- Back to Home »
- ஈழம் »
- வான்புலிகளின் பிதாமகன் கேர்ணல் சங்கர் அண்ணா .
Posted by : தமிழ் வேங்கை

அன்று ஒரு துருப்பிடித்த பழைய துப்பாக்கியின் துணையுடன்
நமது விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்த தலைவர் அவர்கள், அடுத்த முப்பது வருடங்களில் இந்த
விடுதலைப்போராட்டமானது தனக்கென்று ஒரு சொந்தமாக தரைப்படை, கடற்படை, விமானப்படை, என்ற முப்படைகளும் வைத்து இருக்கும் ஒரு மாபெரும்
இராணுவமாக
வளர்ச்சி அடையும் என்று யாரும் நினைத்துக் கூட பார்த்து இருக்க
மாட்டார்கள்.இவ்வாறு யாரும் நினைத்துக் கூட பார்த்து இருக்க முடியாத அளவுக்கு புலிகள் சொந்தமாக தமக்கென்று ஒரு விமானப்படை வைத்து இருக்கும் அளவுக்கு வளர்வதற்கு மிக முக்கிய பங்காற்றியவர் வான்புலிகளின் பிதாமகன் என்று கருதப்படும் கேர்ணல் சங்கர் அண்ணா அவர்கள்.
தலைவரின் சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்த சங்கர் அண்ணா அவர்கள் நமது போராட்டத்திற்கு ஆற்றிய பணிகள் அளப்பெரியன.
விமானம் பற்றிய தெளிவான் புரிந்துணர்வுகள், மற்றும் விளக்கங்கள் இல்லாத காலகட்டத்தில் சங்கர் அண்ணா அவர்கள் ஆரம்பத்தில் இந்தியாவில் உள்ள ஒரு விமானப் பயிற்ச்சிக் கல்லூரியில் ஆரம்ப விமானம் தொடர்பான கல்வியை முடித்த சங்கர் அண்ணா அவர்கள் பின்னர் கனடாவின் விமானப் பொறியியல் கல்லூரியில் தனது வான்படைக்கான கற்கைநெறியை நிறைவுசெய்த கேணல் சங்கர் அவர்கள் பின்னாளில் உலகமே வியந்த வான்படையணியை உருவாக்குவதில் அத்திவாரமாக இருந்தார்.
வான்புலிகளின் விமானங்களை முழுவதுமாக தமிழ்ஈழத்தினுள் எடுத்து வரமுடியாத சூழ்நிலையில் விமானகளுக்கு தேவையான பிரதான பாகங்களை மட்டும் கடற்புலிகளின் துணையுடன் எரித்திரியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு மற்றைய பாகங்கள் யாவும் சங்கர் அண்ணாவின் வழிகாட்டுதலின் கீழ் முழுக்க முழுக்க ஈழத்தில் போராளிகளினாலேயே செய்து முடிக்கபட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
வான்புலிகளின் பிரதான தளமாக இரணைமடு மற்றும் மணலாறு உட்பட எட்டிற்கும் மேற்பட்ட இடங்களில் வான்புலிகளின் தளங்களை அமைத்து வான்புலிகளை ஒரு பலமிக்க அமைப்பாக மாற்றுவதில் முக்கிய பங்காற்றிய சங்கர் அண்ணா அவர்கள் தியாகி திலீபனின் பதின்நான்காம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகளில் பங்கு பற்றுவதற்காக ஒட்டுசுட்டானிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வேளை 26-09-2001 காலை 10.45 மணிக்கு ஒட்டுசுட்டானுக்கு அண்மித்த பகுதியில், சிறீலங்காப் படைகளின் ஊடுருவல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் கேணல் சங்கர் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் விடுதலைக்காய் நாம் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.
தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுடன் உறுதுணையாக நின்று, இருபது ஆண்டுகளுக்குமேலாக தளரா உறுதியுடன், தமிழீழ விடிவே குறியாகக்கொண்டு செயற்பட்டு வந்த கேணல் சங்கர் என்னும் பெருவிருட்சம் சாய்ந்துவிட்டது. ஈழ விடுதலைக்காய் கொடுத்த மிகப் பெரிய விலைகளில் இதுவும் ஒன்று.
நமது விடுதலைப் போராட்டத்தில் என்றுமே மீள்நிரப்பப் படமுடியாத மாபெரும் வெற்றிடமாக மாறிவிட்ட சங்கர் அண்ணாவின் இழப்பினை தொடர்ந்து சங்கர் அண்ணா விட்டுச் சென்ற பணியினை தலைவர் அவர்களின் மகனான சார்ல்ஸ் அன்டனி அவர்கள் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று இலங்கையின் பல பகுதிகளில் வான்வெளி தாக்குதல்களை நடத்தி எதிரிக்கு மாபெரும் இழப்புகளை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத் தக்கது.