தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


தகர்ந்து போன கனவுகளுடனும்
அழிந்து போன தேசத்துடனும்
நாம் அனாதையாகவே ஆக்கப்பட்டோம்....

அத்துடன் உங்கள் மீதான எம் நம்பிக்கை இல்லாமலே போனது..
இன்று,,,,,,,,
என்ன சொல்வதென்று தெரியவில்லை
இது கனவா இல்லை நனவா என்று கூட தெரியவில்லை

தூக்கத்தில் எழுந்து அதிசயத்தை பார்ப்பதை போல் இருக்கிறது எமக்கு

எமக்காயும் போராடுவதற்கு , எமக்காயும் கண்ணீர் விடுவதற்கு, எமக்காயும் ஒரு கணம் கவலைப்படுவதற்கு, எமக்காயும் உண்ணாமல் உடம்பை வருத்துவதற்கு
எமக்கு உறவுகள் இருக்கின்றன‌

எப்படி இருக்கிறது தெரியுமா எங்களுக்கு

இந்த உணர்ச்சியை எங்களால் பிரதிபலிக்க முடியாது உறவுகளே

பேசாமல் இருந்த ஊமை பிள்ளைக்கு பேச்சு வந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது

உங்களை எல்லாம் கட்டி பிடித்து கண்ணீர் சொரிய வேண்டும் போல் இருக்கிறது

உங்களை விட்டால் எங்களுக்கு எவருமே இல்லை

எங்களுக்கு மீண்டும் நம்பிக்கை துளிர்க்கிறது
எல்லாமும் உங்களால் தான் முடியப் போகிறது

என் அன்பான உறவுகளே

உங்களை விட்டால் இந்த ஈழத்தமிழருக்கு வேறு உறவுகள் இல்லை

நாம் போய் இன்னோர் இடத்திலும் நிற்கப் போவதில்லை

எம்மை வழி நடத்தும் அந்த கரிகாலன் இது நாள் வரையிலும் அப்படியே எமக்கு சொல்லி கொடுத்துள்ளான்

நாம் யாரிடத்திலும் போய் நிற்க மாட்டோம்

உம்மிடத்தில் மட்டுமே கேட்போம்
அது எம் உரிமை

ஒரு தந்தையிடம் பிள்ளைக்கிருக்கும் உரிமை

கடைசி வரையிலும் நீங்கள் தள‌ர்ந்து விடாதீர்கள்

ஏன் என்றால் எங்களின் கனவுகளின் கடைசி நம்பிக்கை நீங்கள் மட்டும் தான்....

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -