தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

sampanthan326696 சம்பந்தனின் துரோகத்திற்கு கூட்டமைப்புக்குள் இருந்து தேசியம் பேசி துரோகமிழைக்கும் சதிகாரர்கள்.

சொந்தங்களை சிறைகளில் விட்டுவிட்டு தமிழர் ஏங்கிக்கொண்டிருந்தபோது, உலகமே இனி தமிழருக்கு எதிர்காலம் இல்லை என முற்றுப்புள்ளியிட்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில்,
அத்தனை அழிவுகளையும், இழிவுகளையும் தாண்டி தமிழ் மக்கள் தமது அரசியல் எதிர்காலத்தை நீட்டிக்கும் வல்லமையினை யாருக்கு கொடுத்தார்களோ, அவர்கள் இன்று அந்த நம்பிக்கையை ஏளனம் செய்வதுபோன்றும், மக்களுடைய நம்பிக்கைகளை ஊதாசீனம் செய்வது போன்றும் செயற்படத்தொடங்கியுள்ளனர்.

அண்மையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன் பாராளுமன்றில் ஆற்றியிருந்த ஒரு உரை உலகத்திமிழர்கள் மத்தியில் மீண்டுமொரு தடவை பலத்த விமர்சனங்களை கிளப்பி விட்டிருப்பது மட்டுமன்றி அவர்களை கடுமையாக ஆத்திரப்படுத்தவும் செய்திருக்கின்றது. சம்பந்தன் அவர்கள் பாதுகாப்பு அமைச்சின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு வடக்கு கிழக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக வெளியேற்ற வேண்டியதில்லை, படைக்குறைப்பை மேற்கொண்டு, படைகளை அவர்களது முகாம்களுக்குள் முடக்கினால்போதும்,; என்றும் குறிப்பிட்டதுடன், விடுதலைப்புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பென்றும், கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் மேற்படி கருதுக்களை தன்னுடைய தனிப்பட்ட நிலைப்பாடாக அன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக அந்த சபையில் பதிவு செய்து கொள்ளவிரும்புவதாகவும் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார். எனவே இவரது கருத்தை இலகுவாக யாரும் அவரது தனிப்பட்ட கருத்து என்றோ அல்லது “அது பற்றி சம்பந்தன் ஐயாவிடம் தான் கேட்க வேண்டும்” என்றோ கூறுவதன் மூலம் திரு.சம்பந்தன் அவர்களது கருத்தினால் தமிழ் அரசியலுக்கு ஏற்பட்டுள்ள அடுத்த அழிவில் இருந்து மீள்வதற்கு எந்த வகையிலும் உதவப் போவதில்லை.
இந்நிலையில் இரா.சம்பந்தன் இந்த கருத்து நிலைப்பாட்டை என்ன அடிப்படையில் நின்று பேசியிருக்கின்றார் என்பதை நாம் இங்கு பேசுவது சாலப்பொருத்தமானதாக இருக்கும். தனது அரசியல் வாழ்க்கையே தமிழ் மக்களை ஏமாற்றித்தான் தொடங்கியது என்பது அவரே பல தடவை ஒப்புக் கொண்ட விடயம்.
தானோ அல்லது தமிழ் மக்களோ ஒருபோதும் தனித் தமிழீழத்தை கோரியதில்லை என பல தடவைகள் முழங்கும் சம்பந்தன் அவர்கள் முதன் முதலில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டி போட்டு வெற்றியும் பெற்றது 1977ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ஆகும். இத் தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி இதே தமிழ் மக்களிடம் தனித் தமிழீழத்திற்கான ஆணையை கோரியதும், அதற்கு தமிழ் மக்கள் வழங்கிய ஆதரவு என்பதும் அரசியல் கத்துக்குட்டிகள் கூட மறுக்கமுடியாத உண்மை.
இவ்வாறு ஆரம்பமாகிய இவரது போலிச் சுய(இந்திய)நல அரசியல் வாழ்க்கை காலச்சக்கர ஓட்டத்தில் பின்னணியில் தமிழீழ விடுதலைப் போரை காட்டிக் கொடுத்த துரோகியாகவும் தற்போது தமிழ் இனத்தினை வழிநடத்தும் தலைவனாகவும் மாறி இருக்கின்றது.
தன்னை புலிகள் சுடப்படவேண்டியவர்கள் பட்டியலில் வைத்திருந்ததாக குறிப்பிடும் சம்பந்தர் அது எதற்காக என்பதை மறந்திருக்கின்றார். 1977ம் ஆண்டு தமிழீழத்திற்கான ஆதரவை கோரி மக்களிடம் ஆதரவினை பெற்றுவிட்டு, தமிழீழத்திற்கான யாப்பை எழுதுவதற்கான அரசியல் நிர்ணய சபையினை உருவாக்கத் தவறியதுடன், தமிழீழத் தனியரசுக்கான அங்கீகாரத்தை பெறக்கூடிய ஜனநாயக வழியிலான போராட்டங்களையும் முன்னெடுக்காமை மட்டுமன்றி அதற்கு நேரெதிராக செயற்படத் தொடங்கியமை மற்றும் அந்த தமிழீழ சிந்தனையினை இளைஞர்கள் கையிலெடுத்தபோது அதற்கு துரோகமிழைக்கும் வகையில் செயற்பட்டமைதான் என்பதை மறுக்கவேண்டாம்.
தமிழீழ விடுதலைப்போராட்டம் பல தியாகங்களை ஏற்று பல நெருப்பாறுகளைக் கடந்து கொண்டிருந்த காலத்தில் சந்திரிக்காவின் செல்லப்பிள்ளையாக துள்ளி விளையாடியவர்தான் இந்த சம்பந்தன் இவர் சுற்றித்திரிந்து நீலனுடன் சேர்ந்து இனத்தைக் காட்டிக் கொடுக்க சந்திரிகாவின் குண்டு துழைக்காத கார் வேறு இவருக்கு பரிசு
இதன் பின்னர் புலிகள் ஆனையிறவை வீழ்த்தி, கட்டுநாயக்கா விமான நிலையத்தினை சிதைத்து போரியல் வரலாற்றில் பல திருப்பங்களை ஏற்படுத்தியதன் பின்னரே இவர் புலிகளின் பாதங்களில் சரணடைந்து கொண்டிருந்தார். இப்போது புலிகள் தன்னை சுடப்படுவோர் பட்டியலில் வைத்திருந்ததாக கூறும் இந்த சிங்ககொடி சீமான் அன்று இதை ஏன் கூறவில்லை.
புலிகள் அழிக்கப்படுவதற்கு இந்தியாவினதும், இலங்கை அரசாங்கத்தினதும் ஆசீர்வாதத்துடன், அரியாசனம் ஏறியிருக்கும் இவர் தமிழினத்தை படிப்படியாக துகிலுரித்து வருகின்றார். இவ்வருட முற்பகுதியில் சர்வதேச விசாரணை என்ற ஒளிக்கீற்று ஜெனீவா கூட்டத் தொடரில் தெரிந்தபோது தமிழினம் ஆவலாக எதிர்பார்த்திருக்க 47 நாடுகளுக்கும் கடிதம் எழுதி ராஐபக்சவை சா்வதேச விசாரணை நெருக்கடியில் இருந்து பாதுகாத்ததுடன் தமிழா்களுக்கு கிடைத்த அரிய சந்தற்பத்தை காலால் எட்டி உதைத்தவர்.
முன்னாள் போராளிகள் இலங்கை அரசாங்கத்தினால் புனா்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கும் செயற்காடுகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதாக ஆங்கில ஊடகங்களுக்கு இரண்டு தடவை செவ்வி வழங்கி முன்னாள் போராளிகள் மீதான் கொடுமைகளை மூடிமறைத்தவா்.
பின்னர் சிங்கக்கொடி அசைத்து தமிழ் தேசிய இனத்தின் தனித்துவத்தை கைவிட்டு , சிங்கக் கொடியை தமிழா்கள் படிப்படியாக ஏற்றுக் கொள்ள தயார் என்றும் பிரகடனம் செய்தவா்.
மாகாணசபைக்குள் மண்டியிட்டு தமிழனத்தின் அரசிலையே முடக்கினார்.
இத்துடன் இவரது வெறி அடங்கவில்லைப் போலும். தற்போது போராட்டத்தை பயங்கரவாதம் என்று குறிப்பிடுகின்றார். போராடியது யார்? எங்கள் ஒவ்வொருவரினதும் அக்கா, அண்ணா, தங்கை, தம்பி, அப்பா, அம்மா, மச்சாள், தானே!
அப்போ போராடிய நாமனைவரும் பயங்கரவாதிகள். சம்மந்தரையும் அவருக்கு ஆலவட்டம் வீசும் சிலரையும் தவிர, பச்சை ஆக்கிரமிப்புக்களிலிருந்தும் சிங்களவரின் கொடிய ஒடுக்குமுறையிலிருந்தும் எம்மைப்பாதுகாத்தது இந்த விடுதலைப் போராட்டமே என்பதை தமிழ் மக்களே ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இது யாவரும் அறிந்த உண்மை.
இன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதிகள் என பிடிக்கப்பட்டுள்ளார்கள் இவரது கருத்தின் படி யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கூட பயங்கரவாதிகளா? இந்தப் பயங்கரவாதிகளுக்காக ஏன் இவரது தலைமயிலான கூட்டமைப்பு போராட்டம் நடத்துகின்றது? மக்களை ஏமாற்றி வாக்குப்பறிக்கவா? தமிழில் ஒரு பழமொழி உண்டு படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில் என்று,
அதற்கு தப்பாமல் இருக்கிறது கூட்டமைப்பு.
இவர் இராணுவம் வெளியேற கூடாது என்பதற்கு காரணம் இராணுவம் இல்லாவிட்டால் தன்னையும் தனது போலிக் கூட்டத்தையும் மக்கள் துரத்தி விடுவார்கள் என்பதாலாகும். சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு 2010 ற்குப் பின்னர் துரோகங்களைச் செய்யும்போது கூட்டமைப்புத் தலைமையின் துரோகள்ளை மூடிமறைத்து மக்களை ஏமாற்றி மக்களது ஆதரவை தொடா்ந்தும் கூட்டமைப்புக்குப் பின்னால் வைத்துக்கொள்வதற்காக அதிகம் பிரயத்தனம் செய்பவராக பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் செயற்பட்டுவருகின்றார்.
இவர் தன்னையொரு தேசியவாதியாக காட்டிக்கொண்டு, கூட்டமைப்மையின் தலைபின் துரோகங்களை மூடிமறைக்கும் ஓர் முகத்திரையாக இருக்கிறார்.
இவர் இதனை தெரிந்தே செய்கின்றார். உண்மையில் தமிழினத்தை பொறுத்தவரையில் மிக ஆபத்தான நபர் இந்த சிறீதரன் தான் என்பதை மக்கள் தெளிவாக புரிந்துகொண்டாக வேண்டும்.
கடந்த மார்ச் மாத ஜெனீவா கூட்டத் தொடரின்போது இலங்கை அரசை காப்பாற்றுவதற்காக சம்பந்தன் 47 நாட்டிற்கும் கடிதம் எழுதியதனையும், கூட்டமைப்பு ஜெனீவா செல்லாமல் விட்டதையும் நியாபப்படுத்தியி்ருந்தார்.
சம்பந்தன் சிங்கக் கொடி பிடித்தபோது, அவர் தான் பிடிப்பது சிங்கக் கொடிதான் என்று தெரியாமல் பிடித்து விட்டார் என்று கூறி துரோகத்தை மறைக்க முயன்றார்.
அண்மையில் சம்பந்தன் பாராளுமன்றத்தில் ஆற்றி உரை பற்றி சீரிஆர் கனடா வானொலி இவரிடம் கேள்வி கேட்டபோது அது பற்றி சம்பந்தன் ஐயாவிடம்தான் கேட்க வேண்டும் என்று கூறி்யுள்ளார். இவரிடம் யாழ்ப்பாணத்தில் உள்ள சில ஊடக நண்பர்கள் கேள்வி கேட்டபோது சம்பந்தன் பாராளுமன்றத்தில் பேசியது அவரது சிறப்புரிமை சம்பந்தபட்ட விடயம் அதற்கு தாஙகள் பதிலளிக்க முடியாதது என்று கூறியுள்ளார். அப்படியென்றால் நீங்களும் ஓா் பாராளுமன்ற உறுப்பினர் ஏன் அவரது உரைக்கு பாராளுமன்றில் நீங்கள் மறுத்து பதிலளிக்கவில்லை என்று கேட்டபோது அசடுவழிய நின்றாராம்.
சிறீதரன் அவா்கள் சம்பந்தனின் துரோகத்தை மறைக்கும் செயல்களில் தொடர்ந்தும் ஈடுபடக்கூடாது என்று விநயமாகக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.
சிறீதரனின் கபடத்தனத்துக்கு மேலம் ஓர் உதாரணத்தை கட்டாயம் கூற வேண்டும். அண்மையில் பல்கலைக்கழக மாணவர்களினது விடுதலையினை வலியுறுத்தி4-12-2012 அன்ற யாழ்.நகரில் போராட்டம் ஒன்று நடைபெற்றது. அப்போராட்டம் முடிவடைந்த பின்னா் அதேதினம் மாலையில்அந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த 6 கட்சிகளதும் தலைவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் கூடி மாணவா்களது விடுதலை தொடா்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பேச்சு நடாத்தியிருந்தனர்.
மாணவர்களை விடுவிக்கக்கோரும் போராட்டங்களை ஒருகட்சி மட்டுமல்லாது அனைத்துக் கட்சிகளும் சேர்ந்தே செய்யவேண்டும் என்பதே அக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நோக்கமாகவிருந்தது. அதுவே அவர்கள் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கலந்தாலோசனை நடத்தியமைக்குக் காரணமாகும். அப்போதுதான் இப்போராட்டங்களின் உண்மையான நோக்கம் அடையப்படும் என்ற எண்ணத்தில் அனைத்துக் கட்சியினரையும் தமது அலுவலகத்திற்கு அழைத்து இப்போராட்டங்களை கூட்டாக நடத்துவது பற்றி ஆலோசித்தனர்.
இக்கூட்டத்தில் 6 கட்சிகளை சார்ந்த முக்கியஸ்த்தர்களான த.தே.கூ வைச் சேர்ந்த மாவை சேனாதிராசா, சிறீதரன், சுரேஸ்பிறேமச்சந்திரன், சிவாஜிலிங்கம், ஐனநாயக மக்கள் முன்னணியை சேர்ந்த பாஸ்கரா, நவ சம சமாயக் கட்சியை சேர்ந்த ஐனகன், மகேந்திரன், புதிய ஐனநாயக மாக்சிச லெனினிச கட்சியை சேர்ந்த தணிகாசலம், செல்வம் கதிர்காமநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார், கஜேந்திரன், மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு அடுத்தகட்டம் செய்யவேண்டிய போராட்டங்கள் எவ்வாறு அமையவேண்டும் என்பது குறித்தும் ஆராயப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் அன்றய தினம் சில முக்கிய பொது அமைப்புக்களை சந்தித்து மாணவர் விடுதலை தொடர்பாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசுவது என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. மீண்டும் மறுநாள் காலை 11.00 மணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் சந்தித்து பேசுவது என்றும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறீதரன் அவசர அலுவல் காரணமாக கொழும்பு சென்றுள்ளார். மாவை சேனாதிராசாவோ அவசர அலுவல் காரமாண செல்வதாக கூறிவிடடு சென்றுள்ளார்.
தொடர்ந்து ஏனையவர்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது நவசசமாஜ கட்சியின் ஜனகன் அவர்கள் தமது கட்சி எதிர்வரும் 10ம் திகதி உலக மனிதவுரிமைகள் நாளில் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்றை நடத்த ஏற்கனவே முடிவெடுத்திருந்தமை பற்றி பிரஸ்தாபித்ததுடன், அவரது கட்சியை சார்ந்த மகேந்திரன் சிறீதரன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு எதிர்வரும் 10ம் திகதி மனித உரிமைகள் தினத்தன்று கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்த தமது கட்சி ஏற்கனவே முடிவெடுத்துள்ளது என்பது பற்றி கூறி அதற்கு அவரது ஆதரவை கோரியிருக்கின்றனர். அதற்கு இணங்கிய சிறீதரன் தான் 500 பொது மக்களை அங்கு அழைத்துவர ஏற்பாடு செய்வதாகக் வாக்குறுதியளித்திருக்கின்றார்.
இக்கலந்துரையாடல் முடிவடைந்த பின்னர் தமிழரசுக் கட்சியினர் தவிர ஏனையவர்கள் பொது அமைப்புக்களது பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர்;. மாவை யாழ்ப்பாணத்தில் இருந்தபோதும் அச்சந்திப்பில் கலந்துகொள்வதனை தவிர்த்திருந்தார்.
மறுநாள் 5-12-2012 திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் மீண்டும் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நவசமசமாயக் கட்சியினை சார்ந்த ஐனகன், மகேந்திரன், மற்றும் ஐனநாயக மக்கள் முன்னணியை சார்ந்த பாஸ்கரா ஆகியோர் மேற்படி கலந்துரையாடலின் முக்கியத்துவத்தை விளங்கி 4ம் திகதி மாலை கொழும்பு திரும்ப வேண்டியவர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கி 5ம் திகதி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். மேலும் கூட்டமைப்பு சார்பில் சுரேஸ் பிறேமச்சந்திரன், ரெலோ சார்பில் சிவாஜிலிங்கம் புதிய ஐனநாயக மாக்சிச லெனினிச கட்சி சார்பில் தணிகாசலம், செல்வம் கதிர்காமநாதன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார், கஜேந்திரன், மணிவண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். வட்டுக்கோட்டையில் திறப்புவிழா ஒன்றிற்குச் சென்றிருந்த மாவை சோனாதிராசா கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லையாம். அதே நிகழ்வுக்குச் சென்றிருந்த சுரேஸ் எம்பி கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலின்போது நவசசமாஜ கட்சியின் ஜனகன் அவர்கள் தமது கட்சி எதிர்வரும் 10ம் திகதி உலக மனிதவுரிமைகள் நாளில் கிளிநொச்சியில் நடத்தவுள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதுடன், அவரது கோரிக்கையினை அங்கிருந்த கட்சிகளைச் சார்ந்தவர்கள்; ஏற்றுக் கொண்டதுடன் அனைவரும் இணைந்து போராட்டத்தை நாடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த இடத்தில் இருந்து மீண்டும் சிறீதரன் அவர்களுடன் மகேந்திரன் தொடர்பு கொண்டபோது சிறீதரன் இந்தப்போராட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்ததோடு. போராட்டத்திற்கு 500வரையான பொதுமக்களை அழைத்து வருவேன் என்றும், போராட்டத்திற்கான ஒழுங்குகளை செய்ய வேறு ஒரு நபரை அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார் என்றும் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் 14ம் திகதி வவுனியாவில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்துவதென்றும் அதற்கான ஏற்பாட்டினை சுரேஸ்பிறேமச்சந்திரன் மேற்கொள்வார் என்றும் இணங்கக் கொள்ளப்பட்டது. மேலும் 7-12-2012 அன்று கொழும்பு நிப்போன் ஹோட்டலில் அனைவரும் இணைந்து பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை, நடத்துவது என்றும், அம்மாநாட்டை “பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு” என்ற பெயரில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து நாடத்துவது என்றும்மேற்படி போராட்டங்கள் பற்றி அறிவிப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் 7-12-2012 அன்று விக்கிரமபாககுகருணாரட்ண தலைமையில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் எல்லாக்கட்சிகளும் கூட்டாக 10ம் திகதி கிளிநொச்சி போராட்டம் பற்றியும் 14ம் திகதி வவுனியா போராட்டம் பற்றியும் உத்தியோக பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். ஆனால் அப்பத்திரிகையாளர் மாநாட்டிற்கு தமிழரசுகட்சி உறுப்பினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
8ம் திகதி ஏற்பாட்டாளா்களுடன் தொடா்புகொண்ட சிறீதரன் தன்னுடன் கலந்துபேசாமல் கிளிநொச்சிப் போராட்டத்தை அறிவித்துள்ளீா்கள் அதேதினம் பிரதேசசபை மண்டபத்தினுள் தான் ஓா் மனித உரிமைகள் தொடா்பான கலந்துரையாடல் ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளதாகவும் எனவே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை பிற்போடுமாறும் கோரியிருக்கின்றார். எனினும் உலக மனித உரிமைகள் தினத்தன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை எக்காரணம் கொண்டும் பிற்போட முடியாது என்று ஏற்பாட்டாளர்களான நவசமசமாயக் கட்சியினரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரும் தெரிவித்துள்ளனா்.
எனினும் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றபோது கிளிநொச்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறீதரன் போராட்டத்திற்கு வருகைதராததுடன் மட்டு மல்லாமல் போராட்டத்திற்கு வந்திருந்த பெருமளவு மக்களை 1மணி நேரத்தில் விடுவதாகக் கூறி பிரதேச சபை மண்டபத்தினுள் அழைத்துக்கொண்டு சென்றுவிட்டார். இதனால் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொள்ளும் நிலை தடுக்கப்பட்டது.
இந்நிலையில் கனடா நாட்டிலுள்ள தமிழ் வானொலி ஒன்றுக்கு அண்மையில் சிறீதரன் வழங்கியிருந்த செவ்வியொன்றில்; போராட்டத்தில் தான் கலந்துகொள்ளாமைக்கான காரணம் தமக்கு அழைப்பு கிடைக்கவில்லை என்றும், அதனால் தான் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்றும், தெற்கிலிருந்தும், யாழ்;ப்பாணத்திலிருந்தும் வந்த சில அரசியல் வாதிகள் தமது அரசியல் லாபத்திற்காக கத்திவிட்டுச் சென்றுள்ளனர் என்றும் இப்போராட்டத்தை கொச்சைப்படுத்தியதுடன், போராட்டங்கள் ஒற்றுமையாக நடைபெறவேண்டும் என்றும் கட்சிகள் இணையவேண்டும் என்றும் கூறி ஒற்றுமை பற்றி முதலைக்கண்ணீர் வடித்துள்ளார்.
வெளிப்படையாக இவரது பேச்சைப் பார்த்தவர்களுக்கு இவரது திருகுதாளம் புரிந்திருக்க வாய்ப்பில்லை காரணம் நடந்த உண்மை அவர்களுக்குத் தெரியாது. 500பேருடன் போராட்டத்திற்கு வருகிறேன் என கூறி நம்பிக்கையினை ஏற்படுத்தி இறுதியில் இந்தப்போராட்டத்தை குழப்பியதன் நோக்கம் கிளிநொச்சியில் தன்னை ஓர் குறுநில மன்னனாக கருதும் இவர் தன்னை மீறி இன்னொருவர் அங்கு போராட்டம் நடத்தக் கூடாது என்பதா? தெற்கிலிருந்தும், யாழ்;ப்பாணத்திலிருந்தும் வந்த சிலரே அரசியல் லாபத்திற்காக கத்தினர் என்றால் உண்மையில் அரசிற்கு எதிராக தமிழ் மக்கள் மனித உரிமைக் தினத்தில் எதிர்ப்பில் ஈடுபடவில்லை என்று சர்வதேச சமூகத்திற்கு கூற முற்படுகின்றாரா? என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ஓற்றுமை பற்றி வாய்கிழிய கத்திய இவர் ஒன்றை மறந்து விட்டார் அதாவது ,இப் போராட்டங்களை கூட்டாக இணைந்து ஒற்றுமையாக செய்யவேண்டும் என்று இம்மாதம் 4ம், 5ம் திகதிகளில் த.தே.ம.மு இன் அலுவலகத்தில் 6 கட்சிகள் இணைந்து எட்டப்பட்ட முடிவிற்கு மாறாக எந்த கட்சியினருடனும் ஆலோசிக்காமல் எதிர்வரும் 21-12-2012 அன்று உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தப்போவதாக எதேச்சையாக அறிவித்தார். இவா் அந்த அறிவிப்பை செய்தபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேமச்சந்திரன் அவா்கள் யாழ்ப்பாணத்தில் இருபாலையில் உள்ள இவரது இல்லத்தில் இருந்தார் என்னது குறிப்பிடத்தக்கது. எனினும் அவருடன் இப்போராட்ட அறிவிப்புப் பற்றி எந்தக்கருத்தும் பேசப்படவில்லை. அதேபோன்று தமிழ் தேசிய மக்கள் முன்னிணியருடனும் எந்தக் கருத்தும் பேசப்படவில்லை என்று அறிய முடிந்தது. எனவே இவரது ஒற்றுமைக்கோசம் எங்கே போயிருக்கின்றது?
அரசியல் லாபத்திற்காக போராட்டம் நடத்துவதாக கூறும் சிறீதரன் தமது செயற்பாடுகள் பற்றி சற்றும் சிந்திக்க மறந்திருக்கின்றார், த.தே.ம.மு இனால் முல்லைத்தீவில் போராட்டம் அறிவிக்கப்பட்டபோது சிறீதரன் போட்டியாகப் போராட்ட அறிவிப்புக்களை வெளியிட்டார். யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் அறிவித்தபோதும் கூட்டமைப்பு போட்டி அறிவிப்பை வெளியிட்டது. வெறும் 40பேருடன் போராட்டங்கள் நடைபெறுவதாக கேலி செய்யும் சிறீதரன் கூட்டமைப்பில்;; 14பாராளுமன்ற உறுப்பினர்கள், 200ற்கும் மேற்பட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் இருப்பதையும் மறந்துவிட்டார் போலும். ஏனெனில் வடக்கில் நடைபெற்ற எந்தவொரு போராட்டத்திலும் இவர்கள் பங்குபற்றியதுமில்லை, அவற்றை வெற்றிகொள்ளச் செய்ததும் இல்லை. போராட்டங்களுக்கு வரும் சில பாராளுமன்ற உறுப்பினர்களும் விருந்தினர்கள்போல் வந்து புகைப்படங்களுக்கு முகம் கொடுக்கிறார்கள். அத்துடன் தமிழ்தேசியத்திற்கான அவர்களது பணி நிறைவடைகின்றது.
சம்பந்தன் சிறீதரன் போன்ற பிரகிருதிகள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும் மக்கள் உண்மைகளை உணரும்போது அவர்களின் உணர்வுகள் இவர்களைத் தவிடு பொடியாக்கி விடும். இப்பிரகிருதிகள் தமிழ்த் தேசிய அரசியலிலிருந்து அகற்றப்படும் போதுதான் தமிழர் அரசியல் வெற்றியை நோக்கி நடைபோடும். தமிழ்த் தேசியவாத அரசியல் இளைய தலைமுறையின் கரங்களுக்கு இப்பிரகிருதிகளிடமிருந்து மாற்றப்படவேண்டும் இல்லையேல் தமிழினத்தின் அழிவை தடுக்கமுடியாது என்பதே உண்மை.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -