தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


தலைவரை பற்றி எங்காவது கேள்விப்படுகிற ஒன்று இரண்டு தகவலே புல்லரிக்க வைக்கும்...தலைவரோடு கூட நின்று களமாடியவரே தலைவரின் தூரநோக்கு,பற்றுறுதி,துணிவுவீரம்விவேகம்,தளாரத கம்பீரம் என்பன பற்றி சொல்வதை கேட்பதென்றால் கசக்குமா...?விடுதலைப்புலிகளின் கடல்புலிகளின்
தளபதி பிரிகேடியர் சூசை சொல்கிறார்.
இழப்புகளையும் துன்பங்களையும் கண்டு துவண்டு விடும் மனம் தலைவரிடம் இல்லை. மாறாக துன்பத்தைத் தந்தவனுக்கே அதனைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற தத்துவத்தைக் கொண்ட மனமே அவருடையது.
ஒரு முறை, மூன்று படகுகளையும் 30 போராளிகளையும் நாம் இழக்கிறோம். அந்த இழப்பு எம்மை நிலை குலையச்செய்கிறது. அந்த மனச் சோர்வுடன் தலைவரிடம் நடந்ததைப் போய்க் கூறிய போது தலைவர் சொல்கிறார்: 'இஞ்சை வா, முதல் அவன்ர மூன்று டோறாவையும் அதில் இருக்கிற கடற் படைகளையும் அழி. அதுக்கு என்ன வேணுமோ கேள். நான் உடனே தாறன்' என்று இழப்புக்குள் இருந்து எங்களைத் தட்டிக் கொடுத்து, தானும் அந்த அந்த இழப்புக்குள் ஆட்கொண்டு விடாத மன உறுதியுடன் விளங்கியதைக் காண முடிந்தது.

ஒவ்வொரு ஆயுதங்களிலும் அவரவருக்குச் சிறப்புத்தேர்ச்சி வேண்டும் என்பதில் தலைவர் அக்கறை கொண்டிருந்தவர் என்பதை விளக்க ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாமென்று நினைக்கிறேன். ஒரு முறை தலைவர் ஆர்பிஜி அனுப்பியிருந்தார். அதனைப் புலேந்தி அம்மான் ஆட்கள் புல்மோட்டையில் வைத்து ராங் ஒன்றை அடிக்க, அதில் ராங் வெடிக்கவில்லை. அது பிழைத்துவிட்டது. எங்கோ போய்விட்டது. அப்போது எல்லோரும் முடிவெடுத்தனர். அந்த ஆயுதம் பயனளிக்காது என்று அப்படியே வைத்துவிட்டனர். தலைவர் சொல்லி அனுப்புகிறார்.  'மண்ணை நிறைச்சுப்போட்டு பூச்சாடியா கவுட்டு வைக்கட்டாம்' என்று பேசிப் போட்டு ஆயுதத்தைக் கொண்டு வருமாறு சொல்லிவிட, அதைக் கொண்டு போய்க் கொடுக்கிறோம். அப்போது அண்ணை சொல்கிறார் 'ஆயுதங்களைக் கொடுத்தா ஸ்ராண்ட் போட்டு அடுக்கி வைக்கிறது. ஏதும் எண்டால் அதத் தூக்கிக் கொண்டு ஓடிப்போய் அடிச்சுப்போட்டுத் திரும்பவும் ஸ்ராண்டில் வைக்கிறது. அந்த ஆயுதத்தால 100 மீற்றரிலோ 200 மீற்றரிலோ சுட்டுப் பாக்கிறது இல்லை'.

நான் வடமராட்சியில இருக்கும்போது எனக்குக் கீழ இருந்த ஓராள் தலைவருக்குப் போய்ச் சொல்லுகிறார், 'ஆமி சுடச்சுட வாறான்' என்று. அப்போது தலைவர் 'சுடச்சுட வாறான் என்றால் அவன் என்ன பிளட் புறூவா போட்டிருக்கிறான்' என்று அந்தப் போராளியைக் கேட்கிறார். உண்மை யிலேயே அதற்குச் சரியான காரணம், சரியான முறையில் சூட்டுத் தேர்வு செய்து இவர்தான் இந்த ஆயுதத்திற்கு கைதேர்ந்தவர் என்று நாங்கள் விடவில்லை என்பதாகும். அண்ணை நாட்டுக்கு வந்த பிறகுதான் அவரவருக்கென்று பயிற்சிகள் வழங்கப்பட்டு அவரவருக்கென்று தேர்ந்த ஆயுதங்கள் வழங்கப்பட்டன. தலைவர் இதைத் செய்த பின் எல்லா ஆயுதங்களுமே நல்ல வெற்றியை எங்களுக்குத் தந்தன.

தவறு விடும் போராளிகளைத் தண்டிப்பதிலும் தலைவர் கையாளும் விதம் ஒரு தனித்துவமானது. ஒருமுறை தவறு செய்தவர் மீண்டும் அப்பிழையைச் செய்ய விட வைக்காது.வடமராச்சியில் Ôஓப்பிறேசன் நடவடிக்கையில் தாக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாமல் எஞ்சிய போராளிகளைக் கூட்டிக்கொண்டு தென்மராட்சிக்குப் போய்த் தலைவரைச் சந்திக்கிறேன்Õ அப்பொழுது தலைவர் சொல்கிறார் : 'வடமராட்சிய விட்டிட்டு வந்து தென்மராட்சியில நிர்வாகம் நடத்தலாம் எண்டு நினைக்காதை, அது அழகில்லை. ஒன்றில வடமராட்சிய பிடி, இல்லையெண்டா அந்த முயற்சியில வீரச்சாவடை. அப்பதான் புதிய பரம்பரை ஒன்று எங்கள் போராட்டத்தை முன்னெடுக்கும்' என்ற தலைவரின் அந்தக் கட்டளை, பின்னாளில் பல வெற்றிகளுக்குக் காரணமாயிருந்தது.

1998 காலப்பகுதி - எமது அரசியல் ஆலோசகர் பாலா அண்ணா கடும் சிறுநீரகப் பாதிப்பிற்குள்ளாகியிருந்தா

சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்ப சிறீலங்கா அரசு அனுமதிக்கவில்லை. எனவே கடலால் அனுப்புவதென முடிவெடுக்கப்பட்டது. பயணம் ஆரம்பமாகும் நேரமும் வந்தது. நானும் கூடச்சென்று அனுப்பிவிட்டு வருவதாக இருந்தது. அப்பொழுது தலைவர் தனது கட்டளை மையத்திற்கு தளபதியை அனுப்பி, நிலைமையை உடனுக்குடன் தனக்கு அறிவிக்கும்படி கூறிவிட்டு வழமையாக நடவடிக்கை நேரங்களில் நான் நிற்கும் இடத்தில், தான் வந்து நின்று எங்களது ஒவ்வொரு அசைவையும் கண்காணித்துக் கொண்டு, நான் திரும்பி வரும்வரை அவ்விடத்திலேயே நின்றார். தலைவரின் இந்தச் செயற்பாட்டில் அவரது கடமையுணர்வு, பற்றுணர்வு எத்தகையது என்பதை அறியக்கூடியதாய் இருந்தது. ஒரு வட்டத்திற்குள் இருந்த பெண்களை, ஆண்களுக்கு நிகராகக் களத்தில் இறக்கி மாபெரும் சமூகப் புரட்சியை நடத்திக் காட்டியமைக்கு இன்னுமொரு சம்பவத்தை எடுத்துக் கூறலாம். 5 பிள்ளைகளின் தாயொருவர் சிறப்பாக ஒரே சண்டைக்கான பயிற்சியில், மகனும் தாயும் பயிற்சி எடுத்தும் பின் கடற் சண்டையொன்றில் அத்தாய் 50 கலிபருடன் வீரகாவியமானதையும் எடுத்துக் கொள்ளலாம்.

வளர்ந்து வரக் கூடியவர்களை அவ்வத்துறைகளில் வளர்க்க வேண்டும் என்ற பண்பை தலைவரின் செயற்பாட்டில் காணலாம். 1990ம் ஆண்டு நான் வட மராட்சிக்குப் பொறுப்பாக இருந்தபோது தலைவர் என்னை அழைத்து, மருத்துவத்துறையில் தேர்ச்சி பெற்ற ஒரு போராளியை என்னிடம் தந்து அவரைப் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பினார். அன்று தூரநோக்கோடு அவரை அனுப்பி கல்விகற்க வைத்தமை இன்று அந்தப் போராளி வைத்தியத்துறையில் வல்லுனராக, போராளிகளுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் சேவை செய்யும் வைத்திய கலாநிதியாக மாறி நிற்கின்றார்.

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -