தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை


என் பஞ்சுக் கைகளால் இந்த தண்டனை
எதற்கிந்த தண்டனை தெரியுமா..?!

உன் கருவறையில் உன்னை உதைத்தபோது
வெறுக்காமல் விரும்பினாயல்லவா அதற்கு,

நீ உண்ட உணவை உன் தொப்புள்கொடி மூலம்நான் களவாடியதை கண்டு மகிழ்ந்தாயல்லவா அதற்கு,

300 நாட்கள் என்னை இருட்டறையில் வைத்து
என்னை சுமந்தாயல்லவா அதற்கு,

எனக்கு இவ்வுலகம் காட்ட நீ உயிர் போகும்
வழியை அனுபவிதாயல்லவா அதற்கு,

இவ்வுலகில் நான் உண்ண உணவில்லை என
உன் உதிரத்தை உணவாகினயல்லவா அதற்கு,

உன்னை உறங்க விடாமல் நான் அழுதபோதும்
என்னை அடிக்காமல் தூக்கி உட்சிமுகர்ந்தாயல்லவா அதற்கு,

என் அர்த்தமற்ற மொழிக்கும் புது புது அர்த்தம் கொடுத்தமைக்கு,

நான் செய்யும் அனைத்தையும் ரசிக்கிராயல்லவா அதற்கு,

நான் செய்யும் தவறை மன்னித்து ரசிக்கிராயல்லவா அதற்காகத்தான்...

இத்தனை தவறை செய்த உன்னை
என் பஞ்சு கைகளால் தண்டிப்பது சரிதானே..

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -