- Back to Home »
- ஈழம் »
- விடுதலைப்புலிகள் ஒழுக்கமானவர்கள் ஜ.நா அறிக்கை – ஏற்கமாட்டோம் என்கிறது சிங்களம்
Posted by : தமிழ் வேங்கை

தமிழீழ விடுதலைப்புலிகளைச்
சுதந்திரப் போராளிகள் என்றும் உலகத்திலேயே ஒழுக்கமானவர்கள் என்றும் தெரிவித்துள்ள
ஐ.நா. நிபுணர் குழுவின் தருஸ்மன் அறிக்கையை நாம் எப்படி ஏற்றுக்கொள்வது? இப்படி அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல நேற்று கேள்வி எழுப்பினார்.
அமைச்சரவை முடிவுகளை வெளியிடும்
செய்தியாளர் மாநாடு நேற்றுக் காலை தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில்
நடைபெற்றது. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை தொடர்பான அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை
என்ன என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில்
அளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார்.
நிபுணர் குழுவின் அறிக்கையின் 8ஆம் பக்கத்தில் புலிகள் சுதந்திரப் போராளிகள், உலகிலேயே
மிக ஒழுக்கமானவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட அறிக்கையை தமது
அரசு ஏற்காது என மற்றுமொறு பேட்டியில் பீரிஸ் கூறியுள்ளார்.
மேலும் அறிக்கைய ஏற்காததால்
போராட்டங்கள் எதுவும் தீவிரமாக நடத்தப்போவதில்லை எனவும் தெரிவித்தார். ஆனால்
புலனாய்வு அறிக்கையே போராட்டம் நடத்தினால் அரசு நினைக்கு அளவு வெற்றிபெறாது என
தெரிவித்துள்தாலேயே வீரியமான போராட்டங்கள் இல்லையென பீரிஸ் தெரிவத்துள்ளார்.
தமிழர்களின் விடிவிற்காக போராடிய
தமிழீழ விடுதலைப்புலிகளின் பண்புகளை ஜ.நா அறிக்கை பராட்டியுள்ளதை தமிழ் மக்கள்
ஆகிய நாம் ஜ.நாவின் இச் சொல்லை வரவேற்பதோடு தமிழீழ விடுதலைப்புலிகளின் நற்குணங்களை
உலகிற்கு உணர்தும் செயலை பாராட்டுகின்றோம்.
2.
The Liberation Tigers of Tamil Eelam (LTTE)
31. As repression of Tamils intensified after the
1983 communal riots, the Tamil community became increasingly militarized and
the number and ranks of militant groups swelled, taking advantage of the
conducive environment for training and organizing in Tamil Nadu. The LTTE began as a Tamil liberation movement and eventually
became the most disciplined and most nationalist of the Tamil militant groups, emerging as the dominant force espousing a separatist
agenda in the mid-1980s.