முல்லைத்தீவு
மாவட்டத்தின் முள்ளியவளையில் இரண்டாம் வட்டாரத்தில் அமைந்துள்ள தமிழ் மக்களின்
குடிசைகள் இனந்தெரியாதோரால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.இன்று ஞாயிற்றுக்கிழமை
அதிகாலை 1.30 மணிக்கே குடிசைகள் எரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.காடழிப்பு தொடர்பாக தமிழ்-முஸ்லீம்களுக்கிடையினில் அண்மையில்
முறுகல் நிலை ஏற்பட்ட பகுதியில் அமைந்துள்ள நான்கு குடிசைகளே இவ்வாறு
எரிக்கப்பட்டுள்ளது.முஸ்லீம்களேஇத்தீக்கிரையாக்கல் சம்பவங்களின் பின்னணியினில் இருந்ததாக கூறப்படுகின்ற
போதும் திட்டமிட்ட வகையினில் இரு தரப்புகளிடையே மோதலொன்றை தூண்டி விட படைத்தரப்பே
பின்னணியினில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது . எனினும் அக்குடிசையில் இருந்த
உடமைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. சம்பவம் இடம்பெற்ற வேளை இவ் வீடுகளில்
இருந்தவர்கள் தேவைகளின் பொருட்டு வேறு இடங்களுக்கு சென்றிருந்ததனால்
உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை.
27 வயதுடைய இரு பிள்ளைகளின் விதவைத்தாயின் குடிசையும் ஏனைய
நால்வரதும் வீடுகளுமே இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள்
தெரிவித்தனர்.இந் நிலையில் அப்பகுதியியல் வாழும் ஏனைய பொது மக்கள் தாம் அங்கு
வசிப்பது தொடர்பில் அச்சுறுத்தலாக உள்ளதெனவும் தெரிவித்தனர்.
ஆமைச்சர் றிசாத் பதியுதீனின் ஏற்பாட்டினில் முள்ளியவளையினில்
முஸ்லீம்களை குடியேற்ற முயற்சிகள் அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.எனினும்
தமிழ் முஸ்லீம்களிடையே மீண்டும் மோதல் சூழலை ஏற்படுத்த இத்தீக்கிரையாக்கல்
நடந்திருப்பதாக அமைச்சர் றிசாத் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.