- Back to Home »
- வரலாறு »
- மதுரை தமுக்கம் திடலின் வாயிலில் உள்ள தமிழன்னை சிற்பம்.
Posted by : தமிழ் வேங்கை

சேர, சோழ, பாண்டியர்களான
மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில் அவர்களின்
சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை
தமிழ்த்தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில்
பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாய்
நான்கு கைகளுடன் தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கின்றாள்.வல முன் கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உருத்திராட்ச மாலையும், கீழ் இடக்கையில் சுவடியும் இடம்பெற்றுள்ளன. தமிழ்த்தாயின் வலக் கால் கீழே தொங்கியவாறும், இடக்கால் மடித்த நிலையிலும் தமிழன்னை சுகாசனமாக வீற்றிருக்கிறாள். தமிழ்த்தாயின் கால்களைச் சிலம்பும், தண்டையும் அணி செய்கின்றன. "நடராச மூர்த்திக்குப் பிறகு இம்மூர்த்தியே பல்லாற்றானும் கலை, தத்துவம், விஞ்ஞானம் ஆகிய மூன்றின் கருத்துச் செறிவும் உடையது.