தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

sri lanka arny checkpoint யாழில் 45 பேர் கடத்தப்பட்டனர்: முறைப்பாடு செய்யக் கூடாது எனவும் எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் தமது நடவடிக்கைகளை அண்மைக் காலத்தில் தீவிரப்படுத்தியுள்ள பின்னணியில், கடந்த சில தினங்களில் மட்டும் 45 பேர் கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

 இந்த நடவடிக்கைகள் தொடர்ந்துகொண்டிருப்பதால் குடாநாட்டில் அச்ச நிலை தொடர்கின்றது. கடத்தப்படுபவர்கள் பற்றி முறைப்பாடு எதுவும் செய்யக் கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் மனித உரிமைகள் பணியகத்தில் முறைப்பாடு எதனையும் செய்யக்கூடாது என பாதுகாப்புத் தரப்பினர் கடுமையாக உத்தரவிட்டுள்ளதால், பல முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவில்லை.

 இதனால், உண்மையில் கடத்திச் செல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதனைவிடவும் அதிகமானதாக இருக்கும் என மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவிகள் பலர் தொலைபேசி மூலமாக வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள். வவுனியாவிலிருந்து தொலைபேசி மூலமாக மட்டுமே விசாரணைகளுக்கு வருமாறு இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகின்றது.

 இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் எதுவும் தெரிவிக்கப்படுவதில்லை.

இது தொடர்பாக தகவல்கள் எதனையும் வெளியே தெரிவிக்கக்கூடாது என மாணவிகள் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் எச்சரிக்கப்படுவதால், பெரும்பாலான மாணவிகள் தமது பெற்றோருடன் எவருக்கும் தகவல் தெரிவிக்காமல் நேரடியாக வவுனியாவுக்குச் சென்று திரும்புவதாகவும் தெரிகின்றது.

 வவுனியாவிலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பணியகம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷவின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் செயற்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அண்மைக்காலத்தில் இவ்வாறான கடத்தல் சம்பவங்கள் பெரும்பாலும் நள்ளிரவு வேளையில் அல்லது அதிகாலை வேளையிலேயே இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 இவ்வாறு கடத்தப்படுபவர்களில் பெரும்பாலானவர்களின் குடும்பங்கள் அச்சம் காரணமாக அது தொடர்பில் மனித உரிமைகள் செயலகத்தில் அது தொடர்பில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துகொள்வதில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -