தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

புலிகள் மீது ஏனிந்தக் கோபம்?
எதிரிகள் போல ஏனிந்தப் பார்வை?
நாடிழந்து போனது உங்களுக்கு 
மட்டுமா வருத்தம்?

முள்ளிவாய்க்காளில் விடுதலைப் படகு 
மூழ்கிப் போன வருத்தத்தில்
தூங்காத வேங்கைகளே அதிகமென அறிக.

அன்று
கண்ணீர் வழிய நடந்தவர் கையில்
காணியுறுதியாவது இருந்தது.
பலர் இயலக்கூடியதை 
எடுத்தும் வந்தோம்.

ஆனால் துயிலும்மில்லத்தைக் தூக்கி 
வர முடியவில்லையே என்று
துயரத்தில் துடித்தபோராளிகளின் 
துன்பத்தை யாரவது உணர்ந்தீர்களா 

புலிகளின் படை பலமே 
தாய் நிலத்தை காக்குமென 
தலைவன் எத்தனை முறை சொன்னாலும் 
எவர்தான் கருத்திலேடுத்தோம் 

போராட்டம் என்பது வெறும்
பூப்பறிக்கும் வேலையென்றே
காலாட்டிக் கொண்டிருந்தோம்.

எல்லோரும் சேர்ந்து 
சுமக்க வேண்டிய பெரும் சுமையை 
ஓரிரண்டு போராளிகளின் தோள்களில் 
எப்படிச் சுமத்தலாம்?

என் குடும்பத்தில் எவரும் குறையாது
கொண்டு வா விடுதலையை நீ 
என்பது குற்றமல்லவா?

எல்லா தவறையும் நாம் 
அனைவரும் சேர்ந்து செய்து விட்டு 
போராளிகளை மட்டும் குறை கூறுவது 
எந்த விதத்தில் நியாயம் 

தமிழா திருந்து 
தமிழீழம் ஒன்றே 
இந்த வலிகளுக்கெல்லாம் 
மருந்து ...!
 

-@ஈழமைந்தன்-

புலிகள் மீது ஏனிந்தக் கோபம்?
எதிரிகள் போல ஏனிந்தப் பார்வை?
நாடிழந்து போனது உங்களுக்கு 
மட்டுமா வருத்தம்?

முள்ளிவாய்க்காளில் விடுதலைப் படகு 
மூழ்கிப் போன வருத்தத்தில்
தூங்காத வேங்கைகளே அதிகமென அறிக.

அன்று
கண்ணீர் வழிய நடந்தவர் கையில்
காணியுறுதியாவது இருந்தது.
பலர் இயலக்கூடியதை 
எடுத்தும் வந்தோம்.

ஆனால் துயிலும்மில்லத்தைக் தூக்கி 
வர முடியவில்லையே என்று
துயரத்தில் துடித்தபோராளிகளின் 
துன்பத்தை யாரவது உணர்ந்தீர்களா 

புலிகளின் படை பலமே 
தாய் நிலத்தை காக்குமென 
தலைவன் எத்தனை முறை சொன்னாலும் 
எவர்தான் கருத்திலேடுத்தோம் 

போராட்டம் என்பது வெறும்
பூப்பறிக்கும் வேலையென்றே
காலாட்டிக் கொண்டிருந்தோம்.

எல்லோரும் சேர்ந்து 
சுமக்க வேண்டிய பெரும் சுமையை 
ஓரிரண்டு போராளிகளின் தோள்களில் 
எப்படிச் சுமத்தலாம்?

என் குடும்பத்தில் எவரும் குறையாது
கொண்டு வா விடுதலையை நீ 
என்பது குற்றமல்லவா?

எல்லா தவறையும் நாம் 
அனைவரும் சேர்ந்து செய்து விட்டு 
போராளிகளை மட்டும் குறை கூறுவது 
எந்த விதத்தில் நியாயம் 

தமிழா திருந்து 
தமிழீழம் ஒன்றே 
இந்த வலிகளுக்கெல்லாம் 
மருந்து ...!

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -