- Back to Home »
- தமிழகம் »
- குடிகாரர்களை அருவருப்பாக பார்க்கும் சமுதாயம்
Posted by : தமிழ் வேங்கை

எனக்கு தெரிந்து "குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு"என்று சொல்லி விட்டு அதை விற்கின்ற ஒரே சமுதாயமும் உலகத்திலேயே இது ஒன்றுதான்.எங்கள் வீட்டை விடுங்கள். அது எப்படி போனால் உங்களுக்கு என்ன கவலை? ஆனால் நாட்டுக்கு கேடு என்றால் அதை ஏன் விற்க வேண்டும்? மற்ற நாடுகளில் இப்படி இல்லை. நல்ல தரமான மது கிடைக்கின்றது. இங்கு உள்ள கடைகளில் யாரும் "குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு" என்று யாரும் எழுதி வைப்பதில்லை. "Drink Responsible" என்றுதான் எழுதி வைக்கின்றார்கள். குடிப்பவர்களையும் இங்கு யாரும் கேவலமாக பார்ப்பதில்லை.
குடியை எந்த காலத்திலும் எப்பேர்பட்ட கொம்பனாலும் ஒழிக்கவே முடியாது. வேண்டுமானால் தரமான மதுவையும், தரமான கடைகளையும் திறக்க சொல்லி போராடுங்கள். குடிக்கும் இடங்களில் சுகாதாரமான கழிவறைகளை ஆண்,பெண் இருபாலாருக்கும் தனித்தனியாக கட்டி கொடுக்க வேண்டும். நல்ல பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும். ஓவராக குடித்து விட்டு தனியாக வண்டி ஒட்டுபவர்களது டிரைவிங் லைசன்ஸ் மூன்று ஆண்டுகளுக்கு கேன்சல் செய்ய வேண்டும்.மதுக்கடைகளில் விற்கப்படும் உணவு பொருட்களை இந்திய உணவு கட்டுப்பாடு கழகம் பரிசோதிக்க வேண்டும். "Liquor Zone" , "Liquor Free Zone" என்று ஊருக்குள் தனித்தனி பகுதிகள் அமைக்கப்பட வேண்டும்.இது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராடுங்கள்.
குடியை ஒழிப்பதை விட குடியையும், குடிகாரர்களது வாழ்க்கையையும் தரப்படுத்த பாருங்கள். ஏனென்றால் நீங்கள் யாருக்கும் சும்மா ஊத்திக் கொடுக்கவில்லை. எங்கள் பணத்தை வாங்கிக் கொண்டுதான் சரக்கை விற்கின்றீர்கள்.