தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!

கடந்த 18 மாதங்களுக்கு முன்பு, கடல்வழியே பிரிட்டனுக்கு வந்த தமிழர்கள் மீது, தேவையான ஆவணங்கள் இன்றி வந்ததாக கைது செய்த போலீசார் லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் நீதிமன்றம் அவர்கள் நாடுகடத்தபடவேண்டும் என்று அப்போதே உத்தரவிட்டுவிட்டது.

இதை எதிர்த்து அங்குள்ள மனித உரிமை அமைப்புகளின் துணையுடன் தமிழர்கள் சிலர் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டின் மீதான வழக்கு, நேற்று நீதிபதி விக்கி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து நேற்றே தீர்ப்பையும் வழங்கினார் நீதிபதி விக்கி. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.

அந்தத் தீர்ப்பில், "இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மோசமான கொடுமைகள் நடத்தப்படுவதாக அவர்கள் கூறுகிறார்கள். இதைப் புறக்கணிக்க முடியாது. மேலும் இலங்கையின் நிலைமையைப் பார்க்கிறபோது, அவர்களை அங்கு திருப்பி அனுப்புவதும் முறையல்ல. மனிதாபிமான அடிப்படையில், அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது. தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைவருக்கும் அகதிகளாக, பிரிட்டனில் வாழ முழு உரிமை உள்ளது.

தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து, இங்கு முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும். போதுமான ஆவணம் இன்றி இருந்தவர்கள் நாடு கடத்தப்படவேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கிறேன். அவர்கள் தொடர்ந்து இங்கேயே இருக்கலாம். பிரிட்டன் வரலாற்றிலேயே, இத்தகைய தீர்ப்பு வருவது இதுவே முதல்முறை என்பதை இந்த நீதிமன்றம் நம்புகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: ஒன் இந்தியா.


.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -