- Back to Home »
- ஈழம் »
- எம்மினதலைவன்...இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வீரன்.
Posted by : தமிழ் வேங்கை
பாலச்சந்திரனின் புகைப்படங்கள் வெளியாகியதை
தொடர்ந்து சிங்கள கைக்கூலிகள் திட்டமிட்டு சனத்தின் உளவியலை உடைக்கும் வேலையில்
இறங்கியிருக்கிறார்கள் போல் தெரிகிறது. திரும்ப திரும்ப ஒரே கேள்விகளுடன் எம்மை
பலர் அணுகுகிறார்கள். அதில் ஒன்று "தலைவரை பிடித்து கொலை
செய்திருப்பார்கள்" என்பது..
இதற்கு தர்க்கரீதியாக
ஆதாரங்களுடன் எல்லாம் விளக்கம் எழுதி முடிந்துவிட்டது.சரி ஒரு தர்க்கத்திற்கு தலைவர் நிராயுபாணியாக சிங்களப்படைகளின் முன் போய் நின்றார் என்று வைத்துக்கொள்வோம். யாராவது கிட்ட வந்திருப்பாங்கள் என்று நினைக்கிறீர்களா? தலைதெறிச்சு ஓடியிருப்பாங்கள். தமிழ் சினிமாவில் காட்டுற மாதிரி முழு இராணுவத்தினரும் மூத்திரம்தான் பெய்திருப்பார்கள்.
ஏனென்றால் அவர் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய வீரன். உலக வல்லரசுகளே பிரமிப்பாகப் பார்த்த ஒரு போராளி. அவரை அன்று அல்ல என்றுமே ஒரு சிங்கள இராணுவ வீரனால் நேருக்கு நேர் நின்று அவரது கண்ணைப் பார்க்க முடியாது. பிறகு எப்படி கிட்ட வாறது..? கொல்லுறது.?
" மகிந்தராஜபக்ச நேரில் பார்த்த பிறகுதான் கொல்லப்பட்டாராம்" இது ஒருவரின் சந்தேகம்.. அது உண்மையாயின் நாம் மகிந்தவின் நாலாவது ஆண்டு நினைவு நாளை கொண்டாடிக்கொண்டிருப்போம். ஏனென்றால் பார்த்த மாத்திரத்திலேயே தலைவரின் தோற்றமும் அவரது கண்ணில் பற்றியெரியும் விடுதலை தீயும் எல்லாவற்றிற்கும் மேலாக கொண்ட கொள்ளைக்கு உறுதியாக எங்கும் தப்பியோடாது அந்த மண்ணில் அந்த மக்களோடு நின்ற நேர்மையும் மகிந்தவை பொசுக்கியிருக்கும்.
புலேந்திரன், பால்ராஜ், சூசை என்று புலிகளின் தளபதிகளின் பெயரை கேட்ட மாத்திரத்திலேயே சிங்கள இராணுவத்தினர் சிறுநீர் கழித்த வரலாறு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு எப்படி தலைவரை எதிர் கொள்வார்கள்?
இது குறித்த ஒரு சிறு பதிவு ஒன்று..
ஆனையிறவை மீட்பதற்காக குடாரப்பில் தரையிறங்கிய பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான அணிகள் ஊடறுத்து இத்தாவிலில் நிலையெடுத்தன. 34 நாட்கள், சிங்கள் இராணுவத்தின் முழுப் படையணியும் அதாவது நாம் போர்க்குற்றவாளிகள் என்று சொல்கிற சரத்பொன்சேகா, சவீந்திர சில்வா, பாலச்சந்திரனை கொன்ற கமால்குணரட்ண என்று முழுத்தளபதிகளும் களமுனையில் நின்றனர். போதாததற்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் கீரின்பரேட் இராணுவத்தினரின் வழிநடத்தல் - இந்திய தளபதிகளின் இரகசிய ஆலோசனை வேறு. கிட்டத்தட்ட உள்ளும் வெளியுமாக 75000 படையினர்.
ஒரே ஒரு பால்ராஜ் சில நூறு போராளிகளுடன் தலைவரின் வழிநடத்தலுடன் 34 நாட்கள். "எல்லாரும் சேர்ந்து தமிழனை புடுங்கிப்பாருங்கோடா" என்று உறுதியுடன் நின்றனர். வரலாற்றை அந்த மண்ணில் எழுதியது புலிச்சேனை. சிங்களத்தை மட்டுமல்ல அமெரிக்காவையும் அதிர வைத்தது புலிச்சேனை ( அதுதான் எம்மை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று அமெரிக்கா முடிவெடுத்த நாளும் கூட. )
பால்ராஜ் களத்தில் நிற்கிறார் என்ற கேட்ட மாத்திரத்திலேயே பாதி இராணுவத்தினர் ஓடத்தலைப்பட்டுவிட்டார்கள்.
இதுதான் சிங்கள இராணுவத்தின் நிலை. பிறகு எப்படி தலைவரை இவங்கள் கண் கொண்டு பார்க்கிறது?
மேற்குலகம் குறிப்பாக அமெரிக்கா இந்தியாவின் துணையுடன் எம்மை அழித்ததுதான் வரலாறு. அதற்கு கருவியாக சிங்களம் இருந்ததே உண்மை.
எம்மை எல்லா விதத்திலும் நெருக்கி பல்லுப்புடுங்கிய பாம்புகளாக ஆக்கியது மேற்குலகம்தான். இவர்கள் தலையிடாவிட்டால் சிங்களத்தால் எமது ஒரு மயிரைக்கூட புடுங்கியிருக்க முடியாது. அவ்வளவு அச்சம் புலிகள் மீது சிங்களத்திற்கு..
தலைவர் இருக்கிறாரா இல்லையா தெரியாது? ஆனால் அவரது மரணம் என்பது அவர் விரும்பும்போது மட்டுமே நிகழக்கூடிய ஒன்று.
உண்மையில் மே 17 அவர் வீரச்சாவு அடைந்திருந்தால் அது சிங்களத்தின் நிகழ்ச்சி நிரல்ப்படி அல்ல... அப்போதும் தலைவரே அதைத் தீர்மானித்திருப்பார். ஏனென்றால் அவர் தனி மனிதரல்ல ஒரு இனத்தின் வரலாறு - வழிகாட்டி.