- Back to Home »
- கவிதை »
- இந்த கவிதை ஒரு சாட்சி.
Posted by : தமிழ் வேங்கை

வெடிக்கும் எதிரிகணைகள் ஒவ்வொன்றுக்கும்
விரல்மடித்துக் கணக்கெடுத்தபடி இருந்தேன்
இடையிற் கண்ணயர்ந்து போனேன்
விழிப்புற்ற போதும்
வந்து வெடித்தன குண்டுகள்
மீண்டும் எண்ணத் தொடங்கினேன்
இடையிற் சிரிப்பு வந்தது, சிரித்தேன்
விளையாட்டாகிவிட்டது யுத்தம்.
அப்பாடா விடிந்துவருகிறது
இரவு எத்தனை குண்டுகள்
என்றாள் மனைவி.
எழுந்தமானத்தில் எழுபது என்றேன்
நேற்று?
என்பது
ஏன் பத்துக் குறைந்தது என்றாள்
நெடுங்கேணியில்தான் நிற்கிறான் கேட்டுப் பார்
“கேட்காமலா விடுவோம்?”
நிச்சயமாக கேட்போம் ஒருநாள்
யுத்தம் அவர்களுக்கு சாதாரண அன்றாட நிகழ்வாய், விளையாட்டாய் ஆகிப் போனது. ‘விளையாட்டாகி விட்டது யுத்தம்’-என்று சாதாரணமாய்க் கடந்து போகிறார். போரும் பீரங்கி குண்டு வெடிப்புகளும் ஈழத்து மக்கள் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகி விட்டதை இந்த கவிதை உணர்த்துகின்றது.நேற்று 80 குண்டுகள் வீழ்ந்து வெடித்தன இன்று 70 குண்டுகள் மட்டுமே வெடித்தன என்று உயிரை கொள்ளும் வெடி குண்டுகளை மிக சாதரணமாக எதிர் கொண்ட எம் தமிழீழ மக்கள் என்றைக்குமே போற்றப்பட வேண்டியவர்கள்.