தமிழன் மட்டுமே தமிழை மொழியாக மட்டும் அல்லாது உயிராக நேசிக்கிறான்.

Posted by : தமிழ் வேங்கை

Aatika Ashreen

அழகான உருவம் கண்டா
அசந்து போனேன்-உன்
கவி கண்டே கரைந்து போனேன்

விண்ணையும், மண்ணையும்
மின்னும் பொன்னையும்
என எதையும் விட்டு வைக்காத
கவி வரிகளிலே நான் கொஞ்சம்
காணாமல் போனேன்...

உன் வரிகளிலே எப்போதும்
வீழ்ந்து கிடக்கிறேன்..
சுவாசிக்க மறந்து
வாசிக்கிறேன்....
வாசித்து வாசித்து
நேசிக்கிறேன்...
நேசித்து நேசித்து
யோசிக்கிறேன் , உன் போல்
கவி இங்கு யாரென்று ......?

மனதை மெல்ல
வருடும்,
திருடும்,
நெருடும், கவிகளுக்கு
கதாநாயகி நீயல்லவா

உன்னிடம் கொஞ்சி,
கெஞ்சி விளையாடும்
தமிழ் மொழி கண்டே
தமிழாக நானும் திரு உருவம்
எடுக்கவே பேராசை கொண்டேன்...

படிக்க படிக்க திகட்டாத
பளிங்கு போன்ற வார்த்தைகள்
பகலவனும் படித்து ரசித்திருப்பான்
படிக்கதெரிந்திருந்தால்......!

அச்சு பிழை இன்றி
அழகாய் வார்த்தெடுத்த
கவிதைகளில்
வந்த மயக்கம்
இன்னும் தெளிந்தபாடில்லை....
அதற்குள் தனியே விட்டு
செல்வதும் தகுமோ???

முதல் நாள் பார்த்து
மறு நாள் வந்ததா ?
எழுத்தால்
கவியால் வந்த
கலையான உறவு,என்றும்
கலையாத உறவு
வார்த்தைகளால் வளர்ந்து
வண்ணமாக வீற்ற நட்பு
என்றும்,
காலத்தால் அழியாதது......

அழகான உருவம் கண்டா
அசந்து போனேன்-உன்கவி
 
கண்டே கரைந்து போனேன்

விண்ணையும், மண்ணையும்
மின்னும் பொன்னையும்
என எதையும் விட்டு வைக்காத
கவி வரிகளிலே நான் கொஞ்சம்
காணாமல் போனேன்...

உன் வரிகளிலே எப்போதும்
வீழ்ந்து கிடக்கிறேன்..
சுவாசிக்க மறந்து
வாசிக்கிறேன்....
வாசித்து வாசித்து
நேசிக்கிறேன்...
நேசித்து நேசித்து
யோசிக்கிறேன் , உன் போல்
கவி இங்கு யாரென்று ......?

மனதை மெல்ல
வருடும்,
திருடும்,
நெருடும், கவிகளுக்கு
கதாநாயகி நீயல்லவா

உன்னிடம் கொஞ்சி,
கெஞ்சி விளையாடும்
தமிழ் மொழி கண்டே
தமிழாக நானும் திரு உருவம்
எடுக்கவே பேராசை கொண்டேன்...

படிக்க படிக்க திகட்டாத
பளிங்கு போன்ற வார்த்தைகள்
பகலவனும் படித்து ரசித்திருப்பான்
படிக்கதெரிந்திருந்தால்......!

அச்சு பிழை இன்றி
அழகாய் வார்த்தெடுத்த
கவிதைகளில்
வந்த மயக்கம்
இன்னும் தெளிந்தபாடில்லை....
அதற்குள் தனியே விட்டு
செல்வதும் தகுமோ???

முதல் நாள் பார்த்து
மறு நாள் வந்ததா ?
எழுத்தால்
கவியால் வந்த
கலையான உறவு,என்றும்
கலையாத உறவு
வார்த்தைகளால் வளர்ந்து
வண்ணமாக வீற்ற நட்பு
என்றும்,
காலத்தால் அழியாதது......

.

செய்திகள்

பண்பலைவானொலி.

தமிழீழ பாடல்.

பிரபலமானவை

தமிழுக்கு அமுதென்று பெயர்,அந்த தமிழ் எங்கள் உயிர்க்கு நேர்.

என்னைப் பற்றி

எனது படம்
உழவும் .... தமிழும் .... என் இரு கண்கள்.

இடுகைகள்

- பதிப்புரிமை© தமிழ்வேங்கை- - வடிவமைப்பு 'தமிழ் வேங்கை -