிகவும் வளர்ச்சியடைந்தது. பேரரசை சுயமாக ஆட்சி செய்து கொள்ளும் பல உள்ளூர் பகுதிகளாகப் பிரித்தனர். அவற்றின் அதிகாரிகள் பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிரகதீசுவரர் ஆலயம்:
இந்த காலம் முழுவதும், சோழர்கள் ஆட்சியை இலங்கையிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடும் சிங்களர்கள், தங்களது பாரம்பரியப் பகுதிகளின் சுயாட்சியை மீண்டும் பெற முயற்சித்துக் கொண்டிருந்த பாண்டிய மன்னர்கள், சோழப் பகுதிகளைக் கைப்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த மேற்கு தக்காணப் பகுதிகளைச் சேர்ந்த சாளுக்கியர்கள் ஆகியோரால் சோழர்களுக்கு தொடர்ந்து தொல்லை ஏற்பட்டது. சோழர்கள் தங்களின் எதிரிகளுடன் இந்த வரலாற்றுக் காலம் முழுவதும் தொடர்ச்சியாக சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். சாளுக்கியர்களும் சோழர்களும் தங்களது அதிகாரச் சக்தியில் சம அளவில் இருந்தனர். துங்கபத்ரா ஆற்றை எல்லையாகக் கொள்வதற்கு இரண்டு பேரரசுகளும் இரகசியமாய் ஒப்புக் கொண்டனர். வெங்கி பேரரசில் சோழர்களின் தலையீடு காரணமாக இரண்டு பேரரசுகளுக்கிடையே கருத்து வேறுபாடு அதிகரித்துக் கொண்டிருந்தது. சோழர்களும் சாளுக்கியர்களும் பலமுறை போரிட்டுக் கொண்டனர். இவர்களது போர் சில நேரங்களில் முடிவில்லாத இக்கட்டான நிலையில் இருந்துள்ளது.
கோதாவரி ஆற்றின் தெற்கு கரையில் அமைந்துள்ள வெங்கி பகுதிகளைச் சுற்றியுள்ள கிழக்கு சாளுக்கியர்களுடனான சோழர்களின் திருமணம் மற்றும் அரசியல் உறவு இராஜராஜன் ஆட்சிக் காலத்தில் சோழர்கள் வெங்கி பேரரசுக்குள் நுழைந்ததிலிருந்து தொடங்கியது. வீரராஜேந்திர சோழனின் மகன் ஆதிராஜேந்திர சோழன் 1070 ஆம் ஆண்டு ஏற்பட்ட கலகத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து சோழர்களின் ஆட்சிக்காக சாளுக்கிய சோழர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். குலோத்துங்கன் வெங்கி பேரரசின் அரசன் ராஜராஜ நரேந்திராவின் மகனாவார். சாளுக்கிய சோழர் வம்சத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் விக்ரம சோழன் போன்ற திறமை வாய்ந்த அரசர்கள் குறைவாகவே இருந்தனர். சோழ அரசர்கள் தங்கள் அதிகாரத்தை இழப்பது இந்த காலக்கட்டத்திலிருந்து தொடங்கியது. சிங்களர்கள் மீட்டெழுச்சி காரணமாக இலங்கையின் தீவுப் பகுதிகளில் சோழர்கள் தங்களது அதிகாரத்தை இழந்து வெளியேறினர்.
மேற்கு பகுதியின் சாளுக்கிய அரசனான ஆறாம் விக்ரமாதித்யா என்பவரிடத்தில் வெங்கிப் பேரரசையும், கங்காவாதி (மைசூரின் தெற்கு மாவட்டங்கள்) பகுதிகளை சாளுக்கிய இராணுத்தைச் சேர்ந்த போசள விஷ்ணுவர்தனா என்பவரிடமும் 1118 ஆம் ஆண்டுகளில் தங்கள் அதிகாரத்தை சோழர்கள் இழந்தனர். பாண்டிய நாட்டுப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக பாண்டியர்களின் ஆட்சிப் பொறுப்பிற்கு பலர் உரிமைக் கோரினர். இதன் காரணமாக உள்நாட்டுப் போரில் உரிமைப் பெற்ற பிரதிநிதியாக சிங்களர்கள் மற்றும் சோழர்கள் கலந்துக் கொண்டனர். பாண்டியர்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி கட்டுப்பாட்டில் வைப்பதற்காக காஞ்சிபுரத்தில் நிரந்தரமாக ஒரு போசள் இராணுவம் சோழர்கள் வாழ்ந்த இறுதி நூற்றாண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சோழ வம்சத்தின் கடைசி அரசானாக மூன்றாம் ராஜேந்திர சோழன் இருந்தார். காடவர் தலைவர் முதலாம் கோப்பெருஞ்சிங்கன் ராஜேந்திராவை வெற்றிக் கொண்டு அவரை சிறையில் அடைத்தார். ராஜேந்திராவின் ஆட்சி முடிவடைந்த காலத்தில் (1279) சோழர் பேரரசு முழுவதையும் பாண்டியர்கள் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்](http://sphotos-d.ak.fbcdn.net/hphotos-ak-prn1/s480x480/549847_433792090022221_46216095_n.jpg)
சோழர்கள்:
பாண்டியர்கள் மற்றும்
பல்லவர்களுக்கிடையே இருந்த சண்டையைப் பயன்படுத்திக் கொண்டு 850 ஆம் ஆண்டுகளில் விஜயாலய
சோழர் தஞ்சாவூரைக் கைப்பற்றி இடைக்கால சோழர் ஆட்சிக்கான அடித்தளத்தை அமைத்தார்.
இடைக்காலத்தில் சோழர்
வம்சத்தை விஜயாலய சோழர் நிறுவினார். அவரது மகன் முதலாம் ஆதித்யா சோழர்களின்
ஆதிக்கத்தை விரிவுபடுத்துவதற்கான உதவிகளைச் செய்தார். 903 ஆம் ஆண்டில் பல்லவ
பேரரசுக்குள் நுழைந்து பல்லவ அரசன் அபராஜிதாவை போரில் கொன்றதன் மூலம் பல்லவர்களின்
ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். முதலாம் பராந்தக சோழன் அதிகாரத்தில் பாண்டிய
நாடு முழுவதும் சோழப் பேரரசு பரவியது. சோழப் பேரரசுக்குள் தங்களது பகுதிகளை
விரிவாக்கம் செய்த ராஸ்ட்ராகுட்டா குழுக்களினால் தனது ஆட்சிக் காலத்தின் இறுதியில்
முதலாம் பராந்தக சோழன் பாதிக்கப்பட்டார்.
ராஜேந்திர சோழரின்
ஆட்சியில் சோழ பேரரசு:
மன்னர்களின் முறையற்ற ஆட்சித்
திறமை, அரண்மனைக் கிளர்ச்சி மற்றும் வாரிசுகளின் தகராறு ஆகியவை
ஏற்பட்டு அடுத்து வந்த ஆண்டுகளில் சோழர்கள் தற்காலிகமாக வீழ்ச்சியடைந்தனர். பலமுறை
முயற்சி செய்தும் பாண்டிய நாட்டை முழுவதுமாக வீழ்த்த முடியவில்லை. மேலும் வடக்கு
பகுதியில் ராஸ்டராகுடா குழுவினரும் மிகவும் வலிமை வாய்ந்த எதிரிகளாக இருந்தனர்.
எனினும், முதலாம் இராஜராஜ சோழனுக்குப் பிறகு 985 ஆம் ஆண்டு சோழர் ஆட்சி
மீண்டும் மலர்ந்தது. இராஜராஜன் மற்றும் அவரின் மகனான முதலாம் ராஜேந்திர சோழன்
காலத்தில் பொருளாதாரம் மற்றும் கலாச்சார ரீதியாக சோழர்கள் ஆசியாவில் கவனிக்கத்தக்க
வீரர்களாக மாறினர். தெற்குப் பகுதியில் மாலத்தீவுகளில் இருந்து வடக்கில்
வங்காளத்தில் உள்ள கங்கை ஆற்றங்கரைப் பகுதிகள் வரை சோழர்களின் ஆட்சிப் பகுதிகள்
பரவி இருந்தன. தென்னிந்திய தீபகற்பம், இலங்கையுடன் இணைக்கப்பட்ட
பகுதிகள் மற்றும் மாலத்தீவுகள் ஆகிய பகுதிகளில் இராஜராஜ சோழன் வெற்றிக் கொண்டார்.
மலேய தீவுக்குழுமத்தில் இருந்த ஸ்ரீவிஜயா பேரரசை தோற்கடித்து ராஜேந்திர சோழன்
சோழர்களின் ஆட்சியைப் பரப்பினார்.
பீகார் மற்றும் வங்காளப்
பகுதியின் அரசனான மகிபாலா என்பவரை இவர் தோற்கடித்தார். வெற்றியைக் கொண்டாடும் விதமாக
கங்கைகொண்ட சோழபுரம் (கங்கைப் பகுதியில் சோழர்கள் வெற்றி பெற்றதன் நினைவாக
உருவாக்கப்பட்ட நகரம் ) என்ற புதிய தலைநகரத்தை உருவாக்கினார். சோழப் பேரரசு
அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போது இலங்கையின் தெற்கு தீபகற்ப பகுதியிலிருந்து
தங்களது பகுதிகளை வடக்கிலுள்ள கோதாவரி பகுதி வரை விரிவாக்கியது. இந்தியாவின்
கிழக்கு கடற்கரையில் கங்கை ஆறு வரை நீண்டிருந்த பகுதிகளை சோழர்கள் அடக்கி ஆட்சி
செய்தனர். மலேய தீவுக்குழுமத்திலிருந்த ஸ்ரீவிஜய பேரரசுக்குள் படையெடுத்து சோழப்
பேரரசின் கடற்படை வீரர்கள் வெற்றி கண்டனர். சோழப் பேரரசின் இராணுவ வீரர்கள்
தாய்லாந்து மற்றும் கம்போடியாவின் கெமர் பேரரசுகளிடம் நேரடியாக வரி வசூல்
செய்தனர்.[60] இராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழன் போன்ற மன்னர்களின்
ஆட்சிக் காலத்தில் சோழப் பேரரசு மிகவும் வளர்ச்சியடைந்தது. பேரரசை சுயமாக ஆட்சி
செய்து கொள்ளும் பல உள்ளூர் பகுதிகளாகப் பிரித்தனர். அவற்றின் அதிகாரிகள் பொதுத்
தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பிரகதீசுவரர் ஆலயம்:
இந்த காலம் முழுவதும், சோழர்கள் ஆட்சியை
இலங்கையிலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து போராடும் சிங்களர்கள், தங்களது பாரம்பரியப்
பகுதிகளின் சுயாட்சியை மீண்டும் பெற முயற்சித்துக் கொண்டிருந்த பாண்டிய மன்னர்கள், சோழப் பகுதிகளைக்
கைப்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்த மேற்கு தக்காணப் பகுதிகளைச் சேர்ந்த
சாளுக்கியர்கள் ஆகியோரால் சோழர்களுக்கு தொடர்ந்து தொல்லை ஏற்பட்டது. சோழர்கள்
தங்களின் எதிரிகளுடன் இந்த வரலாற்றுக் காலம் முழுவதும் தொடர்ச்சியாக சண்டையிட்டுக்
கொண்டிருந்தனர். சாளுக்கியர்களும் சோழர்களும் தங்களது அதிகாரச் சக்தியில் சம
அளவில் இருந்தனர். துங்கபத்ரா ஆற்றை எல்லையாகக் கொள்வதற்கு இரண்டு பேரரசுகளும்
இரகசியமாய் ஒப்புக் கொண்டனர். வெங்கி பேரரசில் சோழர்களின் தலையீடு காரணமாக இரண்டு
பேரரசுகளுக்கிடையே கருத்து வேறுபாடு அதிகரித்துக் கொண்டிருந்தது. சோழர்களும்
சாளுக்கியர்களும் பலமுறை போரிட்டுக் கொண்டனர். இவர்களது போர் சில நேரங்களில்
முடிவில்லாத இக்கட்டான நிலையில் இருந்துள்ளது.
கோதாவரி ஆற்றின் தெற்கு
கரையில் அமைந்துள்ள வெங்கி பகுதிகளைச் சுற்றியுள்ள கிழக்கு சாளுக்கியர்களுடனான
சோழர்களின் திருமணம் மற்றும் அரசியல் உறவு இராஜராஜன் ஆட்சிக் காலத்தில் சோழர்கள்
வெங்கி பேரரசுக்குள் நுழைந்ததிலிருந்து தொடங்கியது. வீரராஜேந்திர சோழனின் மகன்
ஆதிராஜேந்திர சோழன் 1070 ஆம் ஆண்டு ஏற்பட்ட
கலகத்தின் போது படுகொலை செய்யப்பட்டார். இவரைத் தொடர்ந்து சோழர்களின் ஆட்சிக்காக
சாளுக்கிய சோழர் வம்சத்தைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிப் பொறுப்பை
ஏற்றார். குலோத்துங்கன் வெங்கி பேரரசின் அரசன் ராஜராஜ நரேந்திராவின் மகனாவார்.
சாளுக்கிய சோழர் வம்சத்தில் முதலாம் குலோத்துங்க சோழன் மற்றும் விக்ரம சோழன் போன்ற
திறமை வாய்ந்த அரசர்கள் குறைவாகவே இருந்தனர். சோழ அரசர்கள் தங்கள் அதிகாரத்தை
இழப்பது இந்த காலக்கட்டத்திலிருந்து தொடங்கியது. சிங்களர்கள் மீட்டெழுச்சி காரணமாக
இலங்கையின் தீவுப் பகுதிகளில் சோழர்கள் தங்களது அதிகாரத்தை இழந்து வெளியேறினர்.
மேற்கு பகுதியின்
சாளுக்கிய அரசனான ஆறாம் விக்ரமாதித்யா என்பவரிடத்தில் வெங்கிப் பேரரசையும், கங்காவாதி (மைசூரின்
தெற்கு மாவட்டங்கள்) பகுதிகளை சாளுக்கிய இராணுத்தைச் சேர்ந்த போசள விஷ்ணுவர்தனா
என்பவரிடமும் 1118 ஆம் ஆண்டுகளில் தங்கள்
அதிகாரத்தை சோழர்கள் இழந்தனர். பாண்டிய நாட்டுப் பகுதிகளைக் கட்டுப்படுத்துவதில்
ஏற்பட்ட குறைபாடு காரணமாக பாண்டியர்களின் ஆட்சிப் பொறுப்பிற்கு பலர் உரிமைக்
கோரினர். இதன் காரணமாக உள்நாட்டுப் போரில் உரிமைப் பெற்ற பிரதிநிதியாக சிங்களர்கள்
மற்றும் சோழர்கள் கலந்துக் கொண்டனர். பாண்டியர்களின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி
கட்டுப்பாட்டில் வைப்பதற்காக காஞ்சிபுரத்தில் நிரந்தரமாக ஒரு போசள் இராணுவம்
சோழர்கள் வாழ்ந்த இறுதி நூற்றாண்டு வரை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. சோழ
வம்சத்தின் கடைசி அரசானாக மூன்றாம் ராஜேந்திர சோழன் இருந்தார். காடவர் தலைவர்
முதலாம் கோப்பெருஞ்சிங்கன் ராஜேந்திராவை வெற்றிக் கொண்டு அவரை சிறையில் அடைத்தார்.
ராஜேந்திராவின் ஆட்சி முடிவடைந்த காலத்தில் (1279) சோழர் பேரரசு முழுவதையும்
பாண்டியர்கள் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.