- Back to Home »
- கவிதை »
- எம் தாய் ஈழத்திற்காக இறக்க துணிவதே...
Posted by : தமிழ் வேங்கை
ஈழத்தாய் சிந்திய
ஒவ்வொரு துளி
குருதியும்
ஓராயிரம் புலிகளாக
மாறும்
கண்ணில் வழிகின்ற
கண்ணீர்துளி
ஒவ்வொன்றும்
கல்லறை தெய்வங்களின்
கனவை நனவாக்கும்
வெறும் பிணம் என்று
பகை வீதியில் போட்ட
வித்துடல் யாவும்
விடுதலை வேள்வியில்
விறகாகும் - எம்
விடுதலையை அதுவே
விரைவாக்கும்...!!!
விடுதலை வேள்வியில்
சிந்திய இரத்தங்களும்
சொரிந்த கண்ணீர்களும்
செந்தமிழ் ஈழத்தின்
சிறப்பாகும் - எம்
தாய் ஈழத்திற்காக
இறக்க துணிவதே
எங்கள் வாழ்வின்
பேறாகும்...!!!
...ஈழ மைந்தன்