- Back to Home »
- கவிதை »
- உன்னை மகளாகப் பெற்ற மகிழ்வோடு...
Posted by : தமிழ் வேங்கை
சாகும்வயதானபோதும்எனக்குள்ளே
சாகப் பயம் இன்னும் மகளே- நீ
பாயும் புலியாகி காவலரண் மீது
காவலிருக்கின்றாய் மகளே!
நெஞ்சின் ஓரத்தில் நெருப்பு- உன்
நிமிர்ந்த வாழ்வெண்ணிச் செருக்கு
பிஞ்சில் மண் காக்கும் பொறுப்பு
உனைப் பார்க்க வர இன்று விருப்பு!
முந்தி இரவென்ன பகலும் தனியாகப்
போகத் துணை தேடும் மகளே-இன்று
குண்டு மழைக்குள்ளே நின்று பகை தன்னை
வென்று வருகின்றாய் மகளே,
தலைவன் தந்தானே வீரம்,
அதைத் தாங்கி மண் நிற்கும் நேரம்
கவலை எனக்கில்லை மகளே
உனைக் காணவரலாமா மகளே???
உன்னை மகளாகப் பெற்ற மகிழ்வோடு
உயிரை விட வேண்டும் மகளே- என்
பெண்ணும் நிமிர்ந்தின்று போரில் விளையாடும்
பெருமையது போதும் மகளே!
நிலவு தலை வாரும் சாமம்- உன்
நினைவில் உறவாடும் நேசம்
அழகு பூச்சூடும் அழகே- பகை
அடித்து விளையாடு மகளே!
சாகப் பயம் இன்னும் மகளே- நீ
பாயும் புலியாகி காவலரண் மீது
காவலிருக்கின்றாய் மகளே!
நெஞ்சின் ஓரத்தில் நெருப்பு- உன்
நிமிர்ந்த வாழ்வெண்ணிச் செருக்கு
பிஞ்சில் மண் காக்கும் பொறுப்பு
உனைப் பார்க்க வர இன்று விருப்பு!
முந்தி இரவென்ன பகலும் தனியாகப்
போகத் துணை தேடும் மகளே-இன்று
குண்டு மழைக்குள்ளே நின்று பகை தன்னை
வென்று வருகின்றாய் மகளே,
தலைவன் தந்தானே வீரம்,
அதைத் தாங்கி மண் நிற்கும் நேரம்
கவலை எனக்கில்லை மகளே
உனைக் காணவரலாமா மகளே???
உன்னை மகளாகப் பெற்ற மகிழ்வோடு
உயிரை விட வேண்டும் மகளே- என்
பெண்ணும் நிமிர்ந்தின்று போரில் விளையாடும்
பெருமையது போதும் மகளே!
நிலவு தலை வாரும் சாமம்- உன்
நினைவில் உறவாடும் நேசம்
அழகு பூச்சூடும் அழகே- பகை
அடித்து விளையாடு மகளே!