தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

காஞ்சிபுரத்தில் நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் 15 செப்டம்பர் 1909 பிறந்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தனது பள்ளிப் படிப்பை சென்னை பச்சையப்பன் உயர்நிலை பள்ளியிலும், பி.ஏ. மற்றும் எம்.ஏ.பட்ட படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும் படித்தார். தமிழ் மற்றும் ஆங்கிலம்
ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வாதத்திறமை, கொண்ட அண்ணா அவர்கள் பள்ளி ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கினார்.ஏழை எளிய மக்கள் மீது கொண்ட பற்றினால் அவர்களுக்கு சேவை செய்ய அரசியலில் ஈடுபட முன்வந்தர். 1934ல் திருப்பூர் இளைஞர் மாநாட்டில் பெரியார் ஈ.வெ. ராமசாமி அவர்களை சந்தித்தார்.பெரியார் மீது கொண்ட ஈர்ப்பினால் 1935ல் நீதிக்கட்சியில் சேர்ந்தார் . கருத்து வேறுபாட்டினால் பெரியாரிடமிருந்து பிரிந்து 1949 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தை நிறுவினார் 1957ல் அண்ணா அவர்களின் தலைமையிலான திமுக 15 சட்டமன்ற மற்றும் 2 பாராளுமன்ற தொகுதிகளை கைப்பற்றியது .அண்ணா காஞ்சிபுரம் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.அந்த தேர்தலில் அண்ணா தலைமையிலான தி.மு.க. 15 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநில எதிர்க்கட்சி தலைவர் ஆனார் அண்ணா. 1962ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் 143 இடங்களில் போட்டியிட்ட அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் 50 இடங்களை வென்றது.இந்த தேர்தலில் அண்ணா அவர்கள் தோற்றபோதும் மாநிலங்களவை உறுபினராக நியமிக்கப்பட்டார். 1967ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், அண்ணா தலைமையிலான தி.மு.க 174 இடங்களில் போட்டியிட்டு 137 தொகுதிகளில் வெற்றி பெற்று அண்ணா அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் ஆனார்.நாட்டிலே முழு பெரும்பான்மையுடன் காங்கிரஸ் அல்லாத கட்சி முதல் முறையாக ஆட்சியை கைப்பற்றியது என்று பெருமையும் பெற்றார். இந்த தேர்தலில் காங்கிரஸ் ஒன்பது மாநிலங்களில் தோல்வி அடைந்தது இவற்றில் அண்ணா தலைமையிலான திமுக மட்டுமே பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றது. இத்தேர்தல் வெற்றியின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் முற்றுப்புள்ளி வைத்தார்.(அன்று தோற்ற காங்கிரஸ் இன்றுவரை தமிழ்நாட்டில் எழுட்சிபெரவில்லை) 10 செப்டம்பர் 1968 அன்று அண்ணா மருத்துவ சிகிச்சைக்காக நியூயார்க் சென்றார் .அங்கு அண்ணாவிற்கு புற்றுநோய் அறுவை சிகிச்சைஅளிக்கப்பட்டது.தாயகம் திரும்பிய அவரது உடல் நிலை சிலமாதங்களில் மேலும் மோசமடைந்ததால் பிப்ரவரி 3 1969 அன்று காலமானார் . அண்ணா அவர்கள் தமிழகத்தை ஆண்டது இரண்டு வருடங்கள் மட்டும் தான். அனால் தமிழிற்காகவும், தமிழ் மக்களுகாகவும் ஆற்றிய தொண்டு வினைத்தொடும் அளவிற்கு நீண்டுகொண்டே போகும். தமது எளிமையாலும், கணீர் பேச்சினாலும்,ஏழை எளிய மக்கள் மீது கொண்ட அக்கரையினாலும் அன்று முதல் இன்றுவரை மக்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருகிறார் பேரறிஞர் பெருந்தகை இதற்கு உதாரணம் அண்ணா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட 15 மில்லியன் மக்கள் சாட்சி. (அதிக மக்கள் அஞ்சலி செலுத்திய தலைவர் என்ற கின்னஸ் சாதனை படைத்தது அவரது இறுதி ஊர்வலம் என்பது குருப்பிடதக்கது ).

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -