தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


எங்கள் ஈழ மண்ணுக்கு என்ன குறை?
கொம்புத் தேனும், கொடி வாழையும்
பாலைப்பழக் காலத்துப்
பன்றிக் கொழுப்பும்,
நந்திக்கடலின் நண்டும்
உண்டு மகிழ்ந்தவனுக்கே
உண்மை தெரியும்...!
தம்பலகாமத்து நெல் வயல்களில்
வெட்டியடுக்கிய சூட்டின் வாசம்
மூக்கு நுனியை முத்தமிடும்போதே
நாக்கில் நீரூறும்.
பச்சையரிசிச் சோறு படுருசி.
பனங்காம பலாப்பலத்துக்கும்
பன்குளத்துத் தயிருக்கும் எது நிகர்?
எங்கள் ஈழ மண்ணுக்கு
என்ன குறை

எத்தனை அழகுடா எம் தேசம்
எதுக்கு நிகர் எத்தேசமடா ..!
ஆயிரம் நாடு கூடிவரினும்
அன்னை தமிழீழ மண்ணுக்கு
ஈடாகுமா....!

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -