- Back to Home »
- கவிதை »
- ந.பிரகாஷ்சுப்பையா வின் இப்படிக்கு மிருகங்கள்......
Posted by : தமிழ் வேங்கை
இயற்கை எங்கள் மதம்
காட்டாறு எங்கள் கடவுள்
மண் எங்கள் தாய்
மழை எங்கள் தந்தை
தென்றல் என் மனைவி
பறவைகள் எம் குழந்தைகள்
புல் பூண்டு காய் கனிகளே உணவு
மூலிகைகளின் மகத்துவம்
அவைகள் தரும் மருத்துவம்.....
சூரிய ஒளியின் ஆட்சியில்
சூழ்ச்சிகள் ஏதுமில்லை
அரசியல் வியாதிகளும் இல்லை
ஆனால் இட ஒதுக்கீடு உண்டு
மரங்கள் அனைத்தும் உயர் சாதி
செடி கொடிகள் பிற்படுத்தப்பட்டவை
பிளாஸ்டிக் தீண்டத்தகாதவை
நாங்கள் மண்ணின் மைந்தர்கள்
மனிதர்கள்..?? மானங்கெட்டவர்கள்....
இயற்கை தான் எங்கள் மதம்
இங்கு தேவையில்லை உங்கள் பணம்....
இப்படிக்கு மிருகங்கள்....

காட்டாறு எங்கள் கடவுள்
மண் எங்கள் தாய்
மழை எங்கள் தந்தை
தென்றல் என் மனைவி
பறவைகள் எம் குழந்தைகள்
புல் பூண்டு காய் கனிகளே உணவு
மூலிகைகளின் மகத்துவம்
அவைகள் தரும் மருத்துவம்.....