- Back to Home »
- ஈழம் »
- பாலச்சந்திரன் உடலும் எரிக்கப்பட்டிருக்கலாம் ?
Posted by : தமிழ் வேங்கை
2009ம் ஆண்டு மே மாதம் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த கேணல் ரமேஷ்
அவர்கள் விசாரிக்கப்படும் வீடியோ ஏற்கனவே வெளியாகி அதிர்வலைகளைத் தோற்றுவித்தது.
பின்னர் அவரது உடல் எரியூட்டப்பட்ட நிலையில் உள்ள புகைப்படங்களும் வெளியானது.
முள்ளிவாய்க்காலுக்கு அருகாமையில் உள்ள, ஒரு
இடத்தில் வைத்தே
இவரது உடல் எரியூட்டப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சரணடைந்த
பாலச்சந்திரனையும் இலங்கை அரச படைகள் சுட்டுக்கொன்றுள்ளதும் வெளியாகியுள்ளது. இன்
நிலையில், கேணல் ரமேஷ் அவர்களின் உடலை எரித்தது போல ,
சிறுவன் பாலச்சந்திரனின் உடலையும் இலங்கை இராணுவம்
எரித்திருக்கவேண்டும் என்று, நபத்தகுந்த வட்டாரங்களில்
இருந்து செய்திகள் கசிந்துள்ளது.
கொல்லப்பட்ட இசைப்பிரியா, ப.நடேசன், புலித்தேவன் மற்றும் கேணல் ரமேஷ் ஆகியோரின் உடலங்கள் எரியூட்டப்பட்டது
என்றும் இவ்வாறே பாலச்சந்திரன் உடலும் எரியூட்டப்பட்டிருக்கும் என்று
கூறப்படுகிறது. அன் நாட்களில் கோட்டபாயவின் உத்தரவுக்கு அமையவே, இலங்கை இராணுவத்தின் 53 படைப்பிரிவினரும் அதிரடிப்
படைப்பிரிவினரும் செயல்பட்டனர். எனவே அவரது உத்தரவுக்கு அமைய நிச்சயம்
பாலச்சந்திரன் உடல் எரியூட்டப்பட்டிருக்கும் என தற்போது கசியும் சில செய்திகள்
தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்ட இசைப்பிரியா, ப.நடேசன், புலித்தேவன் மற்றும் கேணல் ரமேஷ் ஆகியோரின் உடலங்கள் எரியூட்டப்பட்டது என்றும் இவ்வாறே பாலச்சந்திரன் உடலும் எரியூட்டப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அன் நாட்களில் கோட்டபாயவின் உத்தரவுக்கு அமையவே, இலங்கை இராணுவத்தின் 53 படைப்பிரிவினரும் அதிரடிப் படைப்பிரிவினரும் செயல்பட்டனர். எனவே அவரது உத்தரவுக்கு அமைய நிச்சயம் பாலச்சந்திரன் உடல் எரியூட்டப்பட்டிருக்கும் என தற்போது கசியும் சில செய்திகள் தெரிவிக்கின்றன.