- Back to Home »
- கவிதை »
- மெழுகின் மௌனம்..
Posted by : தமிழ் வேங்கை
வேறு ஆடை தேவயாயென்ன!!!
என்று
பிரம்மனின் அழகியல் படைப்புகளை
ருசிக்கிறான் காமுகன்
அன்றையப் பசி தீர்க்க..
மௌனமாய் உடைந்து துடிக்கிறது
அவள் கண்ணாடி இதயம்
அவன் வியர்வைத்துளி பிரதிபளிக்கும் வரை..
மௌனமாய் நகர்கிறது
அவள் இரவின் நொடிமுள்
அவன் ஆசை அடங்கும் வரை..
மௌனமாய் கரைகிறது
அவள் ஆன்மா கண்ணீர்
அவன் தாகம் தீரும் வரை...
மௌனமாய் எரிகிறது
அவள் உடல் மெழுகு
அவன் குளிர் காயும் வரை...
விடியலுக்காய் மௌனமாய்
காத்திருந்த மெழுகு
விடியுமுன்னரே
தீர்ந்துபோனது தான் விதியோ.... !!!
******************************
-விஜி தமிழ்