- Back to Home »
- ஈழம் »
- சிங்கள மிருக வெறிபிடித்த இனவழிப்பு ஸ்ரீலங்கா இராணுவப் பிடியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கேணல் வசந்தன் !
சிங்கள மிருக வெறிபிடித்த இனவழிப்பு ஸ்ரீலங்கா இராணுவப் பிடியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கேணல் வசந்தன் !
Posted by : தமிழ் வேங்கை

இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கைகள்
பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் தமக்கு என்ன ஆகப்போகின்றதோ என்ற ஏக்கத்தோடு
நிலத்தில் அமர்த்தப்பட்ட நிலையில் சில தமிழர்கள் உள்ள காட்சிப்பதிவாக புகைப்படம்
ஒன்று அண்மையில் வெளியாகியிருந்தது.
அதில் ஒரு சிறுவனும் இருந்தார். அவருக்கு பாலச்சந்திரனை விட வயது
குறைவாக இருக்கும். அப் புகைப்படத்தில் முதலாவதாக இருப்பவர் கேணல் வசந்தன்
என்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.கேணல் வசந்தனது உறவினர்கள் தொடர்புகொண்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்கள். அதில் உள்ள் இன்னுமொருவர் தற்சமயம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நன்றி தமிழ் இணையங்கள்
********************************************************************************
2009 இறுதியுத்தத்தின் போது இராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டைக் களத்தில் திருமலை மாவட்ட சிறப்புத் தளபதி வசந்தன் அவர்கள் இலங்கையரச படைகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் கடைசிச் சமர் வரை நின்று களமாடிய தளபதிகளில் தளபதி கேணல் வசந்தனும் ஒருவர்.இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பழகுவதற்கு ஒரு மென்போக்கான தளபதியாகவும் போராளிகளும் பொறுப்பாளர்களும் விரும்பப்படுபவராக இருந்தார். தளபதி வசந்தன் புலனாய்வுத் துறையில் பொட்டம்மானுடனும் , கபிலம்மானுடனும் சில வருடங்கள் இணைந்து திறம்படச் செய்யப்பட்டார்.
திருமலை மாவட்டத்தின் மிக நீண்டகாலப் போராளிகளில் தளபதி வசந்தன் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தளபதி சொர்ணம் அவர்களின் ஆரம்பகால நண்பரும் ஆவார். முள்ளிவாய்க்கால் யுத்தகளத்தில் தனது புதல்வர் ஒருவரையும் இழந்திருந்தார்.
இவர் இறுதியுத்த சமர்க்களத்திலிருந்து கைது செய்யப்பட்ட பின்னர் உடைகள் களையப்பட்டு, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் சிறிலங்கா இனவெறி அரச படைகளால் நந்திக்கடல் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட போராளிகளில் இவரும் ஒருவர் என்றும் தெரியவருகிறது. 2006 இன் பிற்பகுதியில் திருமலை மாவட்டத்தின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற வசந்தன் அவர்கள் கேணல் தர போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் போர்க்குற்றம்: "இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்"- புதிய தலைமுறை புதிய ஆதாரம் வெளியீடு
போருக்கு பிந்தைய காலகட்டத்தில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் அத்தனையுமே போர்க் குற்றங்கள்தான்.