தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

தமிழர்கள் உலகெங்கும் பல நகர்களில் ஆர்ப்பாட்டங்கள் செய்வதுண்டு அதில் பலவிதமான பதாகைகள் தாங்கிச் செல்லப்படும். அதில் 04-3-213-ம் திகதி ஜெனிவா நகரில் ஐக்கிய நாடுகள் சபையின் பணிமனைக்கு முன்னர் நடந்த பேரணியில் ஜெயலலிதாவின் படம் தாங்கிய பதாகையும் காணப்பட்டது.  
இதற்கு முன்னர் ஒரு போதும் அண்ணா
திராவிட முன்னேற்றக் கழக நாயகி ஜெயலலிதாவின் படம் இடம்பெற்றதில்லை. ஒரு மாவீரர் தின உரையில் அண்டன் பாலசிங்கம் ஜெயலலிதாவை குண்டம்மா என குறிப்பிட்டிருந்தார். தமிழிழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனக்குப் பிடித்த ஊடகவியலாளரான அப்துல் ஜபார் அவர்களுக்கு அளித்த விருந்தில் ஜெயலலிதாவைப் பற்றிச் சொல்லும் போது "அந்த மனுசிக்கு நாங்கள் என்ன பிழை விட்டனாங்கள். அவ ஏன் எங்களுக்கு எதிராகக் கதைக்கிறா?" என்று குறிப்பிட்டிருந்தார்.

2013 பெப்ரவரி மாத இறுதியில் இலண்டன் ஹரோவில் நடந்த கூட்டத்தில் உரையாற்றிய இலங்கப் பாராளமன்ற உறுப்பினர் அண்மையில் நடந்த முக்கிய மான நிகழ்வுகள் பற்றி அடுக்கிக் கொண்டு போகையில் அன்னை ஜெயலலிதா தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் என்றார்.

ஈழத் தமிழர்கள் பெரிதும் விரும்பும் வை கோபாலசுவாமி அவர்களை ஜெயலலிதா சென்று சந்தித்தார். எமது மிக விருப்பத்திற்குரிய சீமான அவர்கள் ஜெயலலிதாவிற்கு சாதகமாக பேசுவதுண்டு. மாநிலங்களவை உறுப்பினர் மைத்திரேயன்  ஆற்றிய உரை பல தமிழின உணர்வாளர்களை மகிழ்ச்சிப் படுத்தியுள்ளது. 

ஆனால் செல்வி ஜெயலலிதா ஆலோசகர் சோ!!!!!!!!!!!!!


04-03-2013 ஜெனிவா பேரணியில் காணப்பட்ட இன்னொரு மாற்றம் அங்கு அமெரிக்கக் தேசியக் கொடிகளும் தாங்கிச் செல்லப்பட்டதாகும். இதற்கு முன்னர் பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மனி, கனடா போன்ற நாடுகளின் தேசியக் கொடிகள் தாங்கிச் செல்வதுண்டு. இந்த முறைதான் முதல் தடவையாக அமெரிக்கத் தேசியக் கொடி தாங்கிச் செல்லப்பட்டது. முன்பு ஐக்கிய நாடுகள் சபையின் தேசியக் கொடி பறக்கும். இம்முறை அது இல்லை. 
அமெரிக்க இரட்டக் கோபுரத் தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்கா பன்னாட்டு ஒழுங்கை மாற்றியதும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டுவதில் முன்னின்று செயல்பட்டதும் அறிந்ததே.

யார் குத்தியும் அரிசியாகட்டும் என
யார் யாரையோ எல்லாம் நம்பி
நண்பர்களாகி கைகொடுத்தோம்
கடைசியில் குத்து விழுந்தது
எம் முதுகில்
என்றோ ஒரு நாள்
எங்கிருந்தோ
வருவான் ஒருவன்
எமக்காக அரிசி குத்த
என இன்றும் நம்பியிருக்கிறோம் 

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -