தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

ஒரே குற்றத்திற்கு இரண்டு முறை தண்டனை விதிக்க  முடியாது -- நீதிபதி கே. டி. தாமஸ் 

திருப்பெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 21.5.1991 அன்று நிகழ்ந்த மனித
வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் முருகன், சாந்தன், பேரறிவாளன், மற்றும் முருகனின் மனைவி நளினி ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
நளினி தரப்பில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவை பரிசீலித்த பிறகு நளினியின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மரண தண்டனையை எதிர்நோக்கி வேலூர் சிறையில் காத்திருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனுக்களை பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.

இதனையடுத்து, அவர்களை தூக்கிலிடுவதை நிறுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்யப்பட்டடது. இம்மனுவை விசாரித்த நீதிபதி 6 வார காலம் வரை அவர்களின் தூக்கு தண்டனையை நிறைவேற்றக் கூடாது என தடைவிதித்தார்.
இந்நிலையில், இவர்களின் மரண தண்டனையை 1999ம் ஆண்டு உறுதி செய்த உச்சநீதிமன்ற  அமர்வுக்கு தலைமை தாங்கிய முன்னாள் நீதிபதி கே.டி. தாமஸ் கேரள மாநிலம் கோட்டயத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்,  ‘’முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் 22 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளனர். அவர்களை இப்போது தூக்கிலிடுவது ஒரே குற்றத்துக்காக இரண்டு முறை தண்டனை விதிப்பது போல் ஆகிவிடும்.  இது நமது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. நியாயமற்றது . 
ஆயுள் தண்டனை காலத்திற்கும் மேலாக அவர்கள் சிறையில் தண்டனை அனுபவித்து விட்டதால் இது தொடர்பாக ஜனாதிபதி மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று கூறினார்.


.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -