தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

போராடும் தமிழக கல்லூரி மாணவர்களுக்காக....
 
2009 இல் விடுதலை புலிகளுக்கும், ஸ்ரீலங்கா ராணுவத்திற்கும் இடையே நடந்த போரில் லட்சக்கணக்கான மக்கள் திட்டமிட்டு ஸ்ரீலங்கா ராணுவத்தால் படு கொலை செய்யப்பட்டனர். அதில் போர்குற்றம் நடந்ததாக வந்த குற்ற சாட்டின் அடிப்படையில் ஐ நா மூவரை கொண்ட போர்குற்ற விசாரணை குழுவை அமைத்தது .அவர்கள் தீர விசாரித்து அறிக்கையை அளித்தனர் .அதை ஏற்றுக் கொள்ள மறுத்தது ஸ்ரீலங்கா,பிறகு இந்தியாவின் ஆலோசனைப்படி,
ஸ்ரீலங்கா அரசு செய்த பொர்குற்றத்தை பற்றி ஸ்ரீலங்கா அரசே விசாரித்து அதை நடை முறை படுத்த வேண்டும் என்ற தீர்மானம் ஐ நா வால் நிறைவேற்றப்பட்டது .

அதன்படி தமிழர்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக, ஸ்ரீலங்கா அரசால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை ஐ நா விடம் சமர்பித்தது. அதில் போர்குற்றம் நடந்ததை பற்றியோ ,லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதை பற்றியோ அந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை .தமிழர்களுக்கு எந்த விதமான நீதியையும் வழங்காத அந்த அறிக்கையினை அமுல்படுத்துவது தொடர்பாக ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் அமெரிக்கா ஒரு தீர்மானத்தை கடந்த மார்ச் மாதம் கொண்டு வந்தது .

ஐ ந மனித உரிமை ஆணையத்தில் 47 நாடுகள அங்கம் வகிக்கின்றன. 13 ஆப்ரிக்காவிற்கும்,13 ஆசியாவிற்கும்,8 லத்தின்அமெரிக்காவிற்கும் 7 மேற்கு ஐரோப்பா மற்றும் பிற வளர்ந்த நாடுகளுக்கும், 6 கிழக்கு ஐரோப்பாவிற்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் 26 இடங்கள் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஐ நா வின் உதவியுடன் நிறை வேற்றப்படும் .நடை முறை படுத்தப் படும் .

போர் நடந்த கால கட்டத்தில் ஐ நா வின் தீர்மான ங்களும் இந்தியாவின் வஞ்சக நிலைபாடும்

இறுதி போர் நடந்த 2009 மே மாதம் அமெரிக்க நாட்டின் ஆதரவுடன், கனடா, போர் நிறுத்த தீர்மானத்தைக் கொண்டு வந்தது . அதில் இலங்கை யில் நடந்து கொண்டிருக்கும் போர் இறுதி கட்டத்தை அடைந்து ள்ளது .லட்சக்கணக்கான பொது மக்கள் குறுகிய நிலப் பரப்பில் சிக்கி கொண்டுள்ளனர் அதை பற்றி தர்க்கம் செய்ய வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது .அன்று அந்த தீர்மானம் நிறை வேறியிருந்தால் லட்சக்கணக்கான் தமிழ் மக்கள் காப்பற்றப் பட்டிருப்பர் .

அன்று நடந்த வாக்கெடுப்பில் 47 நாடுகளில்,29 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன. 12 நாடுகள் எதிராக வாக்களித்தன.ஆறு நாடுகள் தங்கள் நிலைப் பாட்டைத் தெரிவிக்கவில்லை. அதனால், அந்தத் தீர்மானம் தோல்வியைக் கண்டது. இதில் சீனா, பாகிஸ்தான், ரஷ்ய, ஜப்பான், கியூபா, போன்ற நாடுகள் முக்கியமானவை. ஈழ மக்களின் உறவு வழி நாடான இந்தியா இலங்கையை ஆதரித்ததால் பிற நாடுகளும் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்தன .அந்த தீர்மானம் இந்தியாவின் உதவியுடன் தோற்கடிக்கப்பட்டது .

போர் முடிந்து லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டு, மூன்று லட்சம் மக்கள் முள் வேலி முகாமிற்குள் அடைக்கப் பட்டிருந்தனர்.அவர்களில் பல நூற்றுக் கணக்கானோர் குழந்தைகள் உட்பட, ஒரு வேளை உணவிற்கு வழி இல்லாமல் இறப்பதை கண்ட உலக நாடுகள், ஐ நா வில் மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தன .அதில் இதுவரை உலக நாடுகளால் கொடுக்கப்பட்ட நிதி உதவி பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைய வில்லை . அதை இலங்கை அரசு சிங்கள மக்களுக் காகவும் ராணுவதிர்காகவும் பயன் படுத்தி கொண்டது

எனவே குறைந்த பட்சம் உணவு பொருள்களையாவது இலங்கை அரசிடம் கொடுக்காமல் ஐ நா வின் மூலமாக நேரடியாக வழங்கக் கோரி கொண்டு வந்த தீர்மானத்தை வழக்கம் போல இந்தியா, சீனா பாகிஸ்தா னுடன் சேர்ந்து எதிர்த்தது.அன்று உரையாற்றிய இந்தியாவின் வெளியு றவு துறை அதிகாரி, இந்த தீர்மானத்தை கொண்டு வர வேண்டிய தேவையே எழவில்லை .

இலங்கை அரசு, தமிழ் மக்களுக்கு தேவையான அணைத்து உதவிகளை யும் செய்து வருகிறது.உலக நாடுகள்அளிக்கும் உதவிகளை இலங்கை அரசிடமே அளிக்க வேண்டும் என்று கூறினார் .அன்று அந்த தீர்மானம் நிறை வேற்றப்பட்டிருந்தால் தமிழர்களின் பல்லாயிரக்கணக்கான பட்டினி சாவுகளை தடுத்து இருக்க முடியும் . அந்த தீர்மானமும் இந்தியாவால் தோற்கடிக்கப்பட்டது .

அதற்குபிறகு போர்குற்றத்தை பற்றி விசாரிக்க ஐநா மூவர் குழுவை நியமித்தது. அவர்கள் தங்களது அறிக்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை பற்றி தெளிவாக குறிக்கப் பட்டிருந்தனர் இலங்கை அரசு அதை நடை முறை படுத்தவில்லை.

அதனால் ஐ நா மனித உரிமை மீறல்களை பற்றி விசாரிக்க நல்லிணக்க ஆணை குழுவை நியமிக்க போவதாக அறிவித்தது. உடனே ராஜபட்சே (ராணுவத்தின்) மனித உரிமை மீறல்களை பற்றி விசாரிக்க தாங்களே ஒரு குழுவை அமைப்பதாக கூறி ஓய்வு பெற்ற சிங்கள நீதிபதியின் தலைமையில் நல்லிணக்க ஆணை குழுவை அமைத்தார் .அந்த குழு கடந்த வருடம் தனது அறிக்கையை சமர்பித்தது .

அதில் ஈழத் தமிழர்கள் தொடர்ந்து வலியுறுத்தும் சுய நிர்ணய உரிமை, தமிழ் தேசிய இன மக்களுக்கான உரிமை, போன்றவற்றை பற்றி எதுவும் குறிப்பிட வில்லை .இந்த அறிக்கை ஈழ மக்களின் உரிமையில் 5 விழுக்காடு கூட பெற்று தர போவதில்லை.இதற்கே இந்தியாவும் இலங்கையும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன.

இலங்கை அமைத்த நல்லிணக்க ஆணை குழுவின் ஜெனிவா தீர்மானத்தில் இந்தியாவின் வஞ்சக செயல் !!!



அமெரிக்க கொண்டு வந்த தீர்மானத்தில் தமிழ் மக்களுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி இலங்கை எதிர்த்தது. இந்தியா அந்த தீர்மானத்தை ஆதரிக்க மறுத்தது .அதன் பிறகு இந்தியா தலையீட்டின் பேரில் அமெரிக்க தீர்மானத்தில் இந்தியா சில திருத்தங்களை கொண்டு வந்து தமிழ் மக்களுக்கு ஆதரான செய்திகளை இலங்கை அரசிற்கு ஆதரவாக மாற்றியது.

இந்தியா செய்த திருத்தங்கள்:-

இலங்கை அரசு ஏற்படுத்தியிருந்த போரிலிருந்து பாடம் கற்றல் மட்டும் நல்லிணக்க குழு வின் (LLRC--Lessons Learnt and Reconciliation Commission) பரிந்துரைகள் எவ்விதம் அமலாகிறது என்பதை இலங்கை அரசின் ஆலோசனையோடும் சம்மததொடும் மட்டுமே ஐ நா மேற்பார்வையிட வேண்டும் .என்ற திருத்தத்தை இந்தியா கொண்டு வந்தது .

இலங்கை சில பரிந்துரைகளை மேம்போக்காக அமல் படுத்தி விட்டு எல்லா வற்றையும் சரி செய்து விட்டோம் என்று கூறினால் அது உண்மைதானா என ஐ நா மன்றத்தால் ஆராய முடியாது அதற்கு இலங்கையின் அனுமதி வேண்டும் .

ஈழத் தமிழர்கள் நல வாழ்விற்காக ஐ நா அளிக்கும் உதவிகளை மதித்து ஏற்க வேண்டும்(respect the assistance) என்ற சொற்றொடரை இந்தியா நீக்கியது .அதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை ஐ நா வழங்கினாலும் இலங்கை விருப்பப்பட்டால் மட்டுமே உதவிகளை ஏற்கும். தமிழினமே இல்லாதொழிக்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் இலங்கைக்கு சாதகமாக இந்தியா செயல் பட்டது .

அதன் பிறகு மன்மோகன் சிங் ராஜபட்சேவிற்கு எழுதிய கடிதத்தில் இலங்கைக்கு எதிரான கருத்துக்களை நீக்கிய பிறகே இந்தியா ஐ நாவின் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது என்று கடிதம் எழுதுகிறார் .

மேற் கண்ட அனைத்தும் கடந்த ஆண்டு ஜெனிவா மனித உரிமை மாநாடு தீர்மான கால கட்டதில் நடந்தவை .

அந்த தீர்மானங்களை நிறைவேற்ற முயல்வதற்கு இலங்கைக்கு ஓர் ஆண்டு கால நிர்ணயம் கொடுக்க ப்பட்டது .ஓர் ஆண்டு முடிந்த பிறகும் இலங்கை அரசு எதையும் நிறைவேற்ற முயலவில்லை என்பதை விட மீண்டும் தமிழின அழிப்பை,மனித உரிமை மீறலை தமிழர்களின் மீது கடுமையாக திணித்து வருகிறது .

அதை எதிர்த்து அமெரிக்க மீண்டும் ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறது .

தமிழக முதல்வராக செயலலிதா பதவி ஏற்றவுடன் இலங்கையை கடுமையாக எதிர்த்தார். !

இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்கள் மறு குடியமர்வு செய்யப்படவும், அவர்களுக்கு சுய மரியாதையும், சிங்களவர்களுக்கு இணையாக அரசியலமைப்புச் சட்ட உரிமைகள் அனைத்தும் வழங்கப்படும் வரை அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி செயலலிதா தீர்மானத்தை நிறை வேற்றினார் .

இப்பொழுது ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கை ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டது தொடர்பாக அந்தக் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்டு வரவுள்ளது.

இலங்கைப் பிரச்னை தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்ற ப்பட்ட தீர்மானத்தின் மீது சாதகமான முறையில் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாக கருதிக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தத் தீர்மானத்துக்கு எதிராகவும், இலங்கைக்கு ஆதரவாகவும் இந்தியா வாக்களிக்கும் என நம்புவதாக இலங்கையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

மனித உரிமை மீறல் குறித்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மார்ச்சில் நடைபெறுகிறது. அமெரிக்கா கொண்டு வரவுள்ள இந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்என்று மன் மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தில் ஜெயலலிதா எழுதியுள்ளார்.

தமிழக அரசு வற்புறுத்தியும் ,இந்தியாவின் நிலை பாட்டை கடுமையாக எதிர்த்தும் ,ஜெனிவா தீர்மான த்தில் .- இந்தியா தனது குள்ள நரி வேலையை காட்டிஇருக்கிறது

அதில் இலங்கைக்கு எதிராக உள்ள சொற்களை நீக்க இந்தியா தனது அதிகார ஆற்றலை பயன்படுத்தி அதில் வெற்றியும் பெற்று விட்டது என தெரிகிறது .

ஆகா தமிழர்களுக்கு எள்ளளவும் பயன் தராத ஐ நா வின் தீர்மானத்தை தமிழர்கள் எதிர்க்க வேண்டும்.போர் குற்றம் என்ற சொல்லுக்கு மாற்றாக இனப் படுகொலை என்ற சொல்லை பயன் படுத்த வேண்டும் .அங்கு நடந்தது திட்டமிட்ட இனப் படுகொலையே என்பதை ஐ நா ஏற்றுக் கொள்ள வேண்டும் .அங்கு பொது வாக் கெடுப்பு நடத்தி தனி தமிழீழ நாடு அமைய வேண்டும் . இனப்படுகொலை என்பதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும் .

எனவே ஈழத்தில் நடந்தது போர்குற்றம் மட்டுமலல் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை ,எனவே அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அடங்கிய தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண் டும் என்ற இலக்கை நோக்கி தமிழர்கள் செயல் பட வேண்டும் .அதற்கு தேவையான அழுத்தத்தை கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தின் வாயிலாக நிறை வேற்ற வேண்டும் .

மாணவர்களின் போராட்டம் தமிழக அரசை நோக்கி இல்லாமல் நடுவண் அரசின் அனைத்து செயல் பாடுகளையும் முடக்கும் வகையில் அமைய
வேண்டும் .

தமிழினமே அழிந்தாலும் இந்தியா இலங்கையை ஆதரிப்பதன் நோக்கம் என்ன?

முதன்மையானது இத்தாலி சோனியாவின் தனிப்பட்ட வெறுப்பு.60 ஆண்டுகளாக நடந்து வரும் ஈழத்து போரின் நிலவரம் இந்தியாவிற்கு நன்றாக தெரியும் ஆனாலும் இந்தியாவின் நலனை கருதி தமிழர்களுக்கு ஆதரவாக இருந்தனர் .சோனியா விற்கு இந்திய நாட்டை பற்றி அதன் நலனின் அக்கறை இல்லை என்பதால் அவர் இந்திய நாட்டின் நலனை புறக்கணித்து தனது தனிப்பட்ட வெறுப்பிற்காக தமிழினத்தை அழித்து இந்தியாவின் அழிவிற்கு முதல் புள்ளியை துவக்கி உள்ளார் .

இந்தியாவிற்க்காகவே இந்தப் போரை நாம் நடத்தினோம் என ராஜபக்சே இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார் . இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என இந்திய நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் அறிவிக்கிறார் .

அடுத்தது இந்தியா இலங்கைக்கு இடையிலான வணிக ஒப்பந்தம், இரு நாட்டிற்கு இடையிலான முதலீட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம், என பல தொழிற் வர்த்தக ஒப்பந்தங்களை இந்திய இலங்கை அரசுகள் செய்திருப்பதன் மூலம் தமிழீழ மண்ணில் பல வட இந்திய பெருமுதலாளிகளின் பல ஆயிரம் கோடி முதலீட்டில் வர்த்தகம் நடை பெற்று வருகிறது .இந்த முதலாளிகளின் நலன்களை பாதுகாப்பதற்க்கும் ஈழத்தின் மீது தனது அரசியல் , ராணுவ மேலாதிக்கத்தை நிறுவுவதற்க்காகவுமே இந்தியா இலங்கையோடு கூட்டு சேர்ந்து இனக்கொலையை அரங்கேற்றியுள்ளது .

இந்தியா தமிழர்களை தனது வரலாற்று எதிரிகளாகவே கருதி வருவதாலும்,இங்கு , காஷ்மீர், நாகா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்கள் தனி நாடு கோரி போராடுவதாலும் தமிழர்களுக்கு தனி நாடு அமைந்து விடக் கூடாது என்பதற்காகவுமே இந்த இனக் கொலையை இலங்கையோடு சேர்ந்து இந்தியா நடந்தேற்றியது.

ஆரிய பார்ப்பன இந்திய அரசு 1949 இல் இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டதில் தொடங்கி சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம்,ராஜீவ் ஜெயவர்தனா ஒப்பந்தம்,ஈழத்திற்கு இந்திய கொலைப் படையை அனுப்பியது,சிங்களத்தோடும் துரோகக் குழுக்களோடும் சேர்ந்து கூட்டு சதி செய்து விடுதலைப் போராளிகளையும் மக்களையும் அழிக்க முயன்றது, இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்தது, ஈழம் தமிழீழ விடுதலைப் புலிகளால் முழுவதுமாக மீட்கப் படுவதை தடுக்க படைகளை அனுப்பியது, பன்னாட்டு அரங்கத்தில் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தது, புலிகள் இயக்கத்தில் கருணா போன்ற துரோகிகளை உருவாக்கி விடுதலை இயக்கத்தை உடைக்க முயற்சித்தது, அமைதிப் பேச்சு வார்த்தையை சீர்குலைத்தது, பல்வேறு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொண்டு சிங்களத்தோடு இணைந்து திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்தி முடித்தது,

இலங்கை அரசின் மீதான பன்னாட்டு நெருக்கடிகளை தடுத்து நிறுத்தியது, இன்று அமெரிக்காவோடு கூட்டு சேர்ந்து துரோகத் தீர்மானத்தைக் கொண்டு வருவது என நம்மை ஆளும் இந்திய அரசின் துரோக வரலாறு தொடர்கிறது.இந்த துரோக ஆரியப் பார்ப்பன இந்திய அரசை இனக்கொலைக் குற்றவாளிக் கூண்டில் இனியும் ஏற்றாமல் ஈழ விடுதலைக்கான போராட்டத்தை நம்மால் ஒரு அடி கூட முன்னகர்த்த முடியாது.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
நாங்கள் தமிழர்கள்..

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -