வானிடை நீந்தும் பறவைகள் போல வாழ்வது எங்களின் எல்லையடா தன் வாசலில் நின்று சேவகம் செய்பவன் தமிழனின் பிள்ளை இல்லையடா தாயகம் காட்டும் பாதையிலே நாங்கள் நடப்பது தானே கடமையடா எங்கள் நரம்பினில் ஓடும் குருதியில் தானேபிறந்திடும் நாளைய ஈழமடா என்றும் நிலமது விடியாதிருக்கையில் எங்கள் இளமையும் முன்னர் பணியாது விடுதலை நெருப்பில் தினம் தினம் குளித்தால் தடை எனும் ஒரு பொருள் கிடையாது !!!!!