தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

மகா கஞ்சனான நம்ம‌ நாராயணசாமி சாகும் தருவாயில் இருந்தார்.

அப்போது தன மூத்த மகனைக் கூப்பிட்டு,''என்னைஎப்படி அடக்கம் செய்யப் போகிறாய்?'' என்று கேட்டார்.

மூத்த மகன்,'சந்தனப் பேழையில் வைத்து அடக்கம் செய்வேன்,''என்றான்.

இருந்த சக்தியெல்லாம் திரட்டி ஒரு அறை கொடுத்தார் தந்தை மகனுக்கு. ''ஏண்டா,நான் சேர்த்து வைத்ததையெல்லாம் அநியாயமாகக் காலி செய்து விடுவாய் போலிருக்கே,''என்றவர்,

அடுத்த மகனைக் கூப்பிட்டு அதே கேள்வியைக் கேட்டார்.அவன் சொன்னான்,''சாதாக் கள்ளிப் பலகையில் அடக்கம் செய்வேன்,''

தந்தை கோபத்துடன்,''கள்ளிப் பெட்டியை ஏன் வீண் செலவு செய்ய வேண்டும்?ஒரு நாள் அடுப்பெரிக்க உதவுமே.நீயும் சரியில்லை.''என்றார்.

மூன்றாம் மகன் அதே கேள்விக்குப் பதில் சொன்னான்,''அப்பா,நீ இறந்தவுடன் உன் உடல் உறுப்புக்களை ஏதாவது ஒரு டாக்டரிடம் விற்று விடுவேன்.''

தந்தை மகிழ்ச்சியுடன் சொன்னார்,

''சபாஷ்,நீதான் சரியானபையன்.ஆனால் ஒன்று.என்உறுப்புக்களை மேலத் தெருவில் இருக்கும் டாக்டரிடம் விற்று விடாதே.மனுஷன் உடனே பணம் தராது இழுத்தடிப்பான்.''
 

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -