தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

               Bank of tamil eezham             
வலுவான,அறிவிக்கப்பாடாத,ஐரோப்பிய நாடுகளுக்கீடான ஒரு அரசாங்கத்தை கட்டியெழுப்பி,தமிழர்களுக்கென தன்னிறைவு கொண்ட பொருண்மியத்துடன்,அடக்குமுறை அரசான சிறிலங்காவின் எந்தவிதமான வழங்கலும் இன்றிய நிலையில் ஒரு தேசிய இனத்துக்கான சகல வரைவுகளும் பொருந்திய
ஒரு தேசத்தையும்,தேசியத்தையும் கட்டமைத்து,உலகத்தால் ஒதுக்கப்பட்ட ஒரு சிறு போராளிக்குழு,உலகவல்லாதிக்கங்களின் முழு ஒத்துழைப்போடு கூடிய ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்துக்கும்,ராணுவத்துக்கும் எதிராக ஆட்சி புரிந்தது என்பது இதுவரை நான் அறியாது.நீங்களும் அறிந்திருக்க நியாயமில்லை.ஏனெனில்,எங்கும் அவ்வாறு நடந்ததில்லை.

அவ்வாறு ஒரு பலம் பொருந்திய பெரும்பான்மை இனத்தை எல்லைகளை வரையறுத்து,நீ அங்குதான் நிக்கவேண்டும்.தாண்டினால் அடிப்பேன் என அச்சமூட்டி,தாண்டுகிற போதெல்லாம் அடித்து பெரும் போரியல் வெற்றிகளை ஈட்டிய ஒரு சிறுபான்மை இனத்தின் வலிமையுள்ள ஒரு போராளிக்குழுவாக,இந்த நூற்றாண்டின் சிறந்த கெரில்லாப்படையாகவும்,மரபுவழி இராணுவமாகவும் ஒரே நேரத்தில் விளங்கிய தமிழரின் தேசிய இராணுவமாகப் பரிணமித்த தமிழீழ விடுதலைப்புலிகள் நமது இனத்தில்,நமது மண்ணில் உலவினார்கள் என்பதுதான் நமக்கெல்லாம் இப்போதிருக்கிற ஒரே பெருமை.

இனி ஒரு காலத்தில் உலகத்தில் உள்ள பலகோடி தமிழர்கள் இணைந்தேனும் அப்படி ஒரு கட்டமைப்பை நிறுவுவார்கள் என்று நினைத்தால் அது கனவாகத்தான் இருக்கும்.

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -