தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

என்றும் ஒளி வீசும் தத்துவ விளக்கு! வழிகாட்டிய விழிச்சுடர் அன்ரன் பாலசிங்கம்!
தன் தாய் மண்ணையும், தாயக மக்களையும், தனது தாயக மக்களின் விடுதலையையும் தன் உயிரிலும் மேலாக நேசித்த அந்த அறிவுச்சுடர், அகன்ற சமுத்திரங்களுக்கும் உயர்ந்த மலைகளுக்கும் பாயும் பெருநதிகளுக்கும்
அப்பால் உள்ள லண்டன் மாநகரில் தன் வாழ்க்கைப் பயணத்தை நிறைவு செய்தது! தேம்ஸ் நதியை வருடிப்பரவிய காற்றில் அவரின் உயிரும் கரைந்து போனது! பலரின் வாழ்வு அவர்களின் சாவுடன் முற்றுப்புள்ளிக்குள் சிக்கி முடிந்து விடுவதுண்டு. மக்களுக்காகவே தங்களை அர்ப்பணித்தவர்களின் வாழ்வு சாவையும் கடந்து நிலைபெற்று விடுவதுண்டு.
பாலா அண்ணனின் வாழ்வோ அவரின் சாவின் பின்னும் அவரின் ஆற்றலில், அவரின் தத்துவார்த்த அறிவில், அவரின் ராஜதந்திர அணுகுமுறைகளில் இன்றும், என்றும் ஒளிவீசி நிலை பெற்றுவிட்டது.விடுதலைப் போர் தோல்விகளின் விளிம்புக்குள் தள்ளப்பட்ட போதெல்லாம் அவரின் ராஜதந்திரக் காய் நகர்த்தல்கள் தோள் கொடுத்து போரை வெற்றியின் பக்கம் திருப்பி விட்டன. சர்வதேச முகவர்களாலும், அந்நிய புலனாய்வுப் பிரிவுகளாலும் எமது போராட்டம் திசைதிருப்ப முற்பட்ட போதுகளிலும், படுகுழியில் வீழ்த்தப்பட முனைந்த போதுகளிலும் இரும்புச் சுவராக எழுந்து நின்று பாதுகாத்தவர் பாலா அண்ணன். சிறீலங்கா அரசுடனான ஆறு சுற்றுப் பேச்சுக்களையும் மெல்ல மெல்ல தனது சாதுரியத்தால் அவர் எமது இலக்கை நோக்கி நகர்த்தியமை அவரின் ஆற்றலின் மகத்துவம்.

சரியான பாதையில் பயணித்துச் செல்லும் சாரத்தியம் அவரிடம் உண்டு என்பது உண்மை தான்.

ஆனால் - காலம் அதுவரை காத்திருக்கவில்லை! காலனை அனுப்பி அவரைக் கவர்ந்து கொண்டது.ஒரு விடுதலைப் போராட்டத்திற்கு பல பக்கங்கள் உண்டு. ஒன்று தந்திரோயப் பிரச்சினை மற்றையது யுத்த தந்திரப் பிரச்சினை. யுத்த தந்திரம் எவ்வளவு தான் ஆற்றல் வாய்ந்ததாகவும் வலிமை கொண்டதாகவும் இருந்தாலும் தந்திரோபாயம் பலவீனமடைந்தால் முழுப் போராட்டமும் பாரிய பின்னடைவை எதிர்கொள்ளவேண்டிவரும்.

இது உலக வரலாறு கற்றுத்தரும் பாடம்.

எமது தந்திரோபாயங்களை வகுப்பதில் பாலா அண்ணரின் பங்கு ஒப்பற்றது. நாம் பல நெருக்கடிகளை நீந்திக்கடப்பதில் எமக்குத் தலையைக் கொடுத்தார் என்றால் மிகையாகாது.

எமக்கும் எதிரிகளுக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளைக் கையாள்வது. எமது பலவீனங்களையே பலமாக மாற்றுவது. சர்வதேச விவகாரங்கள் ஊடாக எமது போராட்டத்துக்கு ஊறுவிளைவிக்கப்படாமல் விடயங்களைக் கையாள்வது போன்ற விடயங்களில் அவரின் ஆற்றல் மிகுந்த வழி நடத்தல் எமது போராட்டத்தை வெற்றியை நோ்ககி முன்னகர்த்தியமையை எவரும் மறந்துவிட முடியாது.

குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவிய முரண்பாட்டைப் பயன்படுத்தி இந்திய இராணுவத்தை எமது மண்ணைவிட்டு வெளியேறும் ஒரு நிலையை உருவாக்கியது ஒரு பெரும் இராஜதந்திர வெற்றியாகும். இதில் பாலா அண்ணரின் பங்கும் அளப்பரியது.

எம்மைப் பயங்கரவாதிகளாகப் பிரகடனம் செய்த மேற்குலகம், இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை இடம்பெற்ற காலத்தில் சிங்கள இனவாத அதிகார பீடத்தின் வி்ட்டுக்கொடுக்காத ஒடுக்குமுறைப் போக்கை உணரும் வகையில் பாலா அண்ணன் மிக லாவகமாக அதைக் கையாண்டார்.

சிங்களம் பலவிமான சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவும் எமது விடுதலைப் போராட்டத்தின் வீச்சுக் காரணமாகவும் படியிறங்கி வருவதற்கான ஒரு சூழல் தோன்றிய போது ஏற்பட்ட ஆட்சி மாற்றம் துரதிஷ்டவசமானதே. அத்துடன் சமாதான மேசையில் பாலா அண்ணின் பங்கும் இல்லாமல் போனது!

பேச்சுக்கள் முறிவடைந்தன! மீண்டும் போர் தொடங்கியது.

2009 மே 19இல் எமது ஆயுதப் போராட்டம் முடக்கப்பட்டது.

ஆனால் எந்தவொரு விடுதலைப் போராட்டமும், அழிக்கப்பட்டதாக வரலாறு இல்லை! தோற்கடிக்கப்பட்டது வழிமுறைதான்! போராட்டம் அல்ல!

பாலா அண்ணன் இப்போ எம்மிடம் இல்லை என்பது உண்மை தான். ஆனால் அவரின் அற்புதமான வழிகாட்டல் விடுதலை கிடைக்கும் வரை எமது போராட்டத்தை நெறிப்படுத்தும்.

“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”
*****************************************************************************
"தேசியத்தின் குரல்" கலாநிதி அன்டன் பாலசிங்கம் 7ம் ஆண்டு வீரவணக்கம்

கடந்த மூன்று தசாப்த காலத்திற்க்கு மேலாக தமிழீழ போராட்ட வளர்ச்சிக்கும் அரசியல் இராஜதந்திர நகர்வுக்கும் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்றதோடு, ஒரு மூத்த அரசியல் போராளியாக, ஒரு மதியுரைஞராக, ஒரு தத்துவாசிரியராகவும் திகழ்ந்துள்ளார்.

ஈழத்தமிழன் பெருமைகொள்ளும் வகையில் அரசியல் உலகிலும் இராஜதந்திர உலகிலும் அளப்பெரும் சாதனைகள் புரிந்து தேசசுதந்திரப் போராட்டத்தை உலக அரங்கில் முன்னிறுத்தியவர். 14-12-2006 அன்று சுகவீனம் காரணமாக இங்கிலாந்தில் சாவடைந்தார்.

தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு - தேசத்தின் குரல தேசியத் தலைவரின் அறிக்கை

உலகமெங்கும் ஒலித்த எம் தேசக்குரல்

ஈழமக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த பாலா அண்ணா என எல்லோராலும் அழைக்கப்படும் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 7ம் ஆண்டு நினைவு

