- Back to Home »
- ஈழம் »
- மாவீரர் எழுச்சி நாட்கள் 25 -27
Posted by : தமிழ் வேங்கை

ஆரம்ப நாள் காலை 8 மணிக்கு தேசியக் கொடி ஏற்றத்தைத் தொடர்ந்து
மாவீரர் எழுச்சி நாட்கள் கொண்டாட்டம் ஆரம்பமாகும். தமிழீழம் முழுவதும் எழுச்சிக் கோலம்
பூண்டு பொலிவுடன் விளங்கும். அனைத்துத் தமிழீழ மக்களும் அலங்கரிப்பு நிகழ்ச்சியிலும்
வீரவணக்க நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வார்கள். வேறு களியாட்டங்கள் கொண்டாட்டங்கள் நடைபெறமாட்டாது.
தேவையற்ற கேளிக்கைகள் வேண்டத்தகாத சூழ்நிலைகள் மறைந்துவிடும். மதுச்சாலைகள் மூடப்பட்டு
மது பாவிப்பதை நிறுத்திவிடுவார்கள். வீடுகள் தோறும் விடுதலைக் கீதங்கள் ஒலிக்கும்.
மக்கள் பிரிவு பிரிவாக அமைப்புக்கள் ரீதியாக ஆக்கபூர்வ வேலைத் திட்டங்களிலும் மற்றும்
மாவீரர் நாள் நிகழ்வுகளிலும் கலந்துகொள்வர்.
பாடசாலைகள்
ஆசிரியர்கள் மாவீரரின் மாண்பினையும் மாவீரர் நாளின் மகிமையையும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தெளிவினை ஏற்படுத்துவார்கள். பாடசாலைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும். நவம்பர் 25 ஆம் நாள் காலை
9.00 மணிக்கு தேசியக் கொடி ஏற்றலும்இ பாடசாலைகளில் வீரவணக்கக் கூட்டங்கள் கலைநிகழ்ச்சிகள்
நடைபெறும். மாவீரர் நினைவாக சமூக சேவைகளிலும் ஈடுபடுவர். மாவீரருக்கு மலர் வணக்கம்
செலுத்தும் பணியினை மாணவர்கள் பொது மக்களும் பொது நிறுவனங்களும் முழுமையாக இணைவதில்
தேசியப்பற்று உரமேற்றப்படுகிறது.
பாடசாலைகள்
ஆசிரியர்கள் மாவீரரின் மாண்பினையும் மாவீரர் நாளின் மகிமையையும் மாணவர்களுக்கு முன்கூட்டியே தெளிவினை ஏற்படுத்துவார்கள். பாடசாலைகள் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.