- Back to Home »
- சிறுகதை »
- "எத்தனை பேர் தாயை வணங்குகிறீர்கள்"???
Posted by : தமிழ் வேங்கை

"ஒரு முறை தாயைச் சுற்றி வலம் வந்து வணங்கினால்,
ஆயிரம் முறை கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும். 90 வயதான என் தாயை நான் இன்னும் தினமும் வணங்கி வருகிறேன்...' என்று கூறிய வாரியார், அவையோரை நோக்கி,
"எத்தனை பேர் தாயை வணங்குகிறீர்கள்?' எனக் கேட்டார்.
ஒரு சிலர் கைகளை உயர்த்தினர்.
"நாளை எவ்வளவு பேர் வணங்குவீர்கள்?' எனக் கேட்டார். எல்லார் கைகளும் உயர்ந்தன. ஒரே ஒரு சிறுவனின் கையைத் தவிர.
"ஏனப்பா, இவ்வளவு தூரம் நான் தாயன்பின் உயர்வைப் பற்றிக் கூறியும் நீ வணங்க மறுக்கிறாய்?' என்று அவனைக் கேட்டார் வாரியார்.
அச்சிறுவன் எழுந்து, "நான் எப்படி ஐயா வணங்குவேன்? எனக்குத்தான் அம்மாவே இல்லையே...' என்று கூறியதும், வாரியாரின் கண்கள் கலங்கி விட்டன.
அவனை அருகழைத்து, தன் மாலையை அவனுக்கு அணிவித்து, "நீ தினமும் உன் அன்னை படத்தை வணங்க வேண்டும் - செய்வாயா?' என அவர் வினவ, கண்ணைத் துடைத்துக் கொண்டு சம்மதம் தெரிவித்தான் பையன்.
— வாரியார் நூல் ஒன்றில் படித்தது!