- Back to Home »
- ஈழம் »
- ஒரு தமிழ் பெண் நிருபர் விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் :
Posted by : தமிழ் வேங்கை

சந்திரிகா அம்மையாரின்
ஐந்தாண்டு கால தொடர் யுத்தம் மற்றும் நீக்குப்போக்கில்லா பொருளாதாரத்
தடையிலிருந்து எப்படி 5 லட்சம் மக்களை
புலிகள் காப்பாற்றினார்கள் ?
எல்லாமே தலைவரின் தீர்க்கதரிசனம்தான் . சந்திரிகா பாரிய
யுத்தமொன்று தொடங்குவாரென்பதும், குறைந்தபட்சம் ஐந்து
ஆண்டுகளுக்கு அந்த யுத்தம் தொடருமென்பதும் தலைவருக்குத் தெரிந்திருந்தது.
எங்களையெல்லாம் அழைத்து முதலில் அவர் கதைத்தது மக்களுக்கான உணவு
மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு பற்றித்தான். அதன்படி எங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விவ
சாயம் செய்யத் தகுதியுள்ள நிலங்களையெல்லாம் துல்லியமாகப் பட்டியலிட்டோம்.
பணப்பயிர் களை தடை செய்தோம். விதை நெல்கள் சேமித் தோம். இயற்கை உரங்களுக்குப்
பழகினோம். பூச்சிக்கொல்லிகளை இயற்கையாக எதிர்கொள் ளும் வழிகளை கற்றறிந்து
செயற்படுத்தினோம்… சொன்னால் நம்பமாட்டீர்கள் இவற்றையெல்லாம்
நாங்கள் அதிகமாக அறிந்துகொண்டது உங்கட தொலைக்காட்சியின் “வயலும்
வாழ்வும்’ நிகழ்ச்சியைக் கேட்டுத்தான்.
அதோட 5 லட்சம் சனத்துக்கும் தேவையான வைட்டமின்,
புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம்
செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகா அம்மையாரின் கொடுமை யான இரக்கமற்ற
பொருளாதாரத் தடையினை எதிர்கொண்டு வெற்றி கண்டோம்” என்றார்.
நீண்ட யுத்த காலத்தில் பஞ்சம் பட்டினியிலிருந்து மக்களைக்
காப்பதென்பது எளிதான விடயமே அல்ல. ஆனால் அதனை புலிகள் திறம்படச் செய்தார்களென்பது
வியப்புத் தந்ததென்றால் நாம் பெரிதாகப் பாராட்டாத வயலும் வாழ்வும் நிகழ்ச்சி
அவர்களுக்கு உதவியதென்பதை அவர்கள் வாயால் கேட்க சிலிர்ப்பாகத்தான் இருந்தது.
பெரும் பட்டினிச் சாவினை தவிர்க்க நமது “வயலும் வாழ்வும்’
உதவியதென்பது பெருமைதானே?
இவற்றையெல்லாம் நான் இங்கு எழுதக் காரணம் புலிகளை வன்முறையாளர்
களாகவே சித்தரித்த இந்திய ஊடகங்கள், அவர் கள் விவசாயம்,
அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை இன்னபிற துறைகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங் களிப்புகளை
திட்டமிட்டே இருட்டடிப்பு செய்ததை கோடிட்டுக் காட்டவும்தான்.
உட்கார்ந்து உரையாடும் வெகு யதார்த்தமான, சுவாரஸ்யமான
மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அப்படித் தான் இயக்கத்திலும் சமூகத்திலும் எழுந்த
பல சிக்கல்களையும், முரண்பாடுகளையும் அவர் தீர்த்து
வைத்திருப்பார் என நான் எண்ணுகிறேன்.
எல்லாமே தலைவரின் தீர்க்கதரிசனம்தான் . சந்திரிகா பாரிய யுத்தமொன்று தொடங்குவாரென்பதும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு அந்த யுத்தம் தொடருமென்பதும் தலைவருக்குத் தெரிந்திருந்தது.
அதோட 5 லட்சம் சனத்துக்கும் தேவையான வைட்டமின், புரதச் சத்து தேவைகளுக்கேற்றபடி பிற காய்கறி வகை களையும் விவசாயம் செய்ய வைத்தோம். இப்ப டித்தான் சந்திரிகா அம்மையாரின் கொடுமை யான இரக்கமற்ற பொருளாதாரத் தடையினை எதிர்கொண்டு வெற்றி கண்டோம்” என்றார்.
நீண்ட யுத்த காலத்தில் பஞ்சம் பட்டினியிலிருந்து மக்களைக் காப்பதென்பது எளிதான விடயமே அல்ல. ஆனால் அதனை புலிகள் திறம்படச் செய்தார்களென்பது வியப்புத் தந்ததென்றால் நாம் பெரிதாகப் பாராட்டாத வயலும் வாழ்வும் நிகழ்ச்சி அவர்களுக்கு உதவியதென்பதை அவர்கள் வாயால் கேட்க சிலிர்ப்பாகத்தான் இருந்தது. பெரும் பட்டினிச் சாவினை தவிர்க்க நமது “வயலும் வாழ்வும்’ உதவியதென்பது பெருமைதானே?
இவற்றையெல்லாம் நான் இங்கு எழுதக் காரணம் புலிகளை வன்முறையாளர் களாகவே சித்தரித்த இந்திய ஊடகங்கள், அவர் கள் விவசாயம், அமைப்பு நிர்வாகம், கலை- பண்பாடு, நீர்வள மேலாண்மை இன்னபிற துறைகளுக்கு ஆற்றிய அளப்பரிய பங் களிப்புகளை திட்டமிட்டே இருட்டடிப்பு செய்ததை கோடிட்டுக் காட்டவும்தான்.
உட்கார்ந்து உரையாடும் வெகு யதார்த்தமான, சுவாரஸ்யமான மனிதர் வேலுப்பிள்ளை பிரபாகரன். அப்படித் தான் இயக்கத்திலும் சமூகத்திலும் எழுந்த பல சிக்கல்களையும், முரண்பாடுகளையும் அவர் தீர்த்து வைத்திருப்பார் என நான் எண்ணுகிறேன்.