எனக்கு மிக அருகில் என் நிழலாக நீ வேண்டும்.. தினம் என் விடியல் உன் முகம் பார்த்தே மலர வேண்டும் , உன் அக்கறை மிஞ்சிய கவனிப்பை நேசிப்பதால்காய்ச்சல் எனக்கு அடிக்கடி வர வேண்டும் , நித்தம் நூறு முறையேனும் உன்னை மட்டும் நேசிப்பதாய் ஒப்பிக்கவேண்டும் , விழிகள் இரண்டிலும் நீயே நிரம்பி இருக்க வேண்டும் , நான் பார்க்கும் அனைத்திலும் உன் பிம்பம் விழ வேண்டும் .. கொட்டும் மழையில் உன் விரல் கோர்த்து ஒரு நடை வேண்டும். !