தமிழர்களின் வரலாறும், தமிழ் மக்களும் சிங்களப் பேரினவாதத்தினால் படிப்படியாக அழித்து ஒழிக்கப்பட்டுக்கொண்டிருந்த வேளைகளில், அதை எதிர்த்து நின்று போராடும் எம் தேசத் தலைவன் திரு. வே. பிரபாகரனுக்குப் பக்க பலமாக நின்று, தன்னையும் ஒரு கெரில்லாப் போராளியாக மாற்றித் தன் வாழ்நாளின் நீண்டகாலப் பகுதியை எம் தேசவிடுதலைக்காக அர்ப்பணித்து, எமது ஈழவிடுதலைப் பயணத்தின் நேர்மையை உலகின் திசைகளெங்கும் கொண்டு சென்று, ஈழமக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த பாலா அண்ணாவை எமது தேசியத் தலைவர் அவர்கள் ‘தேசத்தின் குரல்’ எனும் உயர் கௌரவப் பட்டத்தை வழங்கி, அகவணக்கம் செலுத்தி நான்கு ஆண்டுகள் நிறைவுபெறும் இத்தருணத்தில் தேசக் குரல் பாலா அண்ணாவின் நினைவிலென்றும் உலகத் தமிழினம் மூழ்கித் தவிக்கின்றது.

அனைத்துலகம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக ஏற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சரித்திர நாயகனாக உறுதியுடன் நின்று எதிர்த்தரப்பினரைக் கதிகலங்க வைக்குமளவிற்கு, அவர் போராட்ட நீதி தவறாது நடந்து கொண்டார் என்றால் அது மிகையாகாது.

மதியுரைஞராக, அரசியல் ஆலோசகராக, போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்த கெரில்லா போராளியாகத் திகழ்ந்த பாலா அண்ணன் உலகத் தமிழர்களில் மிளிர்கின்ற முத்தாக இன்றும் மிளிர்ந்து கொண்டிருக்கின்றார். தமிழர் வாழ்வுரிமைக்கான சகலவிதமான நியாயப்பாடுகள் இருந்தும் சிங்கள, இந்திய மற்றும் உலக வல்லாதிக்கங்களின் விதவிதமான நகர்வுகள், அழுத்தங்கள,; ராஜதந்திர வலைப்பின்னல்கள,; திரைமறை சித்து வேலைகள் என அனைத்தையுமே பலவித நெருக்கடிகளுக்குள்ளும் கடுமையான காலங்களிலெல்லாம் நிதானத்தோடு செயற்பட்டுத் தலைவரின் மதிநுட்பச் செயற்பாடுகளுக்குப் பக்ககலமாய் வலம் வந்த அற்புத மனிதர்தான் எங்கள் பாலா அண்ணா. அவரிடமிருந்த அரசியல் விஞ்ஞான அறிவு, மொழி ஆளுமை என்பன அனைத்துலகத்தையே கவர்ந்த மிக முக்கியமான குணாம்சங்களாக இன்றளவும் நினைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

எமது தேச விடுதலையை நெஞ்சில் சுமந்தவாறு தனது கொடிய நோயையும் பொருட்படுத்தாது விடுதலையொன்றே எமது மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தருமென்று அரசியலில் இராஜதந்திரத்துடன் வீறுநடை போட்ட எமது தேசக் குரல், கொடிய புற்று நோயினால் இப்பூவுலகை விட்டுப் பிரிந்தார்.

இவரைப்பற்றி வார்த்தைகளால் வடிக்க எம்முன்னே வார்த்தைகள் போதாதுள்ளது. கடுமையான போராட்ட சூழல்களிலெல்லாம் தனது துணைவியாருடன் மண்ணின் விடுதலைக்காக உழைத்துச் அனைத்துலகமெங்கும் மண்ணின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த எங்கள் பாலா அண்ணா மரணம் வரையிலும் மண்ணுக்காக உழைத்த மாமனிதர். அவரின் இலட்சியக் கனவான தமிழீழக் கனவை நனவாக்கப் ‘போராட்ட வடிவங்கள் மாறினாலும் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை’’ எனும் தலைவரின் கூற்றிற்கிணங்க எமது இலக்கு நோக்கிய பயணத்தை உறுதியுடன் தொடருவோம்.
******************************************
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’


Photo 
Photo
Photo

{ 1 comments... read them below or add one }

  1. Emperor Casino Review - Shootercasino
    The Emperor Casino Review for 2021 includes: Games, Features, 카지노 Payments, Support, Games and Games. 제왕카지노 Online casino gaming 바카라 사이트 was released in 2019.

    பதிலளிநீக்கு

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -