- Back to Home »
- மருத்துவம் »
- விக்கல் ஏன் வருகிறது? அதை எப்படி உடனே நிறுத்துவது?
Posted by : தமிழ் வேங்கை
விக்கல் ஒரு அனிச்சை செயல்பாடு.
உதரவிதானம், ஆங்கிலத்தில் Thoracic diaphragm நெஞ்சுக்கும் வயிற்றுக்கும் இடையே உள்ள ஒரு தசைப்பகுதி நாம்
மூச்சுவிடுவதற்கு உதவி செய்யும்.
மூச்சை உள்ளிழுக்கும்போது, இந்த உதரவிதானம் கீழிறங்கி
விக்கல் இங்கிருந்துதான் துவங்குகின்றது. சுருங்கி விரிந்து சீராக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த உதரவிதானம் சில சமயங்களில், சிலபல காரணங்களினால் வெட்டி இழுத்தது போன்று (Jerk இதற்கு ஒரு நல்ல தமிழ்ச்சொல்லை உருவாக்குங்கள்) கீழிறங்கி தொண்டை வழியாக காற்றை உள்ளிழுக்கச் செய்யும்.
அப்படி உள்ளிழுக்கப்படும் காற்றானது நம் குரல்வளையினை இடிக்கும்பொழுது ஏற்படுவதுதான் அந்த ஹிக் ஹிக் விக்கல் ஒலி.
விக்கல் ஏன் வருகின்றது? அல்லது உதரவிதானம் ஏன் துன்புறுத்தப்படுகின்றது?
1. அவசர அவசரமாக உணவினை விழுங்குதல்
2. அதிக அளவில் உண்ணுதல்
3. அதிக காற்றினை விழுங்குதல்
4. அளவிற்கதிகமாக மது அருந்துதல்
5. புகைபிடித்தல்
6. வயிற்றில் திடீரென ஏற்படும் வெப்பமாற்றம். (சூடான பானமோ, குளிர்ச்சியான பானமோ அருந்தும்பொழுது ஏற்படலாம் அல்லது இரண்டையும் மாற்றி மாற்றி அருந்தும்பொழுதும் ஏற்படலாம்)
7. இது தவிர இன்னும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.
எப்படி நிறுத்துவது?
பொதுவாக விக்கல் தானாகவே நின்றுவிடும். சில சமயம் சற்று அதிக நேரம் நீடிக்கும். சிலருக்கு நாட்கணக்கில், மாதக்கணக்கில் கூட நீடிக்கலாம். அப்பொழுது கண்டிப்பாக மருத்துவரை அணுகவேண்டும்.
1. மூச்சை சற்று நேரம் அழுத்திப் பிடித்துக்கொண்டிருக்கலாம்.
2. நாக்கிற்கடியில் சிறிது சீனியை (சர்க்கரை) வைக்கலாம்.
3. உடல் உதறுமாறு அதிர்ச்சிக்குள்ளாக்கலாம்.
4. தண்ணீர் அருந்தலாம்.
5. முடிந்த மட்டும் நாக்கினை வெளியே இழுப்பது.
மூளையிலிருந்து வயிற்றுக்கு ஓடும் வேகஸ் நரம்பு இழுக்கப்பட்டால் விக்கல் நிற்குமாம். தண்ணீர் அருந்தும்போதும், நாக்கினை இழுக்கும்போதும் இது நிகழுமாம்.
இரத்தத்தில் கார்பன் டை ஆக்சைடு அதிகரித்தாலும் விக்கல் நிற்குமாம். அதற்குத்தான் மூச்சை அடக்கச் சொல்லப்படுகின்றது.
பின்பற்றும் வழி: ஒரு ஓட்டை இல்லாத பாலிதீன் பை ஒன்றை எடுத்து
மூக்கு வாய் இரண்டையும் மூடி அப்பைக்குள்ளாகவே மூச்சு விட்டுக்கொண்டிருப்பேன். ஒரு
சமயத்தில் ஆக்ஸிஜன் தீர்ந்து போய் நான் மூச்சுத்திணறித் திணறி... இனி முடியாது என்ற
நிலையில் அப்பையை எடுத்துவிட்டுப் பார்ர்த்தால்... விக்கல் போயிந்தே... போயே
போச்சு