தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


வெட்டி நாறி மலையை, வெட்டி நாறி விகாரையாக மாற்ற யாரோ அண்மையில் முயற்சி செய்திருந்தனர். வன்னி என்றதும் எம் இயதக் கதவுகளைத் தட்டித் திறப்பது வீரம்.
ஒல்லாந்தர் கோட்டைகளை வென்று, வாட்கொடி ஏற்றி, எந்த ஏகாதிபத்திற்கும் அடிபணியாது பீரங்கிகளுக்கெதிராக. வாட்களை ஏந்திப் போராடி வீர மரணமடைந்த மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம், அவன் தன் மறவைக் கேட்டு நஞ்சை உண்டு மடிந்த காதலி குருவிச்சி நாச்சியின் வீரம் அறுவர் சேர்ந்து ஆண்ட வன்னி வள நாட்டை அவர்கள் அறுவரும் தமிழ் நாட்டிற்கு தலயாத்திரை சென்ற போது, கைப்பற்றப் போர்தொடுத்த அரசனிற்கு எதிராக அவ் அறுவர் துணவியரும் பணிப்பெண் ஒருவருமாக எழுவரும் ஆண்வேடமிட்டு போர்கோலம் ப10ண்டு களம் சென்று சமராடிய வீரம் என்பது போன்ற வரலாறுகளைக் கொண்டிருக்கும் வன்னி மண் தன்னகத்தே பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகளைக் சொல்லக்கூடிய பல பொக்கிஷங்களையும் கொண்டுள்ளது என்பது யாவருக்கும் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

எனவே யாவரும் அவற்றைத்தெரிந்து கொள்வதன் மூலம் இனிவரும் காலங்களில் பல்லாயிரம் ஆண்டுகளிற்கு முற்பட்ட வரலாறுகள் வெளிக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற அவாவிலேயே இக் கட்டுரையை எழுத விழைந்துள்ளேன். வன்னி மண்ணில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் கண்ணி வெடிகளும் தோட்டாக்களுமே பதில் சொல்லிக் கொண்டிருக்கும். இன்றைய நிலையில் இக் கட்டுரை தேவையான என நீங்கள் கேட்கலாம். இன்றைய சூழ்நிலையில் இத்தகைய ஆய்வுகள் சாத்தியப்படாத ஒன்றாக உள்ள போதிலும் இனிவரும் காலங்களில் அது சாத்தியப்படலாம். அப்படியான ஒரு சூழ்நிலை உருவாகும் போது அவ்வரலாறுகளை வெளிக் கொண்டு வர விளையும் சமகால புத்திஜிவிகளிற்கு முன்பு கண்டறியப்பட்ட சில தகவல்களைக் கடத்துவதே எனது நோக்கமாகும். இதில் வரும் எந்தக் தகவலும் என்னால் கண்டறியப்பட்டவை அல்ல.

இதை உனது சொந்தக் கட்டுரை என்பதை விட பல்வேறு சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்த, பல்வேறு ஆசிரியர்களினதும், தொல்பொருள் ஆய்வாளர்களினதும் கட்டுரைகளின் தொகுப்பு என்று சொல்வதே சரியாக இருக்கும்.
வன்னி மண் இன்று வடபுலத்தே ஆனையிறவையும் தென்புலத்தே அனுராதபுரத்தையும் கிழக்கு மேற்குத் திசைகளில் இந்து சமுத்திரத்தையும் எல்லைகளாகக் கொண்ட நிலப் பரப்பாகச் (வவுனியா, மன்னார் , முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள்) சுருங்கி விட்ட போதிலும், முன்பொரு காலத்தில் யாழ்ப்பாணத்திற்கும் கண்டிக்கும் இடையே உள்ள நாடு வன்னி வள நாடு என வழங்கப்பட்டது. கிழக்கே திருகோணமலை, மட்டக்களப்பு, கொட்டியாரம், யால பாலுகமும் மேற்கேயுள்ள புத்தளம் முதலியனவும் முற்காலத்தில் வன்னி நாட்டைச் சேர்ந்திருந்தன. பின்னர் டச்சுக்காரர் காலத்தில் வன்னியின் தெற்கு எல்லையாக அரிப்பு ஆறும், காலு ஆறும் இருந்தன. இப்படியாக, வளம் கொழித்து விளங்கிய வன்னி நாடு இன்று தன் பெரும் பகுதியை காடுகளுக்குள் தொலைத்து விட்டு, சோகங்களையே சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. பட்டினிச் சாவுகளும் அங்கு பாதம் பதிக்கத் தொடங்கி விட்டன. ஆனால் ஈழத்தின் உணவுக் களஞ்சியம் எனப் போற்றப்படும் செந்நெற் களனியாக விளங்கிய வன்னி மண் மீண்டும் செழிக்க வேண்டும்.

முதற்கண் வன்னி என்ற பெயர் வந்ததற்கான காரணத்தை நோக்கி அப்பாற் செல்வது சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்.
வன்னி என்றால் நெருப்பு எவனும் பொருள் தமிழ் இலக்கியங்களில் வழங்கி வருகிறது. எனவே வன்னியர்கள் அக்கினி குலத்தின் வழிவந்தவர்கள் என்ற கூற்று ஏற்றுக் கொள்ளத்தக்கது. அந்த வன்னியர்கள் வாழ்ந்த, வாழ்கின்ற மண் வன்னி என்றழைக்கப்பட்டது.

எவருக்கும் அடங்கிப் போகாத குணமும் இரத்தத்தில் ஊறிய வீரமும் கொண்டவர்களே வன்னியர்களாவர். இனி வடக்கே யாழ்ப்பாண மன்னர்க்கோ தெற்கே அனுராதபுர மன்னர்களான வன்னியர் தம் குடியிருப்புக்கள் கட்டு (இன்று முத்தையன் கட்டாக மருவி விட்டது) *****************************************************************************************************

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -