தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை



தமிழீழத் தேசியக்கொடிக்கு பிரித்தானியாவில் தடை தடை என்று சில சிங்கள அரசின் கைக்கூலிகள்  தொலைக்காட்சிகளில் புலம் பெயர் தமிழர்களை உளவியல் ரீதியாக பாதிப்பை ஏற்படுத்த முனைகின்றார்கள். இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் தேவையற்றது. ஆனாலும் அந்த சிங்கள அரசின் கைக்கூலிகள் அடையாளம் காட்டிய தொலைக்காட்சிக்கு நன்றிகள்.


தேசியக் கொடிக்கு தடை ஆகவே அதை பிடிக்கக்கூடாது என்பதே சிலரது வாதம் சிலரது வாதம்தானே பிறகு ஏன் கவணத்தில் கொள்ள வேண்டும் என கேட்கலாம் என்ன செய்வது அந்த சிலர்தானே சில பல பொறுப்புகள் வகிக்கின்றார்கள் ஆகவேதான் பதில் கூறுகின்றோம்.

தேசியக் கொடிக்கு தடை என்பது சிலரது வாதம் தேசியக் கொடி கொண்டு போராடினால் காரியம் நடக்காது என்பது சிலரது வாதம் ஆனால் அந்த சிலர் இரண்டு வாதங்களையுமே முன்வைக்கின்றார்கள்.

ஏன் தேசியக் கொடியை விடு என்கின்றார்கள்?  உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லையாம் அதனால் விட்டுவிடுங்கள் என கூறும் அவர்கள்தான் உலக நாடுகள் அங்கீகரிக்க மறுக்கும் தமிழீழத்தை பெற போராடுகிறார்களாம் இதை சிறந்த நகைச்சுவையில் சொல்வதானால் என்ன கொடுமை சரவணா இதுஎன்றதான் சொல்ல வேண்டும்.

எந்த ஒரு நாடும் இப்படிப்பட் முட்டாள்களுக்குச் சொல்லவில்லை தமிழீழம் அமைக்க  உதவி செய்வோம் என்று. பேச்சுவார்த்தைக்கு சொல்லும் அனைத்து தமிழ் அமைப்பு பிரதிநிகளுக்கு உலகம் சொல்வது தனி நாட்டுக் கோரிக்கையை கைவிடுங்கள் என்பதுதான் தேசியக் கொடியை கைவிடு என கூறும் இந்த முட்டாள்கள் நாளை தமிழீழத்தையும் கைவிடு என்றதான் கடைசியாக கூறுவார்கள்.

உங்கள் நெஞ்சுக்கு நீதி என்று ஒரு விடயம் தென்பட்டால் அதை மாற்றான் விட்டுவிடு என மிரட்டினாலே அல்லது தந்திரமான போக்கால் கேட்டுக்கொண்டான் என்கின்ற போக்கில் நீங்கள் விட்டுவிட்டால் உங்களுக்குப் பெயர்தான் அடிமை.

நீங்கள் அடிமையா இல்லையா என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

சீனாவில் மாவோவின் செங்கொடிக்காகவே இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்படார்கள். செங்கொடிளை கண்டால் மறு பேச்சுக்கு இடமில்லை கொல் என்பதே அரசாங்க உத்தரவு. சிகரங்கள் போல் பிணங்கள் குவிந்த போதும் செங்கொடி மட்டும் இறங்கவே இல்லை. இறுதியாக உலகை ஆட்டிப்படைக்கும் நாடாக சீனா உயர அந்த செங்கொடியே காரணமாக அமைந்தது இது வரலாறு.

இனி மிக முக்கியமான செய்திக்கு வருவோம்.

பிரித்தானியாவில் தேசியக்கொடிக்கு தடை இல்லை என்பது சட்டரீதியான உண்மை அந்த உறுதியை பரமேஸ்வரன் தேசியக்கொடியை அங்கீகரிக்கக் கோரி நடந்த ஒரு மாத கால ஆராய்ச்சியில் பிரித்தானியாவில் மிகவும் புகழ்பெற்ற சட்டத்தாரணிகள் குழு உறுதி செய்து அறிக்கை வழங்கியுள்ளது.

பிரித்தானியாவின் அதிகாரங்களுக்கு உட்பட்ட வேல்ஸ்,ஸ்கொட்லாண்ட் மற்றும் நோதர்ன் அயர்லாந்து என எந்த பகுதியிலும் தமிழர்களின் தேசியக் கொடிக்கு தடை ஏதும் இல்லை என்பதும் தேசியக் கொடி வைத்திருந்தால் கைதுசெய்து தண்டனைக்கு உட்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

ஆனால்  போராட்டங்களில் காவல்த்துறையும் ஆதரவு தரவேண்டுமானால் தேசியக் கொடியை  அனைத்துவிதமான போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் முன்னிலைப்படுத் வேண்டும் என்பதோடு தமிழர் அமைப்புக்கள் ஊடாக அதை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் சட்டத்தாரணிகள் குழுவினரால் சிறந்த யோசனைகளும் முன்வைக்கப்பட்டது.

பிரித்தானியாவின் உத்தியோகப்பூர்வ தொலைக்காட்சியான பி.பி.சி இக்கொடியுடன் இலட்சக்கணக்கில் மக்கள் திரண்டதாக அறிவித்ததோடு அக்கொடியை பரமேஸ்வரன் தாங்கி நின்று இது தமிழர்களின் தேசியக்  கொடி என்று சொல்லும் வார்தைகளையும் ஒளிபரப்பியதோடு தமிழீழ விடுதலைக்காக போராடி மடிந்த மாவீரர்களை மக்கள் இலட்சக்கணக்கில் திரண்டு வந்து வீரவணக்கம் செய்கிறார்கள் என கூறியதோடு அந்த நாள் தமிழர்களுக்கு மிக முக்கியமான நாள் எனவும் கூறியது.

இது பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட கொடி என்றால் அதை கண்டிப்பாக பி.பி.சி குறிப்பிட்டிருக்கும். தடைசெய்யப்பட்ட கொடியை ஒருவர் தாங்கி நிற்பதை பிரித்தானியாவின் தேசிய ஊடகம் ஒளிபரப்பி இருக்காது. அப்படி பிரச்சனை அது குற்றம் என்றால் பரமேஸ்வரன் இன்று சிறையில்தான் இருக்க வேண்டும்.

ஆனால் சிங்கள அரசின் கைக்கூலிகள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் அமர்ந்துகொண்டு புலிகள் வேறு மக்கள் வேறு இது தமிழர்களின் கொடி அல்ல என வாதிடுகின்றார்கள்.

மாபெரும் ஊடகங்களே மாவீரர்களுக்காகத்தான் மக்கள் வருகின்றார்கள் என்கிறார்கள் மாவீரர்நாள்  புலிகளுக்கு முக்கியமான நாள் என கூறவில்லை தமிழர்களுக்கு முக்கியமான நாள் என்றே கூறுகின்றது. யார் கூற வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அவர்களே ஒப்புக்கொள்ளும் பொழுது இந்த கைக்கூலிகளுக்கு இடமளித்து நடுநிலைவகிக்கின்றோம் என ஊடகங்கள் கூறுவது மிகவும் தவறு.

தமிழீழத் தேசியக் கொடிக்கு பிரித்தானியாவில் சட்டரீதியான தடைகள் ஏதுவும் இல்லை இது நிரூபிக்கப்பட்ட உண்மை.

புறப்படுவோம் சீறிப்பாயும் புலியுடனான தேசியக்கொடியுடன் விடுதலையை நோக்கி……


.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -