- Back to Home »
- மருத்துவம் »
- வலி நிவாரணி மாத்திரைகள் அதிகம் எடுத்துக்கொள்பவரா நீங்கள்? உங்களுக்கான ஒரு அதிர்ச்சித்தகவல்??
Posted by : தமிழ் வேங்கை
ஒரு வீட்டின் டாய்லெட் ‘பளிச்’சென இருப்பதை வைத்தே அந்த வீட்டின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொள்ளலாம். அதே போல, நமது உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதை உணர்த்துவது, கிட்னி எனப்படும் சிறுநீரகம். ரத்தத்திலிருந்து யூரியா மற்றும் கழிவுப் பொருட்களைப் பிரித்து சிறுநீராக வெளியேற்றுவது சிறுநீரகங்கள் தான். இந்தப்பணியை இது சரியாக செய்யாமல் போனால் மனிதர்களுக்கு எல்லாவிதத்திலும் பிரச்சனைகள் தான்.
ரத்தத்திலிருந்து கழிவுகளை உறிஞ்சி எடுப்பதில் சிறுநீரகத்தின் ‘மெடுல்லா’ பகுதியே முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ‘மெடுல்லா’ பகுதியை திறன் இழக்கச் செய்து அழுக்குகளை ரத்தத்திலேயே தங்க வைப்பவை எவை என்று கூறினால் நமக்கு அதிர்ச்சியாக இருக்கும்.
எதற்கெடுத்தாலும் மாத்திரைகள்.
எந்த வலி ஏற்பட்டாலும் வலி தெரியாமல் இருக்க எடுத்துக் கொள்கிறார்களே… அந்த வலி நிவாரண மருந்து மாத்திரைகள்தான். அவற்றின் வேதித் தன்மையால் ‘மெடுல்லா’ பகுதி முற்றிலுமாகப் பாதிக்கப்படுகிறது. ஒரு புள்ளிவிபரப்படி, பிற நாடுகளில் தடை செய்யப்பட்ட சுமார் 53 வகை வலி நிவாரணி மருந்துகள் தற்போது இந்தியாவில் சர்வசாதாரணமாக உலவிக் கொண்டிருக்கின்றன. அவற்றோடு தன்னந்தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறது இந்தியர்களின் கிட்னி.
அடுத்ததாக, இன்றைய சூழலில் ரத்தத்தில் அழுக்குகள் சேர முக்கியக் காரணமாவது, நாம் சாப்பிடும் உணவு. உப்பும் காரமும் தூக்கலாக இருக்கும் இன்றைய ஃபாஸ்ட் ஃபுட். இது கிட்னிக்கு முக்கிய எதிரி என்றால் எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறார்கள்? உப்பில்லாத பண்டம் குப்பையிலேதான்! ஆனால், அதிலும் அளவு வேண்டாமா? அதிகப்படியான உப்பும் காரமான மசாலாக்களும் நம் கிட்னியையே குப்பையில் போட்டுவிடக் கூடியவை.
இவை தவிர, தொடர்ந்து இன்சுலின் ஊசி போடுதல், மது, போதைப் பழக்கம் போன்றவையும் ரத்தத்தை அடர்த்தியாக்கி அதன் மூலம் கிட்னியையும் காலி செய்கிறது.
இப்படி நாம் கொடுக்கும் வன்கொடுமைகளை எல்லாம் தாங்காமல், ‘போங்கய்யா! என்னால முடியல’ என்று சிறுநீரகம் வேலைநிறுத்தம் செய்துவிட்டால், அதன் பின்னர் தொடர் மருத்துவம். டயாலிசிஸ், கிட்னி டிரான்ஸ்பிளன்டேஷன், சித்தா, ஆயுர்வேதா, யுனாணி, ஹோமியோபதி இப்படியாக வாழ்நாள் முழுவதும் போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான்..
எனவே வலி நிவாரண மாத்திரைகளை தேவையில்லாமல் எடுத்துக்கொள்வது நமக்கு நாமே சூன்யம் வைத்துக்கொள்ளும் கதைதான்.. அதே போன்று பாஸ்ட்புட் கடைகளில் உணவினை தொடர்ந்து உண்பதும், வீட்டில் நாக்கின் ருசிக்காக உறைப்பாக, உப்பாக, வாசனைக்காக பல மசாலா பொடிகளை போட்டு உணவினை தயாரித்து உண்பதும் கிட்னியை வெகுவிரைவில் செயலிழக்கச் செய்துவிடும்..
தேவையான அளவு குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு 3 அல்லது 4லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட, வடிகட்டிய தண்ணீரைக் குடிப்பதினால் கிட்னியில் கல் ஏற்படுதல், சிறுநீர்ப்பாதையில் அடைப்பு, சிறுநீர்ப் போவதில் எரிச்சல் போன்றவற்றை தவிர்த்துக் கொள்ளலாம்... தண்ணீர் சிறுநீரகத்திற்கு நண்பன்.
வலி நிவாரண மருந்துகள், ஊசிகள், மது, மசாலாக்கள் போடப்பட்ட உணவு, அதிகப்படியான உப்பு, காரம் இவை எல்லாம் சிறுநீரகத்தின் எதிரிகள்.. இவைகளைத்தவிர்ப்போம்.
சிறுநீரகங்களை பாதுகாப்போம். நோயற்ற வாழ்வை நாம் வாழ்வோம்.