தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை




ஒரு அரசனுக்கு ஒரு நாள் திடீர் என மூட்டு வலி ஏற்பட்டது! தாங்க முடியாத வழியால் துடித்தான்! உடனே அரண்மனை வைத்தியருக்கு தகவல் சென்றது! வைத்தியர் வந்து பார்த்துவிட்டு, "இதற்கு பொடுதலையை அறுத்து வந்து கசக்கி கட்டினால் சரியாகப்போய் விடும். நான் சென்று பொடுதலையை அரிந்து வருகிறேன்" என்று சொல்லி
சென்றார்! வழியில் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அரசருக்கு தகவல் அனுப்பிவிட்டு வெளியூர் சென்று விட்டார்! 

அரசனுக்கு இரண்டாம் நாள் மிக வேதனை! உடனே பணியாளை அழைத்து பொடுதலை அரிந்து கொண்டு வா என்று சொல்லி இருக்கிறான்! பணியாளுக்கு பொடுதலை என்றால் என்ன என்று புரியவில்லை! அங்கிருந்த ஓரிருவரும் விழித்தனர்! உடனே அரசன் தமிழ் பண்டிதனை அழைத்து வா என்று ஆணையிட உடனே தமிழ் பண்டிதன் அழைத்து வரப்பட்டான்! 

அவனிடம் பொடுதலையை பற்றி விசாரிக்க பண்டிதனோ அகராதியை புரட்டிப்பார்த்து விட்டு "மன்னா! அகராதியில் பொடுதலை என்றால் முழு சொட்டைத்தலை என்று போட்டு இருக்கிறது. அதைதான் வைத்தியர் அறுத்து வந்து கசக்கி கட்டினால் சரியாகப்போய் விடும் என்று சொல்லி உள்ளார்! ஒரு சொட்டைத்தலையனை பிடித்து வந்து அவன் தலையை அறுத்து உரலில் இட்டு கசக்கி தங்கள் காலில் கட்டினால் சரியாக போய் விடும்! " என்று சொன்னான்!

உடனே மன்னன் முழு சொட்டையுடன் ஒருவனை பிடித்து வர உத்திரவிட பணியாளர்களும் அலைந்து ஒருத்தனை பிடித்துக்கொண்டு வந்து விட்டனர்!

அரசனோ "அவன் தலையை அரிந்து கசக்கி கொண்டு வாருங்கள் " என்று உத்திரவிட்டான்! சொட்டைத்தலையன் கலங்கிபோய் கதற தொடங்கிவிட்டான்! அவன் கதற கதற பணியாட்கள் அவனை இழுத்துக்கொண்டு சென்றனர்!

அப்போது வைத்தியர் உள்ளே நுழைந்தார்! பணியாட்களை விசாரிக்க நடந்ததை சொன்னார்கள்!

வைத்தியருக்கு அதிர்ச்சி! அவனை விடுவித்து தன்னுடன் அழைத்துக்கொண்டு அரசனை பார்க்க வந்தான்! அரசனிடம் தான் கொண்டுவந்த பச்சிலையை காட்டி "அரசே! பொடுதலை என்பது ஒருவகை பச்சிலை! இதை அரிந்து வந்து கசக்கி கட்டுவதாக தான் சொன்னேன் ! இதுதான் மூட்டுவலிக்கு மருந்து! சொட்டைத்தலை அல்ல!" என்றார்!

அரசன் தன் தவறை உணர்ந்து அந்த மனிதனுக்கு பொற்காசுகள் கொடுத்து அனுப்பினான்!

நீதி

(1) அரைகுறையிடம் அறிவுரை கேட்காதே!
(2) சொல்றவன் என்ன வேணும்னாலும் சொல்வான்! கேட்கிறவன் கேனயனா இருந்தா இப்படி தான் நடக்கும்!

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -